குரோமோசோம் பிரியாநிலை 899
குரோமோசோம் பிரியாநிலை 899 குரோமோசோம் மிகுதியாகவோ, குறைவாகவோ அமையும். இவ்விதம், கூடுதலாக ஒரு குரோமோ சோம் உள்ள ஒரு விந்துச் செல், ஒரு சாதாரண முட்டையுடன் சேர்ந்தால் உண்டாகும் கருவினின்றும் வரும் உயிரியில் ஒரு குறிப்பிட்ட குரோமோசோம் மட்டும் மூன்றாக (trisomic) இருக்கும். அதேபோல, ஒரு குரோமோசோம். இறைவாகவுள்ள விந்துச் செல்லின் சேர்க்கையால் உண்டான உயிரியில் ஒரு குறிப்பிட்ட குரோமோசோம் மட்டுமே இருக்கும். இவற்றால் மிகுகேடு ஏற்படும். 47 குரோமோசோம் கள் உடைய இத்தகைய மனிதர்களில் 21ஆம் குரோ மோசோமில் மூன்று இருக்கும்; இவர்கள் அறிவிலி களாக இருப்பர்: இவர்களை மங்கோலியம் எனப் படும் டவுன் கூட்டியம் உடையோர் என்று கூறலாம். இவ்வாறே, குரோமோசோம் பிரியாநிலைக்குப் பால் - குரோமோசோம்களில் வேறு சில விளைவுகள் ஏற்படுகின்ற றன. குரோ மோசோம் மட்டும் பிரியா நிலைக்கு உட்பட்டு, உண்டான முட்டையில் குரோ மோசோம் இல்லை எனலாம். இந்த முட்டை, குரோ மோசோம் உள்ள ஒரு விந்துச் செல்லால் கருவுற்றபின் அதிலிருந்து பிறந்தவர் 45 குரோமோசாம் உடையவராக (வழக்கமான இரு குரோமோசோம் களுக்குப் பதிவாக ஒரே ஒரு குரோமோசோம் உள்ள வராக) இருக்க நேரிடும். அவர், பெண் உறுப்புகள் சரிவர வளர்ச்சியடையாத பெண்ணாகத்தான் இருக்க முடியும். விந்துச் செல் உற்பத்தியின்போது X, Y குரோமோ சோம்கள் பிரியாநிலை ஏற்பட்டு ஒன்றாகச் சென்றால் ஒருவிந்துச் செல்லில்.X -ம்,Y ம் இருக்கும்; இந்த விந்துச் சேர்க்கையால் கருவுற்ற சாதாரண முட்டையிலிருந்து, Xxy குரோமோசோம்கள் உள்ளவர் தோன்றுவார். அவர், பெண்தன்மைகள் நிறைந்த ஆணாக இருப் விந்தகங்கள் வளர்ச்சியுறாமலும் விந்தணுக் களை உண்டாக்காமலும் இருப்பதுடன், பெண்ணைப் போன்று மார்பகம் உடையவனாக இருப்பார். இதைக் கிளைன்ஃபெல்டர் கூட்டியம் syndrome) என்பர். பார். (Klinefelter கருவளர்ச்சியின்போது மறைமுகப் பகுப்புப் பிரியா நிலை ஏற்படுமானால், அத்தகையவரின் உடலில் வெவ்வேறு எண்ணிக்கையுள்ள குரோமோ சோம்களை உடைய செல்கள் இருக்கும். செல்கள் சிலவற்றில் சாதாரணமாக 46 குரோமோசோம்கள் (இரண்டு X குரோமோசோம்களையும் சேர்த்து) இருக்கும். இத்தகையவர் இயல்பாக ஒரு பெண்ணாக இருக்கவேண்டும். தவிர. சில செல்களில் ஒரே ஒரு X குரோமோசோம் மட்டும் உள்ளமையால் 45 குரோமோசோம்கள் இருக்கும். மேலும் சிலவற்றில் மூன்று X குரோமோசோம்களுடன் மொத்தம் 47 குரோமோசோம்கள் இருக்கும். இத்தகைய சிக்கலான பால் - குரோமோசோம் அமைப்பு களுடன் கூடிய அவர் ஆண்பால், பெண்பால் கலந்த நிலையில் இருப்பார். உடலில் ஆண் செல்களும், க. 8 57 அ பால் குரோமோசோம் பிரியா நிலை x y xx x xxy. கிளைன்ஃபெல்ட்டரி கட்டியத் டர்வரி கட்டியம் பெண் x y EX TO இருபால் உரு கிளைன் ஃபெல்ட்டர் டர்கர் கூட்டியம் கட்டியம் பெண் செல்களும் விரவிக் கிடக்கும். இவ்வாறு இருபாலும் சேர்ந்த கலவையான அமைப்பை ஆண் பெண்கலந்தநிலை (Gynandromorphism) என்பர். குரோமோசோம் பிரியாநிலை சாதாரணமாக நிகழ்வ தில்லை. அரிதாகச் சில செல்களில் இவ்விதம் நிகழ்கிறது. குரோமோசோம் பிறழ்ச்சி சோம. பேச்சிமுத்து குரோமோசோம்கள் ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட அமைப்பு உண்டு. வெவ்வேறு வகையான ஜீன்கள் ஒரு குறிப்பிட்ட வரிசையில் அவற்றில் அமைந்துள் ளன சாதாரணமாக, குரோமோசோம்கள் செல் பிரிதல்களின்போது தம் ஜீன்களின் வரிசை அமைப்பில் எம்மாற்றமும் இல்லாமல் இரட்டிப்பாகிப் பிரி கின்றன. ஆனால் சிலசமயங்களில் இயற்கையாகவோ, செயற்கையாக ஆய்வாளரின் குறுக்கீட்டாலோ, குரோமோசோம்களில் உள்ள ஜீன்கள் இடமாற்றம் அடையவோ சில ஜீன்களே இல்லாமல் போய்விடவோ