பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கன்னிக்‌ கனியாதல்‌

76 கன்னிக் கனியாதல் தொடங்குகிறது. து தூண்டப்படும் கன்னி வளர்ச்சி கரு உருவாக்க போன்று செயற்கையாகத் இனப்பெருக்கத்தில் பல பொருள்கள் ஈடுபடுவதால் ஒரு குறிப்பிட்ட பொருள்தான் செயற்கைக் கன்னி இனப்பெருக்கத்திற்குக் காரணம் எனத் தெளிவாகக் கூற இயலவில்லை. இங்கு ஈடுபடக்கூடிய தூண்டும் பொருள்கள் யாவும் சினையணுவினுள் தூண்டல் உணர்ச்சியைத் தோற்றுவிக்கும் செயலிலேயே ஈடுபடு கின்றன. இப்பொருள்களைப் பெருமளவில் நீண்ட நேரம் பயன்படுத்தினால் சினையணுக்கள் இறக்க நேரிடும். ஒவ்வொரு வேதிப் பொருளும் சினை யணுவின் ஒவ்வொரு பகுதியில் செயல்பட்டு இறுதியில் கருவளர்ச்சியைத் தொடங்கி வைக்கிறது. வான்கோழிகளில் இயல்பான கன்னி இனப்பெருக் கம் நடைபெறுவதை ஓல்செல் என்பார் கண்டறிந்து வெளியிட்டுள்ளார். லெசெர்ட்டா சாக்ஸிக் கோலா அர்மேனியக்கா (lacerta saxicola armeniaca) என்னும் பல்லி இனங்களில் கன்னி இனப்பெருக்கம் இயல்பாகக் காணப்படுவதாக, குளிக்கோவா என்பார் குறிப்பிட்டுள்ளார். பாலூட்டிகளில் (முயல்) கருமுட்டைகள் வளர் ஊடகத்தில் விடப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும்போது கன்னி இனப்பெருக்க விழி வளர்நிலைகள் தோன்றுவனவாகப் பின்க்கஸ், ஷாப்பிரோ ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். இளம் கன்னி இனப்பெருக்கத்தின் தனித்தன்மைகள். பெருமளவில் சேய் உயிரிகளை உருவாக்க இது ஓர் எளிய இனப்பெருக்க முறையாகும். இனப்பெருக்கத் திற்கு இணை தேடி இழக்கும் ஆற்றல், உடல் ஊட்டத்திற்கும் திறன் மிகு இனப்பெருக்கம் நடைபெறுவதற்கும் பயன்படுகிறது. மலட்டுத்தன்மையினின்று தப்புவதற்கு ஏற்ற தாரு வழியாக(டார்லிங்க்டன் - darlington) பயன் படுகிறது. மேலும் இது பாதகமான ஜீன் தொகுப்பு களை நீக்குவதற்கும், சாதகமான ஜீன் தொகுப்பு கள் மாற்றமுறாமல் நிலைத்து நிற்பதற்கும் உறு துணையாகிறது. குரோமோசோம் அடிப்படையில் பால் நிர்ணயத்திற்கு (sex determination) வழி வகுக் கிறது. ஆயினும் கன்னி இனப்பெருக்க முறை, பொது வாக ஜீன் பரிமாற்றங்களின் வழியாக நடைபெறும் புதிய ஜீன்களின் சேர்க்கைகளை உயிரினங்களிடையே ஏற்படுவதைத் தடை செய்கிறது. எனவே உயிரினங் களின் தகவமைப்பு ஆக்கம் தடைப்படுகிறது. து படிமலர்ச்சி மாற்றங்களுக்கும், வளர்ச்சிக்கும் தடை யாக அமைகிறது. இதனால், அவ்வினம் முழுமை யாக அழிந்து போகிறது அல்லது பால் முறை இனப் பெருக்கத்திற்குத் தள்ளப்படுகிறது. எஸ். தியாகராஜன் நூலோதி.B.I. Balinsky, An Introduction to Embryology. Toppan Company Ltd. Tokyo, 1970. கன்னிக் கனியாதல் கருவுறுதலில்லாமலேயே சூலசும் கனியைத் தோற்றுவித்தலாகும். கன்னிக் கனியாதல் (parth- enocarpy) இருவகைப்படும். முதல்வகையான யற்கைக் கன்னிக் கனியாக்கல் அல்லது உடலக் கன்னிக் கனியாக்கல் (vegetative parthenocarpy} என்பது மகரந்தச் சேர்க்கை, கருவுறுதல் நடைபெறா மலேயே கனி தோன்றி வளர்ச்சியடைவதாகும். இது உள்ளீடான வளர்ச்சியால் கட்டுப்படுத்தப்படுகிறது. எ கா . வாழை, அன்னாசி, தக்காளி, மிளகு, பூசணி, வெள்ளரி. இரண்டாம் வகை ஊக்குவிக்கப்படும் சுன்னிக் சுனியாக்கல் (induced parthenocarpy) எனப்படும். இதற்கு மகரந்தச் சேர்க்கை இன்றியமையாதது. ஆனால் கருவுறுதல் தேவையில்லை. எ.கா: கறுப்புக் கொரிந்த் திராட்சை (black corinth grapes). இதில் மகரந்தக்குழாய் சூலை அடைவதற்கு முன்பே கனி பெருகி முழு வளர்ச்சியடைவதும் உண்டு. பெருமளவில் சூல்கள் கொண்ட பழவகைகளான வாழை, அன்னாசி, தக்காளி, அத்தி, பூசணி வகை களில் கன்னிக் கனியாதல் காணப்படுகிறது. தோட்டக் கனி வகைகளில் பல விதைகளற்று உள்ளன. இவற்றில் கன்னிக் கனியாக்கல் காணப்படு சில கிறது. விதைகளுடைய அனைத்துக் கனிகளிலும் கன்னிக் கனியாக்கல் நடைபெறுவதில்லை. ஒற்றை விதைகளுள்ள கனிகளில் கன்னிக் கனியாக்கல் நடைபெற்றுமுள்ளது. சில தாவரங்களில் கனி முதிர்ச்சியடைவதற்கு முன்பே சுருச் சிதைவால் விதைகள் தோன்றுவதில்லை. எலுமிச்சை, ஆரஞ்சு வகைகள், வாழை, அன்னாசி, சில ஆர்கிடுகளில் கன்னிக் கனியாக்கல் மகரந்தத்தால் தூண்டப்படு கிறது. பார்தினோஜெனிடிக் Gumum (partheno- genetic poa) சிற்றினங்களில் டிரிப்ளாய்டு தாவரங் களின் கனிகள் மலடானவை. சில செர்ரி, பீச்சஸ், திராட்சைக் கனிகளில், கன்னிக் கனியாக்கல், கருச் சி தைவடைவதால் ஏற்படும் பொதுவான நிகழ்ச்சி யாகும். நீடம் (gnetum) என்னும் தாவரத்தில் கன்னிக்கனியாக்கல் ஒரு விநோதமான இடைநிலை வகையாகும். மகரந்தச் சேர்க்கையால் தூண்டப்பட்டு இதில் கனி தோன்றுகிறது. மகரந்தக் குழாய் வளர்ச்சி பெறாமல் தடைப்பட்டு, கனி பழுத்து நிலத்தின்மேல் விழுந்த பிறகு வளர்ச்சியுறுகிறது. சில மாதங்களுக்குப் பின் சுருவுறுதல் ஏற்படுகிறது.