பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 குழைம ஆய்வு

94. குழைம ஆய்வு மீ. அவ்வளிமத்தில் அதன் அலை நீளம் 359.0 நா.மீ எனவும் do/da 3.81× 1013 மீ நொடி. எனவும் அறியப்பட்டுள்ளன. எனவே, அவ்விரு அலைத்தொடர்களின் குழுத்திசைவேகம் = 1.83×108 மீ/நொடி 359X10 x 3.81x1013 மீ] நொடி = 1.6910° மீ / நொடி ஆகும். வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகத்தைக் காண்பதற்கான சுழல் ஆடி முறையைப் பயன்படுத்தி மைக்கல்சன் என்பார் கார்பன் டைசல்பைடில் இந்நிற ஒளியின் திசை வேகத்தை அளவிட்டபோது இதே மதிப்பையே பெற்றார். எனவே, அம்முறையானது உண்மையில் குழுத்திசை வேகத்தையே அளவிடுகிறது என்பதை அறியலாம். ரா.நாகராஜன் நூலோதி.D. S. Mathur, Mechanics, Vikas Publishing House Pvt. Ltd., New Delhi.; R. A, Waldrom, Waves and Oscillations, Affiliated East- West Press Pvt. Ltd., New Delhi. குழைம ஆய்வு காண்க: குழைமப் பண்பு குழைமப் பண்; தகைவு செலுத்தப்படும்போது திண்மங்களில் நிலை யான வடிவ, பருமன் மாற்றங்கள் தோற்றுவிக்கப் படும். தன்மையே குழைமப்பண்பு (plasticity) எனப்படும். இத்தன்மை களிமண், களிமண் கலந்த மண் வகைகளில் பரவலாகக் காணப்படுவதால் களிமப் பண்பு எனவும் அறியப்படுகிறது. முற்றிலும் குழைமப் பண்புடன் விளங்கும் திண்பங்கள் சிலவே. ஆனால் மிகப் பெரும்பாலான திண்மங்கள் மீள்மை. குழைமை என இரு பண்புகளையும் (வெவ்வேறு தகைவு நிலைகளில்) கொண்டு விளங்குவன. இத்திண் மங்கள் மீட்சி வரம்புக்குள் முற்றிலும் மீள் பண்புடன் விளங்கும். தகைவு மீட்சி வரம்பை அடையும்போது இவை நெகிழ்ச்சி அடைகின்றன. நெகிழ்ச்சிக்குப் பின் நெகிழ்ச்சி நிலையின் (yield point) தகைவு நிலையாக இருக்கும் போது, ஒரு வரம்பு வரை திரிபுகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு போகின்றன. இந்நிலை குழைமை எனப்படும். குழைம நிலையில், தகைவின் அளவில் மாற்றம் இல்லையாதலின் குழைம நிலை, திரிபு வரம்புகளால் வரையறுக்கப்படுகிறது (எ கா. மென் எஃகின் நெகிழ்ச்சி நிலைத் திரிபு 0.0013; நெகிழ்ச்சித்தகைவு 3401 200 200- 00 நி (மி.மீ.1) மீட்சி வரம்பு 6.19127 D016 படம் 1. மென் எஃகின் தோராய) தகைவு திரிபு உறவு