904 குரான் நோய்
904 குரோன் நோய் குரோமோசோமின் ஓர் இடத்தில் குறுக்கிணைவு (chiasma) ஏற்பட்டால், அது அதன் அருகே மற் றொரு குறுக்கிணைவு ஏற்படுவதைத் தடுக்கும். இதைக் குறுக்கீடு. interference) எனக் கூறுவர். 1916 ஆம் ஆண்டு முல்லர் (Muller) இதைக் கண் டறிந்தார். இது குரோமோசோம்களுக்கிடையேயும், ஒரே குரோமோசோமின் பல்வேறு பகுதிகளிலும் வேறுபடும். குறுக்கீட்டின் நேர்மாற்று அளவு (inverse measure), தற்செயல் நிகழ்வு (coincidence) எனப் படும். குறுக்கீடு முழுமையாக (10) இருக்கும்போது, தற்செயல் நிகழ்வின் அளவு குறைவாகவும் (0), குறுக் கீடு குறையும்போது தற்செயல் நிகழ்வு மிகுதியாகவும் இருக்கும். தற்செயல் நிகழ்வின் அளவு பொதுவாக 0-க்கும் 1-க்கும் இடையில் இருக்கும். எக்ஸ் கதிர்கள் வெப்ப அளவு ஜீன்களின் திடீர்மாற்றம் (gene mutation) போன்றவை ஜீன்களின் செயல்களில் மாறுதலைக் கொண்டு வருவதால் குரோமோசோமின் துல்லியமான வரைபடத்தைத் தயாரிப்பதற்குத் தடை ஏற்படுகிறது. குரோமோசோம் வரைபடங்களின் உதவியால் ஜீன்களின் குறிப்பான இடங்கள் தெரிவதால் கலப் புயிரிகளின் (hybrids) பண்புகளைச் செயல் முறை மதிப்பீடு செய்யஇயலும். ஆய்வுக்கு முன்னரே எம். இராமலிங்கம் குரோன் நோய் இது பெருங்குடல் அழற்சி நோய்களில் ஒன்றாகும். குரோன் நோய் (Crohn's disease) உணவுக் குழலின் எந்தப் பகுதியையும் தாக்கலாம். முக்கியமாகச் சிறு குடலின் இறுதிப் பகுதி, வலப்பகுதி, பெருங்குடல் நடுப்பகுதி (jejunum), பெருங்குடலின் சிறுகுடலின் பகுதி (ileum) ஆகியவற்றைத் தாக்கலாம். கடைப் நிகழ்நிலை (incidence). எந்த வயதினருக்கும் இந்நோய் ஏற்படலாம். பெரும்பாலும் 20-40 வயது உள்ளவர்களிடமும், இரு பாலாரிடையேயும் காணப் படுகிறது. நோய்க்காரணம். காரணம் அறுதியிட்டு மெய்ப் பிக்கப்படவில்லை, இது ஒவ்வாமை நோயால் ஏற்படு கிறது என்றும்,மரபு நுட்ப அணுக்(gene)கோளாறால் ஏற்படுகிறது என்றும் சிலர் கருதுகின்றனர். மேலும் நோயுற்ற இடத்தில், கிளாஸ்டிரீடியம் டெஃபிசில் (Clostridium difficile Oumarpmer காணப்படுவதன் காரணம் தெரியவில்லை. நோய்க் குறி இயல் (pathology). நேரில் பார்த் தால் குடல் வீங்கிப் பெரிதாகக் காணப்படும்; குடலின் உள் விட்டம் குறைந்துவிடும்; குடலைச் சார்ந்த நிணநீர்க் கட்டிகள் (lymph nodes) வீங்கியும் குடல் தாங்கிச் சவ்வு தடித்தும் காணப்படலாம். குடலின் சளிப்படலம் கூழாங்கற்கள் போன்று காட்சி யளிக்கும். கட்டிகளும் காணப்படும். நுண்ணோக்கியின் வழியே குடலின் அனைத்து உறைகளிலும் அழற்சியின் மாற்றங்கள் தெரிவதோடு திசுக்கள் அடர்ந்த (epitheloid granulomas) பாதிக்கப்பட்ட குடல்களுக்கிடையிலோ, குடல், சிறு நீர்ப்பை, கருப்பை, யோனி ஆகியவற்றுக்கும் இடை யிலோ புரையோடிய புண்கள் காணப்படும். அறிகுறிகள். வயிற்றுப் போக்கு அடிக்கடி ஏற்படும். மீண்டும் மீண்டும் வயிற்று வலியும், குடல் அடைப்பு அறிகுறிகளும் ஏற்படும். சோகை காணப் படும். உணவுப் பொருள்கள் சரியாக உறிஞ்சப்படாத நிலை ஏற்படும். நோய் நிர்ணயம். மல ஆய்வின்போது இரத்தத்தில் வெள்ளை, சிவப்பு அணுக்கள் காணப்படும். பேரியம் மாவு கொடுத்து எடுத்த ஊடுகதிர் நிழற்படத்தில் குடலின் உள்விட்டம் குறைந்துவிடுவதால் நூலிழை போன்ற தோற்றம் தெரியும். குடலில் புரையோடிய புண்கள் (fistulae) காணப்படலாம். பிணிக்கூற்றாய் வில் கிரானுலமேட்டஸ் அழற்சி (granulomatous inflammation) காணப்படும். எதுவும் மருத்துவம், குறிப்பிட்ட மருத்துவம் இல்லை. கொழுப்புச்சத்தும், நார்ப் பொருள்களும் குறைவாக உள்ள உணவை உட்கொள்ள வேண்டும். சல்பாசலசின் (sulfasalazine), கார்டிகோஸ்டீராய்டு (corticosteroid) கியவை பயனளிக்கலாம். குடல் படம் 1. குடலின் உள்விட்டம் குறைந்து நாளிழை போன்ற தோற்றம் காணலாம்