பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 குள்ளத்தன்மை

100 குள்ளத்தன்மை தயாரிக்கப்படுகிறது. உயர் வேகத்தைக் கூட்ட 120°-125°C இல் தயாரிக்கலாம். இதன் கரைப் பான், உலர்த்தி ஆகியன வெண்சாராயம், பென்சீன் அல்லது டொலுவீன் கலவையால் செய்யப்படும். எண் - 92 கனிமப் படலம். இதுவும் சாம்பல் நிற முள்ள எண்ணெய், கிளிப்புதல் உலர்த்திக் கலந்த காற்று வரும் கனிமப் படலமாகும். இது மின் பொறி களில் உள்ள நிலையான சுருணைகளின் புறப்பூச்சுக்குப் பயன்படும். மின் காப்பிட்ட பகுதிகளின் மேல் இறுதிப் பூச்சு இட, இது அறை வெப்பநிலையிலேயே உலரும். உலர்த்தியும் இதன் கரைப்பானும் மேல் உள்ள கனிமப் படலத்தில் பயன்படும் பொருள்களே. கனிமப் படலம். இது செந்நிற, காற்றில் உலரும் கனிமப் படலம். இதில் இரும்புச் சிறுமம் என்ற நிறமி உள்ளது. மின் திரட்டியின் (commutator) கழுத்துப் பட்டியின் வெளிப் பிதுங்கிய பகுதிகளுக்கு மின் காப் பிட உதவுகிறது. எண் PK a -14 கனிமப் படலம். து ஒரு சிலிக்கான் அடி எண்ணெய், வெப்ப எதிர்ப்புத் திறமுடைய கனிமப் படலம், இது மின்பொறிகளின் நிலையான 180°C வெப்பநிலையில் பணிபுரியும் பகுதிகளின் மேல் பூசப் பயன்படுகிறது. டொலுலீன் கரைப்பானாகவும் பயன்படுகிறது. எண் 225 (4100) சேர்மம். 湿 ண்ணெய், ரோசின், பிட்டுமன் கலந்த சேர்மம். இது மின்காப்பும் உயர் மின்காப்பு வலிமையும், மிகுந்த நீர் எதிர்ப்புத் திறனும் தரும். எனவே, மின் பொறிச் சுருணைகளுக்கு அக ஊட்டம் தரப் பயன்படும். இதன் ஒப்புடைய இயக்க வெப்பநிலை 100°C -105°C ஆகும். எண் 225 (4200) சேர்மம். இது 225 சேர்மத்தின் உலர்த்தி. தாழ்ந்த உருகுநிலை உடையது. குள்ளத்தன்மை இது உலோ. செந்தமிழ்க்கோதை மே.ரா.பாலசுப்பிரமணியன் வாகு, சரியான குன்றிய வளர்ச்சி என்னும் பொருளைக் குறிக்கும் சொல்லாகும். ஊட்டமின்மை, கருவளர்ச்சியின் போதே ஏற்படும் ஊனங்கள், உடலின் மற்ற நோய்கள் என்பன குன்றிய வளர்ச்சியின் காரணங்கள் ஆகலாம். (எ.கா: டர்னர் நோயியம் மேலும் வளர்சிதை மாற்ற நோய்கள், இரத்தம் சார்ந்த நோய்கள், பிறவி இதய ஊனங்கள், சீர் கெட்ட உணவு உள்ளேற்பு (எ.கா: சீலியாக் நோய்), எலும்பு நோய்களில் குருத்தெலும்பு வளர்ச்சியின்மை. நாளமில்லாச்சுரப்பியின் குறைபாடுகளில் பிட்யூட் டரிச் சுரப்பியின் நோய், பிட்யூட்டரிச் சுரப்பியின் மந்தநிலை, சர்க்கரை நோய், மரபு வழிக் குறைபாடு கள் இவற்றுடன் கல்லீரல், சிறுநீரகப் பாதிப்புகள் போன்ற நாட்பட்ட நோய்களும் அடங்கும். தேவையான ஆய்வுகள். எலும்பின் வயதைக் கொண்டு நிர்ணயித்தல்: (பிட்யூட்டரிச் சுரப்பியின் வளர்ச்சி ஹார்மோன் சுரப்புக் குறைவாக இருப்பின் எலும்பின் வளர்ச்சி தாமதப்படுத்தப்படுகிறது ) வளர்ச்சி ஹார்மோனின் அளவைக் கணித்தல், சர்க் கரையின் அளவைக் கணித்தல், தைராய்டு சுரப்பியின் பணியைக் கணித்தல் ஆகியவை குன்றிய வளர்ச்சியின் காரணத்தை அறுதியிட உதவும். மருத்துவம். குன்றிய வளர்ச்சியின் காரணத்தைப் பொறுத்து மருத்துவம் அமைகிறது. குள்ளநரி . சுவயம்ஜோ ா தி கேனிடே எனும் நாய்க் குடும்பத்தைச் சேர்ந்த பாலூட்டிகளில் நாய், நரி, ஓநாய்கள் தொகுக் கப்பட்டுள்ளன. வை நியூசிலாந்தைத் தவிர உலகில் எங்கும் காணப்படுகின்றன. இத்தொகுப்பு விலங்குகளில் செவிப்பறை முண்டெலும்பு சற்றுத் தாழ்வாகக் காணப்படும். செவிப்பறைக் குழி தடுப்புச் சுவரால் பிரிக்கப்படாமல் இருக்கிறது. பிடரி நீட்சி கள் மிகச்சிறியவாகவோ, குன்றியோ, முற்றிலும் இன்றியோ காணப்படுகின்றன. சீகம் எனப்படும் குடல் நீட்சி மிகச் சிறுத்துக் காணப்படுகிறது. குள்ள நரி, சிவப்பு நரி, காட்டு நரி எனும் மூன்று வகைகள் இந்தியாவில் காணப்படுகின்றன. குள்ள நரி இந்தியாவின் சமவெளிப் பகுதிகள் எங்கும் காணப்படும். கரும்பழுப்பு நிறமுடைய இவற்றின் வால் நுனியில் கறுப்பு நிறத்திட்டுக் காணப்படும். இவற்றின் கால்கள் நீண்டு வலுவாக இருக்கின்றன. முன்காலில் அல்லது 5. விரல்களும். பின்காலில் நான்கு விரல்களும் உள்ளன. விரற்பதிவு முறையில் விரல்கள் அனைத்தையும் தரையில் பதித்து நடக்கின்றன.பல் வாய்பாடு: வெட்டும் பற்கள் 3/3, கோரைப்பற்கள் 11. முன்கடைவாய்ப் பற்கள் 4/4. பின்கடைவாய்ப் பற்கள் 213. இந்நரிகள் பொதுவாக ஊருக்குள்ளும், ஊர்களுக்கருகேயுள்ள புதர்களிலும், விளை நிலங்கள் அருகிலும் காணப்படுகின்றன. காடு களிலும் பாலைவனப் பகுதிகளிலும் காணப்படுவ தில்லை. இவை தரையின் பொந்துகளிலும் புதர் களிலும் வாழ்கின்றன. இவற்றின் வளைகளில் பல வழித்துளைகள் காணப்படுகின்றன. வை வசிக்கும் பொந்துகள் தரைமட்டத்திலிருந்து 60 - 80 செ.மீ. ஆழத்தில் அமைந்திருக்கும்.