பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கன்னிக் கிளி

78 கன்னிக்கிளி கன்னிக்கிளி கிளியைப் போன்ற அலகும் இலைப்பச்சை நிறமும் பெற்றிருப்பினும் நீண்டு வளர்ந்த வால் இல்லாத காரணத்தால் இது கன்னிக்கிளி எனப்படுகிறது. சிட்டுக்குருவி அளவுடைய இதன் அலகு பவளச் சிவப்பாகவும் பின்முதுகு ஒளிர் சிவப்பாகவும் இருக் கும். ஆண் பறவைக்கு மட்டும் தொண்டைப் பகுதி யில் நீல நிறத் திட்டு இருக்கும். இது மலைப் பகுதிப் பசுங்காடுகளில் கூட்டமாக, இரை தேடித் திரியும். உயர் கொம்புகளில் பசிய லைகளிடையே திரிந்து மலர்களில் தேனைக் குடிக்கும் இது,பழங்கள், காய்கள் மலர்கள் ஆகிய வற்றையும் தின்னும். தென்னை மரப் பாளைகளில் வடியும் கள்ளைக் குடிக்கும் பழக்கமும் இதனிடம் உண்டு. மூங்கில் நெல், தேக்கு விதை ஆகியவற்றை விரும்பி உண்ணும். அலகையும் கால் விரல்களையும் பயன்படுத்தி மரங்களில் கொம்புகளைச் சுற்றிச் சுற்றி விரைந்து ஏறிச் செல்லும் இது கிளைகளில் தலைகீழாகவும் பக்கமாகவும் தத்திச் செல்லும். இவ்வாறு கிளைகளில் தத்தித் திரியும்போது 'ச்சி, ச்சி - ச்சீ எனக் குரல் கொடுப்பதைக் கொண்டே ஒரு மரத்தில் இது இருப்பதைத் தெரிந்து கொள்ள லாம். இந்தியப் பறவைகளுள் மரக்கிளையில் வௌ வாலைப் போலத் தலைகீழாகத் தொங்கியவாறு தூங்கும் பழக்கம் உள்ள பறவை இது ஒன்றேயாகும். தின்ன உணவு கிடைக்கும் இடங்களுக்கும் புதிதாக மழை வளம் பெறும் இடங்களுக்கும் இடம் பெயர்ந்து செல்லும் இது ஜனவரி- ஏப்ரல் முடிய உள்ள பருவத்தில் மரப்பொந்துகளில் முட்டையிடும். உளுத்துப்போன மரங்களில் இயற்கையாக அமைந் துள்ள பொந்தின் மேலோ பக்கவாட்டிலோ நுழை வாயில் அமைத்து ஒரு மீட்டர் ஆழத்தில் முட்டை யிடும். அலகால் லைகளை வெட்டிக் கூட்டை மெத்தென்று ஆக்கி 3, 4 வரை முட்டைகள் இடும். அடைகாப்பதிலும் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுவதி லும் ஆணும் பெண்ணும் பங்கு பெறுகின்றன. கன்னித்தன்மை கூ, ரத்னம் பாலுறவு கொள்ளாத பெண்ணின் நிலையைக் கன்னித்தன்மை (virginity) என்பர். இது, பால் உறவு கொள்ளாத ஆண்களுக்கும் பொருந்தும். கன்னித் தன்மையில் பெண் நல்ல வளர்ச்சி அடைந்திருந்தபோதும், பால் புணர்ச்சி கொள்ளாத வளாக இருக்கிறாள். இதற்குச் சுற்றுப்புறச் சூழ் நிலை, நாளமில் சுரப்பிக் கோளாறுகள் போன்ற பல காரணங்கள் இருக்கலாம். இதற்கு அடையாளமாக, யோனிச்சவ்வு (hymen) கிழிபடாமல் இருப்பது கருதப்படுகிறது. னால் யோனிச் சவ்வு கிழிந்து இருந்தால், தின் ணமாகக் கன்னித்தன்மை இழந்து விட்டதாகக் கருத இயலாது. கனகாம்பரம் இது 4 சாரதா கதிரேசன் பவளக் குறிஞ்சா என்றும் குறிக்கப்படும். இதன் தாவரவியல் பெயர் குரோசெண்ட்ரா இன்ஃ பண்டிபுலிஸ் ஃபார்மிஸ் (Crossandra infundibuliyformis) என்பதாகும். கனகாம்பரம் அகாந்தேசி என்னும் இருவித்திலைத் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. குரோசெண்ட்ரா என்னும் சொல்லுக்கு, கிரேக்க மொழியில் விளிம்பு நீண்ட அல்லது விளிம்பு தொங்கிய மகரந்தப் பைகள் என்று பொருள். இத் தாவரம் நிமிர்ந்து பசுமையாக 1 மீ உயரம் வரை வளரக்கூடிய புதர்ச் செடியாகும். கனகாம்பரத்தில் 20-25 சிற்றினங்கள் உள்ளன. இச்சிற்றினங்கள் இந்தியா, ஆஃப்ரிக்கா, மட காஸ்கர் முதலிய இடங்களில் பரவியுள்ளன. இந்தி யாவில் தக்காணத்திலும் கோதாவரிக்குத் தெற்கிலும் காணப்படுகின்றன. நிமிர்ந்த தண்டில் இலைகள் சாதாரண விளிம்புகளுடனோ அலைகள் போன்ற விளிம்புகளுடனோ அமைந்துள்ளன. இலைகள் சற்று நீண்டும், மென்மையாகவும் உள்ளன. இலைகள் தனித்தவை, குறுக்கான இலையடுக்கத்துடன் இருப் பவை. இலையடிச் செதில்கள் இல்லை. மலர்கள் அடர்ந்து, காம்பற்று, தூவி வகை மஞ்சரியில் அமைந்துள்ளன. அல்லிவட்டம் சிவப்பு. இளஞ்சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு ஆகிய வண்ணங்களில் காணப்படும். பூவடிச் செதில்கள் சற்றுப் பெரியவாகவும், பசுமையாகவும், இலைவடிவில் உள்ளன. மலர்கள் முழுமையான இருபால் மலர்களாக உள்ளன. புல்லி வட்டத்தில் 5 சிறிய புல்லிகள் இணைந்து அமைந் துள்ளன. பெரும்பாலும் அடுக்கிதழ் ஒழுங்குடையவை. அல்லி வட்டம் அல்லிகள் இணைந்து கீழ்ப்புறத்தில் குழல் போன்ற அமைப்புடன் சற்று வளைந்தும் கழுத்துப் பகுதிக்கு மேல் அகன்று விரிந்தும் காணப் படும். பூலில் நான்கு மகரந்தக் கேசரங்கள் உண்டு. மகரந்தக் கம்பிகள் அல்லியுடன் இணைந்தவை, இரு ணைகளாக அமைந்தவை (2+2). இவற்றில் 2 நீளமாகவும், எஞ்சிய 2 குட்டையாகவும் (didynamous) இருக்கும். 2 மகரந்தப் பைகள் இரண்டு அறைகளுடன் சம மற்ற மட்டங்களில் உள்ளன. உள்முகமாக வெடிக்கும்