குரோமோசோம் வரைப்டம் 923
முன்பு (வெவ்வேறு குரோமோசோம்களில் இருந் தமையால்) தாமாகவே பிரிய முடிந்த சில ஜீன்கள், அவற்றின் இடமாற்றத்தால் (ஒரே குரோமோ சோமில்) இணைக்கப்பட்டு விடுகின்றன. இடவிளைவு. கள் இடமாற்றத்தாலும் ஏற்படுவதுண்டு. குரோமோசோம் வரைபடம் சோம. பேச்சிமுத்து குரோமோசோம்களில் ஜீன்கள் அமைந்துள்ள இடத் தைச் செய்முறை ஆய்வுகளின் வழியாக, அமைத்துக் காட்டுதலைக் குரோமோசோமின் வரைபடம் mapping of chromosomes) பொறித்தல் கூறலாம். குரோமோசோம் வரைபடம் 903 பிரைட் (olbrycht) என்னும் மரபியல் அறிஞர்கள் ஈயில் பல்வேறு ஜீன்களின் குறுக்கேற்ற வீதத்தைக் கணித்ததில், வழவழப்பற்ற கண்களை (irough eyes) உடைய எகைனஸ் எகை (echinus) ஜீனும், நுண் இழைகள் (bristles) அற்ற உடற்பரப்பை ஸ்கூட்(நு இ) (scute) ஜீனும், சிறகுகளில் குறுக்கு நரம்பு இழையின் மையை (கு இ) (crossveinless) ஒரு ஜீனும், சிறகு ஓர வெட்டுத்தடங்களை (சி வெ) (notched wing margin ஒரு ஜீனும் இயக்குவதைக் கண்டனர். இவற்றுள் நடைபெற்ற குறுக்கேற்றத்தின் விளைவாகப் புது முறை மாறி இணையும் நிலை (Irecombination) கீழ்க் காணும் சதவீதத்தில் இருந்தது. எகை = 7.6% எனக் எகை குந்இ = 9.7% குநஇ = 17.3% குந்இ சிவெ = = 8.4% 17.3% எகை குந்இ 9.7% .8.4% யூகேரியோட் (eucaryote) விலங்குகளின் குரோ மோசோம் ஜீன்களின் குறுக்கேற்ற வீதத்தைக் கொண்டோ. குறிப்பிட்ட குரோமோசோம் பகுதி களில் காணப்படும் ஜீன்களின் இயல்பான (normal) அல்லது நிலை பிறழும் (aberration) தன்மை ஆகிய வற்றால் உண்டாகும் உரு அமைப்புத்தன்மை (phenotype) மாற்றங்களைக் கொண்டோ வரைபடம் அமைக்கலாம். புரோகேரியோட்டுகளில் (procaryotes) பல்வேறு முறைகளால் குரோமோசோம் வரைபடம் தயாரிக்கப்படுகிறது. பாக்டீரியாவில் இரு செல் கலவியின்போது ( mating) அக்கலவியின் தொடக்கத்தி லிருந்து பல்வேறு கால அளவில் அவற்றைத் திடீ ரெனப் பிரித்து, அவற்றின் குரோமோசோம்களின் இடமாற்றம் எந்த அளவில் நடைபெறுகிறதென் பதையும் அதன் விளைவாக ஏற்படும் பண்பு மாற்றங் களையும் கணக்கிட்டு, குரோமோசோம் வரைபடம் தயாரிக்கப்படுகிறது. ஒரு விலங்கினத்தின் குரோமோசோம்களின் எண்ணிக்கை முதலில் தீர்மானிக்கப்படுகிறது. பிறகு அவ்வினத்தின் நிலை பிறழ்ந்த உயிரிகளுக்கும், இயல் பான உயிரிகளுக்கும் இடையே கலப்புறுதல் முறையில் (hybridization) அவ்வினத்தில் காணப்பெறும் ஜீன் களின் எண்ணிக்கை கணக்கிடப்படும். அதே நேரத்தில் அவற்றின் உருவமைப்பில் காணப்படும் பிணைவுற்ற பண்புகளைக் (linked characters) கொண்டு, பி ணை வுற்ற ஜீன் தொகுதிகளின் எண்ணிக்கை கணக்கிடப் படுகிறது. பின்பு ஒவ்வொரு பிணைவுற்ற ஜீன்களுக் கிடையேயுள்ள தொலைவு கணிக்கப்படும். குறுக் கேற்ற வீதம் (frequency of crossing over) ஜீன்களுக் கிடையேயுள்ள தொலைவிற்கு நேர்விகிதத்தில் உள்ள மையால், இது மிகத் துல்லியமாகக் கணிக்கப்பட்டு ஜீன் தொகுதிகளுக்கு இடையே உள்ள தொலைவு அறியப்படுகிறது. எடுத்துக்காட்டாக, பிரிட்ஜஸ் (Bridges), ஆல் 7.6% குரோமோசோம் வரைபடம் எகை = எங்கனள் துவி இமை இவ்வாமை சிவெ குநது = குடிக்கு நரம்பிழை இன்மை சிவெ= சிறகு ஓர வெட்டுத் தடங்கள் உள்ளது இதைக் கொண்டு படத்தில் போன்ற குரோமோசோம் வரைபடம் தயாரிக்கலாம். ரு ஜீன்களுக்கிடையே உள்ள தொலைவு, மார்கன் (Morgan) அல்லது வரைபட அலகு (map unit) எனப்படும். சோளம், பழ ஈ ஆகியவற்றில் இருக்கும் குரோ மோசோம்களின் அத்துணை ஜீன்களையும் இவ்வாறு கணக்கிட்டுக் குரோமோசோம் வரைபடம் தயாரிக்கப் பட்டுள்ளது. மனிதனின் குரோமோசோம்களிலும் சில ஜீன்களின் குறிப்பிட்ட இடங்களைத் தீர்மானித் துள்ளனர்.