கன்னிக் கனியாதல் 77
கன்னிக் கனியாக்கலுக்குச் சில முக்கியமான சூழ் நிலைக் காரணிகளும் அடிப்படையாகின்றன. சில சமயங்களில் இத்தாவரங்களில் கன்னிக் கனியாக்கல் மூலம் கனி வளர்ச்சி தடைப்பட்டால், சூழ்நிலைக் காரணிகளைக் கொண்டு கனிவளர்ச்சி தூண்டப் படுகிறது. ஆஸ்பார்ன், வென்ட் என்போர் தக்காளி வகைகளில் குறைந்த தட்ப வெப்பநிலையையும், மிகு ஒளியையும் அளித்துக் கன்னிக் கனியாக்கலைத் தூண்டினர். இவற்றில் மகரந்தச் சேர்க்கை கூட நடைபெறுவதில்லை. இதுபோன்றே நிட்ச்குழுவினரும் வெள்ளரி வகைகளில் ஒளியின் காலத்தைக் (photo- periodism) குறைத்தும், தட்ப வெப்ப நிலையைக் குறைத்தும் கன்னிக் கனியாக்கலைப் புகுத்தியுள்ளனர். கன்னிக்கனியாக்கலை எளிதில் ஏற்காத சில சிற்றினங் களில் உறைபனியைக் (frost) கொண்டும் அல்லது வெப்பநிலையைக் குறைத்தும், விதை சிதைத்தலைத் தூண்டிக் கன்னிக் கனியாக்கலை ஊக்குவிக்கலாம். எ.கா. ஆப்பிள், பேரி. கன்னிக் கனியாக்கலில் தாவர ஹார்மோன்களின் பங்கு. தாவர வளர்ச்சியில் தாவர ஹார்மோன்களின் பங்கு கண்டுபிடிக்கப் பட்டது முதல் கன்னிக் கனியாக் கலுக்கும் ஹார்மோன்கள் காரணமாகலாம். என்று கருதினர். இதற்குப் பிறகு, குஸ்தாஃப்சன் என்பார் விதையுள்ள, விதையற்ற சிற்றினங்களின் சூல்களை ஆராய்ந்து ஆக்சின்களின் இருப்புக்கும், கன்னிக் கனி யாக்கலுக்கும் தொடர்புண்டு என்பதைக் கண்டுபிடித் தார். இது இயற்கையாக விதைகொண்ட கனிகளைத் தோற்றுவிப்பதற்குக் காரணம் என்றும் கூறினார். இதற்கு எடுத்துக்காட்டாக எலுமிச்சை வகைக் கனி களிலும், திராட்சைக் கனிகளிலும் ஆக்சின் இருக்கும் அளவு விதையற்ற வகைகளில் மிகுதியாக உள்ளதைக் கண்டுபிடித்தார். ஆக்சின் இருப்பு விதையுள்ள வகை களில் குறைவாக இருந்தது. ச லக்வில் என்பார், இது சூலகங்களின் ஆக்சின் ஆடோடிராஃபி நிலையில் ஒன்றாகும் என்றும் கன்னிக் கனியாக்கல் இதையே குறிக் கின்றதென்றும் கூறுகிறார். ஆக்சின்களின் உதவியைக் கொண்டு கனிதோன்றும்போது, பொதுவாக, முன்னரே கருவுருதல் அடைந்த கருக்களின் வளர்ச்சி தடைப்பட்டு அவை சிதைவடைகின்றன. மகரந்தச் சேர்க்கைக்குப் பிறகு கருத்தரித்தல் சில தாவரங் களில் மிகக் கடினமாக உள்ளது. அப்போது ஆக்சின் களால் விதை உற்பத்தி பெருக்கப்படுகிறது. சஃபார் என்பார் நாஃப்தலீன் அசெட்டிக் அமிலத்தைப் பயன்படுத்தி உருளைக் கிழங்கு முளைகளிலும், மலர் களிலும் விதை உற்பத்தியை மகரந்தச்சேர்க்கையைக் கொண்டு தோற்றுவித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. மூன்று வகையான தாவர ஹார்மோன்கள் கன்னிக் கனியாக்கலைத் தூண்டுகின்றன. அவை, ஆக கன்னிக் கனியாதல் 77 ஆக்சின்கள், ஜிப்பரெலின்கள், சைடோகைனின்கள் என்பனவாகும். கனித்தோற்றமும் வளர்ச்சியும் பல சிக்கலான முறைகளைக் கொண்டவை கனி வளர்ச்சி யுற்று, முதிர்ச்சியாகும் வரை ஒவ்வொரு வேதி இயக் கப் பொருளுக்கும் ஒரு தனிப்பட்ட திசுவின் செறிவு தேவைப்படுகிறது. கனியாகும் நிலையைப் பொறுத்து ஒவ்வொரு வேதி இயக்கப் பொருளும் ஒரு தனிப் பட்ட தன் வினையைத் தூண்டும். சில சமயங்களில் ஒரு வேதி இயக்கப்பொருள் மற்றொரு வேதி இயக் கப்பொருளின் செயலைச் சார்ந்தும் இருக்கலாம். அப்போதுதான் கனி வளர்ச்சி தக்க வளர் தொடர் நிலைகளில் படிப்படியாக நிகழும். சில தாவரங் களில். ஆக்சினைவிட ஜிப்பரெலின் மிகுதியான ஆற்றல் பெற்றுக் கன்னிக் கனியாக்கத்தில் பங்கேற் கிறது. எ.கா.ஆப்பிள் சூல்கள் மிகுந்துள்ள அத்தி, தக்காளி, ரோஜா, கத்தரி போன்ற வகைகளில் செயற்கை ஹார்மோன் களைக் கொண்டும் கனியைத் தோற்றுவிக்கின்றனர். உடலக் கன்னிக் கனியாக்கலும், உந்தப்பட்ட கன்னிக் கனியாக்கலும், சாதாரண கனிவளர்ச்சி இயல்புக்கு மாறுபட்டவை. ஆனால் இதை ஒரு படிமலர்ச்சி பெற்ற இயக்கமாகவும் கொள்ளலாம். கனி வளர் நிலையும், விதை வளர்நிலையும் இரண்டு தனிப் பட்ட பக்கங்களாகும். உடலக் கன்னிக் கனியாக் கலில், இளம் காய்கள் வேர் ஹார்மோன்களைக் கனி வளர்ச்சிக்குத் தக்க திசு அடர்த்தியில் தோற்றுவிக்கின்றன. உந்தப்பட்ட கன்னிக் கனியாக் கவில் இளம் காய்களில்மகரந்தத்தாலும், மகரந்தக் குழாயாலும் சுரக்கப்படும் ஹார்மோன்களின் செய லால் மீண்டும் மிகு கனி வளர்ச்சி தூண்டப்படுகிறது. ஆக்சின் உதவி கொண்டு தோன்றும் கனிகளில் செல் கள் பெரிதாவதால் கனி வளர்ச்சியுறுகிறது. ஆக்சின் களின் உதவி இல்லாதபோது களிவளர்ச்சி, செல்கள் பகுப்படைவதால் செயல்படுகிறது. கன்னிக் கனியாக்கலின் பயன்கள். கன்னிக் கனி யாக்கலைப் பயன்படுத்திப் பல கனி உற்பத்தித் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டுள்ளன. தொடர்ந்து செயற்கை ஹார்மோன்களைக் கொண்டு கனி உற்பத் தியைப் பெருக்கி வருகின்றனர். ஆனால் இப்பண்பு இயற்கையாகவே சோலனேசி, குகர்பிட்டேசி தாவரங் களிலும், அத்தி, திராட்சை வகைகளிலும் காணப் படுகிறது. ஆக்சின்களின் அடர்த்தியை அதிகரித்துக் கனி விளைச்சலைப் பெருக்குகின்றனர். இதற்கெனத் தொழிற்சாலைகளையும் நிறுவியுள்ளனர். மே. லோ. வீலா நூலோதி. A. Carl Leopold, plant growth and development, Tata McGraw - Hill Publishing Co Ltd., Bombay, 1964.