குழியுடலிகள் 87
என்றும் பெயர். இவ்விரண்டு அடுக்கிற்கும் இடையில் உள்ள உயிரற்ற கூழ் போன்ற பொருளுக்கு மீசோ கிளியா என்று பெயர். புறப்படை, இந்த உயிரினங் களுக்குப் பாதுகாப்பாக அமைத்துள்ளது. அகப்படை உணவு செரிக்கக்கூடிய எல்லாவித செரிமான நீரை யும் சுரப்பதுடன் உணவை உள் உறிஞ்சவும் P.தவு கிறது. இருவகைப் படைகளாலான உயரினங்களுக்கு இருபடை (diploblastic) விலங்குகள் என்று பெயர். குழியுடலிகளில் சில் வகை ஒரே இடத்தில் நிலையாக ஓட்டிக்கொண்டு வாழ்க்கை நடத்துவன. சில உயிரிகள் அங்கும் இங்கும். நீரில் நீந்தி இயங்கும் தன்மை உடையன். சில தனியாகவும், சில கூட்டாக வும் சேர்ந்து வாழும். பெரும்பாலும் குழியுடலிகள் கொட்டும் செல் புறப்படையில் உயிரிகள் களை உடையவையாகும். கொட்டும் செல்களையுடைய {nematocysts) நிடேரியா (Cnidaria) என்றும், கொட்டும் செல்கள் ல்லாத உயிரிகள் அதிடேரியா Acnidaria) என்றும் பிரிக்கப்பட்டுள்ளன. அநிடேரியா உள் தொகுதியைச் சேர்ந்த உயிரிகள் தனித்து வாழும் இயல்புடையவை. நிடேரியா தம் கொட்டும் செல் களின் உதவியால் சிறிய உயிரிகளை உணர்விழக்கச் செய்து பின்னர் உணவாக உட்கொள்ளும். 1. ஒபீலியா 1. வாய் 2. மேன்பிரியம் 3 லித்தோ கிஸ்ட் 4. இனச்செல் அகம் 5. ஆரசு கால்வாய் 8. குடை- கீழ்ப்பரப்பு ஒபீலியா போன்ற கூட்டாத வாழும் சில வகைக் குழியுடலிகள் புறப்படை சுரக்கும் நீர்மத்தைக் கொண்டு உடலைச் சுற்றிப் பாதுகாப்பான உயிரற்ற உறையை உண்டாக்கும் திறன் உடையவை. இவ் வுறைக்குப் பெரிசார்க் (perisarc) என்று பெயர். இவ்வுறை ஆங்காங்கே புறப்படையுடன் சிறு சிறு வினையங்களால் ணைக்கப்பட்டிருக்கும். 3 குழியுடலிகள் 97 உணவு. குழியுடலிகள் நீரில் காணப்படும் நுண்ணிய உயிரினங்களை உணவாகக் கொள்ளும். இவ்ளகை நுண்ணுயிரிகள் குழியுடலிகளின் உணர் நீட்சிகளில் படுமானால், தம் கொட்டும் செல்களின் உதவியோடு அவற்றைச் செயலிழக்கவோ உயிரிழக் கவோ செய்து விடும். பின்னர் பிடிப்பான்களின் உதவியால் வளைத்துப் பிடித்துண்ணும். உணவு குழிக்குடலினை அடைந்து அங்குச்செரிமான நீரினால் செரிக்கப்பட்டு உட்படைச் செல்களால் றிஞ்சப் படுகிறது. செரிமானமாகாத பொருள் வாய் வழியே வெளியேற்றப்படுகிறது. சுவாசித்தல். இவை நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனை உட்கொள்ளும் திறன் கொண்டவை. நீரில் உள்ள ஆக்சிஜனை ஒவ்வொரு செல்லும் உட் கொண்டு கார்பன் டைஆக்சைடை வெளிவிடும். கழிவுப் பொருள்களும் செல்லின் வழியாக ஊடுருவி வெளிச் செல்லும். நரம்பு மண்டலத்தைப் பொறுத்தவரை குழி யுடலிகளில் தான் இது முதலில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. நரம்பு மண்டலம் நரம்புச் செல்களால் ஆனது. பலகோண நரம்புச் செல்களிலிருந்து வெளி வரும் நரம்பிழைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு பார்ப்பதற்கு ஒரு வலைப்பின்னல்போல் காணப்படும். இதனால் ஓர் இடத்தில் ஏற்படும் உணர்வு மற்றப்பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படு கிறது. உணர்விற்குத் தகுந்தவாறு உடல் இயக்கம் மாறுபடுகிறது. மூளை போன்ற அமைப்பு எதுவும் இல்லை. சில உறுப்பும், பெண் இவற்றில் சுலவி இனப்பெருக்கம், கலவியிலா இனப்பெருக்கம் எனும் இருவகை காணப்படுகிறது. உயிரிகள் இருபாலிகள். இதில் ஆண் இன உறுப்பும் ஒரே உயிரியில் காணப்படும். இவை வெவ்வேறு காலக் கட்டங்களில் முதிர்ச்சி அடைகின்றன. இதனால் தற்கருவுறுதல் தடுக்கப்படுகிறது. விந்துச் சுரப்பி வெடித்து வெளி யாகும். விந்தணு வேறு ஓர் உயிரியின் சினை முட்டையை அடைந்து கருவுறச் செய்கிறது. கலவியிலா இனப்பெருக்கம் மிக இயல்பாகக் காணப்படுகிறது. உடலின் வெளிப்புறம் பிதுக்கம் அல்லது மொட்டு ஏற்பட்டு அது பெரிதாக வளர்ந்து அதன் தலைப்பிலிருந்து உணர்நீட்சிகள் தோன்றிக் கிளைகள் போன்று தோற்றமளிக்கும். பின்னர் தாய் உடலில் இருந்து பிரிந்து தனியாசி வேறோர் இடத்தில் நிலை பெற்றுத் தன் வாழ்க்கையைத் தொடங்கும். உறுப்பு இழப்பு மீட்டல் (regeneration). இவ்வகை விலங்குகள், தம் உடலின் இழந்த பகுதியை மீண்டும் முழுதும் வளர்த்துக் கொள்ளக்கூடிய தன்மையைக் கொண்டவை. எத்தனைத் துண்டுகளாக வெட்டி 1