குரோமோசோம் பிணைவு 897
ஒவ்வொரு பாக்டீரியத்திலும் ஒன்றிரண்டு குரோமோசோம்கள் இருக்கும். இக்குரோமோசோம் வட்ட வடிவுடையது, D.N.A. யினால் ஆனது. குரோமோசோம் நூலிழை போல இருப்பதால் தாறு மாறாக மடிந்து காணப்படும். அதன் ஏதாவ தொரு பகுதி பிளாஸ்மா சவ்வில் ஒட்டிக் கொண்டிருக்கும். பிற பகுதிகள் அனைத்தும் சைட்டோபிளாசத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். நியூக்ளியச் சவ்வு (nuclear membrane) இல்லை. எனவே நியூக்ளியஸ் என்னும் அமைப்பே இல்லை; நியூக்ளியோலஸ் இல்லை. பாக்டீரியாவில் குரோமோசோம் தவிர பிளாஸ் மிட் எனப்படும் சில சிறு வளையங்கள் உண்டு. பிளாஸ்மிடில் சில ஜீன்கள் உண்டு. இதுவும் D.N.A. யால் ஆனது. குரோமோசோம்களும், பிளாஸ்மிட் களும் சேர்ந்தே தத்தம் ஜீன்களின் உதவியால் பாரம் பரியத்திலும், வளர்சிதை மாற்றத்திலும் கொள்கின்றன. குரோமோசோம் பிணைவு பங்கு -சோம. பேச்சிமுத்து பிணைக்கப்பட்டு ஒரே குரோமோசோமில் அருகருகே காணப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட ஜீன்கள் (genes) இனச்செல் தோற்றத்தின்போது (gametogenesis) தனித்தனியே பிரியாமல். ஒன்றாகப் ஒரே தொகுதியாக மரபு வழியில் அடுத்த தலைமுறைக்குச் செலுத்தப்படுவது ஜீன்களின் பிணைவு (linkage) எனப்படும். இந்நிகழ்வு 1903 ஆம் ஆண்டில் சட்டன் (sutton),1905 ஆம் ஆண்டில் பேட்சன். சான்டெர்ஸ், பன்னெட் (Bateson, Saunders, Punnet என்னும் மரபியலறிஞர்களால் கண்டறியப்பட்டாலும், 1911 ஆம் ஆண்டு டி.எச். மார்கன் (T.H. Morgan) என்னும் மரபியலறிஞரால்தான் இதன் அடிப்படைக் கொள்கைகளும், விளக்கங்களும் வெளியிடப்பட்டன. இக்கூற்றுக்காகவும். ஏனைய மரபியல் கொள்கை களுக்காகவும் அவருக்கு 1933 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. மெண்டல் (Mendel) என்னும் மரபியலறிஞரின் தனித்தொதுங்கும் கொள்கைக்கு (independent assort- ment) மாறாக இந்நிகழ்வு உள்ளது என்றார். மெண்டலின் கூற்றுப்படி இணை குரோமோசோம் களில் (homologous chromosomes) உள்ள உயிரி களின் பல்வேறு பண்புகளுக்குக் (characters) காரண மான ஜீன்கள் இனச்செல் தோற்றத்தின்போது தனித் தனியே பிரிந்து ஒதுங்கி இனச்செல்களுக்குள் செல் கின்றன. இதற்கு மாறாகச் சில ஜீன்கள் தனித் அ.க.8 57 குரோமோசோம் பிணைவு 897 தனியே பிரியாமல் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு ஒரே தொகுதியாக ஒரு தலைமுறையினின்று அடுத்த தலை முறைக்கு மரபுவழிச் செலுத்தப்படுகின்றன. சாம்பல் வண்ண உடல் நிறத்தையும் (grey body) நீண்ட சிறகுகளையும் (long wings) தோற்றுவிக்கும் ஜீன்களும், கருமையான உடலையும் (black body) மிகச்சிறிய சிறகையும் (vestigial wings) தோற்று விக்கும் ஜீன்களும், குரோசோஃபிலா மெலனோகா காஸ்டர் (Drosophila melanogaster) என்னும் பழ ஈ வகையில் ஒரு தலைமுறையினின்று அடுத்த தலை முறைக்கு இணைந்தே செல்கின்றன எனக் கண்டறியப் பட்டது. இவற்றில் சாம்பல் வண்ண உடல், நீண்ட சிறகுகள் தரும் ஜீன்கள் ஓங்குநிலை (dominant) ஜீன்களாகும். ஏனைய இரண்டும் ஒடுங்கு நிலை (recessive) ஜீன்களாகும் (படம் 1). பெற்றோரிடம் காணப்பெறும் சில பிணைக்கப் பட்டுள்ள பண்புகள், அப்படியே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தலைமுறைகளுக்குச் செலுத்தப் படும்போது அவற்றை முழுமையான ஜீன் பிணைவு (complete linkage) எனலாம். இவ்வகையில் அப்பண்பு களுக்குரிய ஜீன்கள் மிக அருகருகே அமைந்துள்ளமை யால் மரபு வழியில் இணையாகவே செலுத்தப்பட இயலும். இது அரிதாக நடைபெறுவதாகும். இனச் செல்கள் தோன்றும்போது குரோமோசோம்கள் முறிவுறாமல் குறுக்கேற்றம் (crossing over) இருக் கும்போது மட்டுமே இது நிகழும். இணை குரோமோசோம்களில் ஏற்படும் குறுக் கேற்றம் காரணமாகப் பிணைந்துள்ள ஜீன்கள் பிரிந்துவிடக்கூடும். இவ்வாறு பிரியும் ஜீன்கள் முழுமையாகப் பிணைக்கப்படாத ஜீன்கள் (incom- pletely linked genes) எனப்படும். எனவே இத்தகைய முழுமையற்ற ஜீன் பிணைவில் (incomplete linkage) பிணைவுற்ற ஜீன்கள் எப்போதும் ஒன்றாகவே ஒரு தலைமுறையினின்று அடுத்த தலைமுறைக்குச் செல்ல இயலா. இரு ஓங்குநிலை அல்லீல்கள் (Alleles) அல்லது ஒடுங்குநிலை அல்லீல்கள் பெற்றோர் ஒருவரிடமிருந்து அல்லது ஒரே குரோமோசோமிலிருந்து வரும்போது அவையிரண்டும் ஒரே இனச்செல்லில் இணைந்து பிணைவுற்ற ஜீன்களாக மரபு வழிச் செலுத்தப்படும். இது இணைப்புநிலை (coupling) எனப்படும். அவ் வாறின்றி ஜீன்களின் இரு ஓங்குநிலை அல்லது ஒடுங்குநிலை அல்லீல்கள், இருவேறு பெற்றோரிட மிருந்து வரும்போது இனச்செல் தோற்றத்தின்போது தனித்தனியே பிரியும். இது எதிர்ப்பு இதுக்க நிலை அல்லது தவிர்ப்பு ஒதுக்க நிலை (repulsion) எனப்படும். இக்கருத்துகள் பேட்சன், பன்னெட் என்னும் மரபியல் அறிஞர்களால் தெரிவிக்கப்பட்டன. பிணைவுக்குள்ளான ஜீன்கள் ஒரே குரோமோ சோமில் இருக்கும் எனவும். அருகருகேயுள்ள