பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 குழியுடலிகள்‌

86 குழியுடலிகள் 2 ஸ்டீரிட்ரா சுாங்கிய சைறட்ரா 4 குறிமுயல் இவற்றின் குட்டிகள் பிறக்கும்போது கண்கள் மூடியும் உடல் மென்மையான மயிரால் போர்த்தப் படாமலும் காணப்படுகின்றன. பெண் குழிமுயலின் கருவுறுகாலம் ஒரு மாதம் ஆகும். குழிமுயல் ஓர் ஆண்டில் 36 குட்டிகளை ஈன்றெடுக்கும். ஆண்முயல் ஒன்றுக்கு மேற்பட்ட பெண் முயல்களுடன் உடலுறவு கொள்ளும் பழக்கமுடையது. இவ்லினங்களின் ஆயுட் காலம் பதின்மூன்று ஆண்டுகள் ஆகும். குழிமுயல்கள் தாவர உண்ணிகள் ஆகும். இவை புல் போன்ற தாவரங்களையும் காரட், முள்ளங்கி போன்ற காய்கறிகளையும் இலைகள், சில பழங்கள் ஆகியவற்றையும் உண்ணும். ஆனால் காட்டுச் சூழ் நிலை மண்டலத்தின் உணவுத் தொடரில் தாவர உண்ணிகள் என்னும் நுகர்வோர் உயிரிகளாக டாம் நிலையில் இடம்பெறுகின்றன. ரண் இவ்விலங்குகளின் தோல்கள் உடைகள் செய் யம் பயன்படுகின்றன. வீடுகளிலும் அன்புடன் வளர்க்கப்படுகின்றன. மேலும் உயிரியல், மருத்துவ ஆய்வுகளுக்கும் பயன்படுகின்றன. குழியுடலிகள் - பி. இராதா த்தொகுதியைச் சார்ந்த உயிரினங்கள் நீரில் வாழ் பவை. இவற்றின் உடல் பல செல்களால் ஆனது. இவை திசுக்கள் அமைப்பைக் கொண்டுள்ளவை. முக்கியமான உயிரிகளுள் ஹைட்ரா, ஜெல்லி மீன், கடல் சாமந்தி போன்றவை குறிப்பிடத்தக்கவையா கும். ஹைட்ரா இனம் நன்னீர் நிலைகளான குளம், குட்டைகளில் செடிகளிலோ, கற்களிலோ ஒட்டிக் கொண்டு நிலையான வாழ்க்கை நடத்தும் உயிரியா கும். ஜெல்லிமீன், கடல்சாமந்தி போன்ற உயிரிகள் கடலில் வாழும். 1. அடித்தட்டு 2 . அண்டச்சுரப்பி 3. லிந்துச்சுரப்பி 4. வாய் 5. றைப்போண்டோம் 6. ஊர் நீட்சிகள் கடல் சாமந்தி 5 சுருங்கிய நிலை 4 56 3 7 நீண்ட நிலை 22 1 B 8 1.யாதத்தட்டு 2, ஸ்காபஸ் 3. கழுத்து 4.எலும்புத்தலை 5.உணர் நீட்சி 6 வாய் 7. அக்காவிஉயங்கள் 8. சின்சிலைடுகள் இவ்வுயிரினங்களின் உடல் உருளையாகவோ, கிண்ணம் போன்றோ காணப்படும். இவ்வுயிரிகள் உடலமைப்பில் ஆரச்சமச்சீர் கொண்டவை. இரு- ஆரச்சமச்சீர் கொண்டவையாகவும் உள்ளன. இவற்றின் உடலின் உட்பகுதியில் வயிற்றறை அல்லது குழிக்குடல் என்னும் ஓர் அறை மட்டும் காணப்படும். இக்குழிக்குடல் (coelenteron), படிமலர்ச்சி அடைந்த மேலினங்களின் உணவுக் குழாயையும் அதனைச் சுற்றியுள்ள உடற்குழியையும் குறிக்கிறது; இவ்விரண் டும் ஒன்றான ஓர் அமைப்பைக் கொண்டுள்ளன. இக் குழிக்குடல் சிறு துளை போன்ற வாய் மூலமாக வெளியே தொடர்பு கொண்டிருக்கும். வாய்ப்பகுதி சற்றுக் குவிந்து உயர்ந்து காணப்படும். குவிந்த பகுதி யைச் சுற்றி விரல் போன்ற பிடிப்பான்கள் வட்ட வடிவில் அமைந்திருக்கும். குவிந்த வடிவமுள்ள பகுதி வாயின் கீழ்ப்பகுதி எனப்படும். மலப்புழை இல்லை. குழியுடலிகளின் உடல் திசுக்கள் இரண்டு வகைப்படும். அவை ரண்டு அடுக்காகக் காணப் படுகின்றன. உடலின் வெளிப்புறம் காணப்படும் அடுக்கிற்குப் புறப்படை (ectoderm) என்றும் உட் புறம் காணப்படும் அடுக்கிற்கு அசுப்படை (endoderm)