74 கன்னி இனப்பெருக்கம்: (விலங்கியல்)
74 கன்னி இனப்பெருக்கம் (விலங்கியல்) கருவுற்ற அண்டத்திலிருந்து பெண்பூச்சி உண்டாகும். இது இடும் முட்டை கருவுறாமலே நீர்த்தெள்ளுப் பூச்சியாக வளரும். சிலவற்றில் கருவுறாத முட்டை ஆணாகவோ, பெண்ணாகவோ வளரும். சிலவற்றின் முட்டை கருவுற்ற பின்புதான் முதிர்ச்சியடைந்து பெண்ணாக வளரும். குளிர்பகுதிகளில் குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னரே ஆண்பூச்சிகள் தோன்றிக் கருவூட்டல் செய்கின்றன. தலை கன்னி இனப்பெருக்கம் நடைபெறும் அசுகுணி எறும்பு, தேனீ, குளவிகள் சிலவற்றில் பல முறைகளுக்கு ஆணினமே தோன்றுவதில்லை. சில வற்றில் எப்போதுமே ஆணினம் தோன்றுவதில்லை. தேனீக்களில் கருவுற்ற கருவுறாத இரு வகை முட்டைகளும் உண்டாகும். அரசித் தேனீயும். ஆண்தேனீக்களும் வானில் பறக்கும்போது ஆண் தேனீ தன் விந்தைப் பெண்ணுக்குள் செலுத்தியதும் இறந்து விடுகிறது. ராணி ஈ, விந்தைத் தன் உடலி லுள்ள தனிப்பையில் சேமித்து வைத்து வேண்டும் போது தன் முட்டைகளைச் சிறிது சிறிதாகக் கரு வூட்டிக் கொள்கிறது. ஒரு ராணி ஈ நான்கு ஆண்டு களுக்கு நாளொன்றுக்கு 3000 முட்டைகள் வீதம் இடும். கருவுற்ற முட்டைகள் அரசித் தேனீக்க ளாகவும் வேலைக்காரத் தேனீக்களாகவும் மாறு கின்றன. வேலைக்காரத் தேனீக்கள் மலட்டுப்பெண் ஈக்களாக வளர்கின்றன. கருவுறாத முட்டைகள் ஆண் ஈக்களாக வளரும். . அரிது. நுண் சக்கரவுயிரிகளிலும் கன்னி இனப்பெருக்கம் நடை பெறுகிறது. இவற்றில் கோடைக்கால முட்டை குளிர்கால முட்டை என இரு வகை உண்டு. சக்கர வுயிரிகளில் ஆண் இனத்தைப் பார்ப்பது நூற்புழுக்களிலும் கன்னி இனப்பெருக்கம் நிகழ் கிறது. தவளையின் கருவுறா முட்டைகளை ஊசியால் குத்தித் தூண்டினால் அவை கருவுற்ற முட்டைகள் போன்று வளர்ந்து தவளைகள் உண் டாகும். இதேபோன்று பட்டுப்பூச்சி முட்டைகளின் சூழ்நிலை வெப்பத்தை உயர்த்தினால் அவை கருவு றாமலே வளர்ந்து பட்டுப்பூச்சிகளாக வளர்கின்றன. இதற்குச் செயற்கைக் கன்னி இனப்பெருக்கம் என்று பெயர். சில குறிப்பிட்ட சிறப்பினங்களில் சில குறிப் பிட்ட சூழ்நிலைகளில் ஆணினச் செல்லின் (விந்தணு வின்) சேர்க்கையின்றியே சினை (பெண்ணின் செல்) கரு வளர்ச்சி நிலைக்குத் தூண்டப்படுகிறது. இத் தகைய முழுஉரு வளர்ச்சிக்குக் கன்னி இனப்பெருக்கம் (parthenogenesis) என்று பெயர். கன்னி இனப் பெருக்க முறையில் உருவாகும் சேய்களுக்குக் கன்னி வழி உயிரிகள் (parthenogones) என்று பெயர். கன்னி இனப்பெருக்கம் தாவரங்களிடையே அரி தாகக் காணப்படுகிறது. பூச்சிகளுள் சில குறிப்பிட்ட வரிசைகளில் கன்னி இனப்பெருக்கம் இயல்பாக ஏற் படுகிறது. அதனுடன் பால்வழி இனப்பெருக்கமும் அப்பூச்சிகளின் வாழ்க்கைச் சுற்றில் காணப்படுகிறது. வேறு சில பூச்சி இனங்கள் கன்னி இனப்பெருக்க முறையால் மட்டுமே இனப்பெருக்கம் செய்கின்றன. கன்னி இனப்பெருக்கம் இயற்கைக் கன்னி கன்னி இனப் பெருக்கம், செயற்கைக் கன்னி இனப்பெருக்கம் என இரு வகைப்படும். இயற்கைக் கன்னி இனப்பெருக்கம். இத்தகைய இனப்பெருக்கம் கடப்பாட்டுக் கன்னி இனப்பெருக்கம் என்றும் குறிக்கப்படும். கன்னி இனப்பெருக்க முறை யால் மட்டுமே ஓர் உயிரின் வாழ்க்கைச் சுற்று நிறைவு பெறுமாயின் அந்த இனப்பெருக்கம் முழுமைக் கன்னி இனப்பெருக்கம் எனப்படும். இவ்வாறன்றி ஓர் உயிரியின் வாழ்க்கைச் சுற்றில் இனப்பெருக்கத்தோடு பால் வழி இனப்பெருக்கமும் காணப்பட்டால் அதைச் சுழற்சிக் சுன்னி இனப் பெருக்கம் என்பர். முழுமையான கன்னி இனப் பெருக்கத்தில் ஆண்பால் உயிரினங்களைக் காண முடிவதில்லை. சில தனித்தன்மைகள் கொண்ட இத்தகைய இனப்பெருக்க முறை ஜீன் பரிமாற்றங் களைத் தவிர்த்துவிடுகிறது. கன்னி இனப்பெருக்கம் இரு முறைகளில் நிகழ் கிறது. அவை ஒற்றைப்படை முறை அல்லது ஆண் பிறப்புக் கன்னி இனப்பெருக்கம் (arrhenotoky), இரட்டைப் படை முறை அல்லது பெண் பிறப்புக் கன்னி இனப்பெருக்கம் (thelytoky) ஆகும். ஒற்றைப்படைக் கன்னி இனப்பெருக்கம். விலங்கினங் களில் ஏழு தொகுதிகளில் இம்முறை காணப்படு கிறது. பூச்சிகளில் நான்கு வரிசைகளிலும், அராக் னிடா, சக்கர நுண்ணுயிரிகள் (rotifers) போன்ற வற்றிலும் இந்த இனப்பெருக்க முறை காணப்படு கிறது. பெண்(2n) ஆண்(2n) இனப்பெருக்கம் ஆண் ருசினையணு ருன்தல் பகுப்பு (n)சினையறு மறைமுகப் பகுப்பு பெண் (Zn) (n) விந்த (p). ஒற்றைப் படைக் கன்னி இனப்பெருக்கம் ஆண் அரையிறக்கைப் பூச்சிகள் சிலவற்றில் காணப்படு வதைத் தாம்சன் என்பார் கண்டறிந்து தெரிவித் துள்ளார். தைசனோப்டிராவில் ஒற்றைப்படைக் கன்னி இனப்பெருக்கம் காணப்படுவதை உறுதி செய்யவில்லை. மேலும், வண்டினங்களின் ஒரு சிறப் பினத்தில் மட்டும் இத்தகைய கன்னி இனப்பெருக்கம் காணப்படுகிறது. உண்ணிகள், கோழிப் பேன்கள்