பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/922

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

902 குரோமோசோம்‌ பிறழ்ச்சி

902 குரோமோசோம் பிறழ்ச்சி ஈடுபடும். இதனால், புதிதாக ஏற்பட்டுள்ள கள் ஒன்றுக்கொன்று ஜீன்களில் வேறுபடும். ணை (2),(4) மட்டுமே துண்டுகளை ஒன்றுக்கொன்று இடமாற்றம் செய்து கொள்ளும். (1) உம் (2) உம், அவ்வாறே (3) உம் (4) உம் ஒன்றுக்கொன்று வேறுபடுவதைக் காணலாம். இந்நான்கு குரோமோசோம்களும் குன்றல் பகுப்பின் போது ஒரு சிலுவை போன்ற இணைதலுக்கு உள்ளாகும். இதை இடமாற்ற வேற்றுமையால் இணைதலில் உண்டான வடிவம் எனக் கூறுவர். T K T F HG ED Ca 5 T U V H G FE 0 X பாக்கிட்டீன் ணைதல் 白 நீக்கத்தால் ஏற்படும் விளைவுகள். இறப்பை உண்டாக்குதல்: நீக்கம் அல்லது குறைபாடு என்பது பெரும்பாலும் தீமையே விளைவிக்கவல்லது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஜீன்கள் இல்லாமையே இதற்குக் காரணம். ஒத்த அமைப்புடைய குரோமோ சோம்கள் இரண்டினுள் ஒன்றிலுமே குறிப்பிட்ட குறைபாடு அல்லது நீக்கம் ஏற்பட்ட பகுதி இல்லை யெனில் உறுதியாக அந்த உயிரி உண்டாவதில்லை; கரு வளர்ச்சியின்போதே இறந்துவிடும். இரண்டு குரோமோசோம்களில் ஒன்றிலாவது அக்குறிப்பிட்ட பகுதி (ஜீன்கள்) இருந்தால் அவ்வுயிரி சுருவிலேயே இறப்பதில்லை. பால் - குரோமோசோம்களுள் X குரோமோசோம் மட்டும் உள்ள ஆணில் இவ்வகை நீக்கம் ஏற்பட்டால் அது இறப்புக்குக் காரணமாகிறது; ஆனால், பெண்ணில் அதன் இரண்டு X குரோமோசோம்களிலும் நீக்கம் ஏற்பட்டால் மட்டுமே இறப்பு ஏற்படும். ஒரு ஒடுங்கிய ஜீன் ஓங்குதல். A என்னும் ஓங்கிய ஜீன் ஒரு குரோமோசோமிலும், அதற்கு ஒப்பான a A A என்னும் ஒடுங்கிய ஜீன் அதே வகைக் குரோமோ சோமிலும் கொள்ளலாம். இருப்பதாகக் முதல் குரோமோசோமில் A உள்ள பகுதி நீக்கத்திற்கு உள்ளாக நேர்ந்தால், அப்போது a என்னும் ஒடுங்கிய ஜீன் தன்னை வெளிப்படுத்திப் பண்பை உண்டாக்கும், சில இரட்டித்தலால் உண்டாகும் விளைவுகள். இரட்டித் தலால் பெரும்பாலும் கெடுதல் விளைவதில்லை. சமயங்களில் அதனால் படி மலர்ச்சிக்குப் பயனுள்ள புதிய ஜீன் கிடைக்கலாம். ஓர் உயிரியில் இரட்டித்தல் ஏற்பட்டால், அதன் பழைய ஜீன்கள் அதனுடைய இப்போதைய தேவைகளைக் கவனித்துக்கொள்ளும்; கூடுதலான (இரட்டித்த) ஜீன்கள் திடீர் மாற்றம் அடைந்து படிமலர்ச்சிக்கு உதவும். ஆனால், இரட்டித்தல் என்பது குரோமோசோமில் பெரிய அளவு நிகழும்போது குன்றல்பகுப்பில் சிக்கலை உண்டாக்கி விடுவதன் காரணமாக இனப்பெருக்கத் திறனைக் குறைக்க நேரிடும். மேலும் சில உயிரினங் களில் இரட்டித்தல் ஏற்படும்போது இட விளைவு களை உண்டாக்குவதுண்டு. எடுத்துக்காட்டாக. ட்ரோஸோஃபிலாவின் குரோமோசோமில் 16 என்னும் பகுதியில் இரட்டித்தல் ஏற்படும்போது அந்தப் பிறழ்ச்சியை உடைய பூச்சியின் கண்கள் ஒரு கோடு போலக் குறுகி இருக்கும். ஒரு குரோமோ சோமில் இப்பகுதி 3 முறை மீண்டும் மீண்டும் காணப்பட்டால் அப்பூச்சியின் கண்கள் மிகக்குறுகிய கோடாக அமையும். தலைகீழ் மாற்றம் ஏற்படுத்தும் விளைவுகள். எளிமை குரோமோசோமின் யான தலைகீழ் மாற்றங்கள் வடிவத்தைத் தவிர வேறு எந்தப் புற அமைப்பு மாற்றங்களையும் உண்டாக்குவதில்லை. தலைகீழ் மாற்றத்தால் ஒரு வகையான விளைவுகள் ஏற்படும். ஜீன்களின் ஒழுங்கான வரிசையினின்றும் வேறோர் இடத்திற்கு மாற்றப்பட்ட ஜீன் அதன் தன்மையை வெளிப்படுத்த இயலாமல் போய்விடுவ துண்டு. இயல்பான நீளவாட்டு இணைதல் நிகழ்வு, தலைகீழ் மாற்றம் அடைந்து குரோமோசோமில் நடைபெற இயலாது. தலைகீழ் மாற்றம் அடைந்த பகுதியைச் சுற்றிக் குறுக்கேற்றமும் குரோமோசோம் பரிமாற்றமும் குறைவாக நடைபெறும். . இடமாற்றம் ஏற்படுத்தும் விளைவுகள். இரண்டு ணை குரோமோசோம்கள் ஒவ்வொன்றிற்கு மிடையே நிகழ்ந்த பரஸ்பர பரிமாற்றம் மிகுந்த விளைவுகளை ஏற்படுத்தும். இத்தகைய உயிரிகள் உற்பத்தி செய்யும் இனச்செல்களில் பாதி அல்லது மூன்றில் இரண்டு பங்கு எண்ணிக்கை பயனற்றவை யாக இருப்பதால் மலட்டுத்தன்மையை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. ஏனெனில், இயல்பான ஆண் அல்லது பெண் தன்மையை உண்டாக்குவதற்குத் தேவையான ஜீன்கள் முழுதும் அந்த னச்செல்களில் இருப்பதில்லை.