பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 குளிர்‌ பதனிடுதல்‌

108 குளிர் பதனிடுதல் பரா பனி நிலையில் பொருள்களைச் சேமித்துப் மரித்து வைக்கும் முறைக்குக் குளிர்பதனச் சேமிப்பு (cold storage) என்று பெயர். எந்த அளவுக்குக் குளிர்ந்த அல்லது உறை வெப்பநிலையில் பொருள் களை வைத்திருக்க இயலுமோ அந்த அளவிற்கு அப்பொருள்களின் பயன்தரும் காலம் நீட்டிக்கப் படலாம். இத்தகைய வெப்பநிலைகள் அப்பொருள் களின் உறை வெப்பநிலைக்குக் கீழ் இருந்தால் அத்தகைய சேமிப்பிற்கு உறை பதனச் சேமிப்பு என்று பெயர். பெரும் அளவில் பொருள்களைச் சேமித்து வைக்கக் காப்பிடப்பட்ட (insulated) கட்டத்திற்குள் வெப்ப மாற்றீடற்ற உறை - குளிர் சேமிப்புக் கிடங் குகள் நிறுவப்பட்டிருக்கும். இதற்கெனத் தனிப் பட்ட குளிர்பதனக் கருவிகளும், அமைப்புகளும் அமைந்திருக்கும். இத்தகைய கிடங்குகளில் பழம், ரொட்டி, இறைச்சி, தயாரிக்கப்பட்ட உணவு வகை களைக் குளிர் நிலையில் வைத்திருக்கவும் உடனடி உறைநிலை ஏற்படுத்தவும் வசதிகள் இருக்கும். கே.ஆர். கோவிந்தன் குளிர் பதனிடுதல் (தாவரவியல்) தாவரங்கள் பருவங்களுக்கு ஏற்றவாறு பூக்கும். இவ்வாறு பருவ காலங்களுக்குத் தகுந்தவாறு பூப்ப தற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுவது ஒளிக் காலம் (photo period) ஆகும். இருப்பினும், வெப்ப அளவும் பூப்பதைக் கட்டுப்படுத்துகிறது என்பது காஸ்னர் என்பார் தானியப் பயிர்களில் நடத்திய ஆய்வுகளின் விளைவாகத் தெரிய வந்தது. தானிய வகைகளில், கோதுமை, ரை (Rye) போன்றவற்றை அவை விதைக்கும் பருவத்தைப் பொறுத்துக் குளிர் வகைகள், இளவேனிற்கால வகைகள் என அருவகைகளாகப் பிரிக்கலாம். குளிர்காலக் கோதுமையையும், ளவேனிற்காலக் கோதுமையை யும், இளவேனிற் காலத்தில் விதைத்தால் கோடையில் பூத்துப் பயன் கொடுக்கின்றன. 价 குளிர்காலக் கோதுமையைக் காலந்தாழ்த்து இளவேனிற் காலத்தில் விதைத்தால் கதிர் தோன்றுவது பாதிக்கப்பட்டு வளர்ச்சிப்பருவத் திலேயே நிலைத்துவிடும். இதிலிருந்து குளிர்கால வகைகளுக்கு அவற்றின் முளைக்கும் காலத்திலோ பின் பருவத்திலோ குளிர்ச்சி தேவை எனத் தெரிய வந்தது. காஸ்னர் கண்டுபிடிப்பிற்குப் பின் சோவியத் ஒன்றியக் குடியரசில் மிகப் பெருமளவில், குறிப்பாக வணிகப் பயிர்களில் இதன் பலனை ஆய்ந்தனர் அங்குப் பெரும் பகுதிகளில் கடுமையான குளிர் ருப்பதால் மிகு பலனைக் கொடுக்கவல்ல குளிர் காலவகைக் கோதுமையை விதைக்க முடியவில்லை. ஆகவே லிசன்கோ என்பார் ஒரு புதிய வழிமுறை யைத் தோற்றுவித்தார். இதில் குளிர்காலவகைக் கோதுமைக்குத் தேவைப்படும் குளிர்ச்சியின் தேவை விதைக்கப்படும் முன்னரே அதற்குக் கொடுக்கப்படு கிறது. இம்முறையில் விதையை நீரில் ஊறவைத்துச் சிறிதளவு முளைப்பு ஏற்பட்' வுடன் அதனைக் குளிர்ச்சிப்படுத்துவதற்காகப் படக்கட்டிகளின் அடி யில் புதைத்து வைத்து ஸ்தை ந்தனர். இவ்வாறு நேர்த்தி செய்த விதையை இளவேனிற்காலத்தில் விதைத்தபோதும் அதே பருவத்தில் பூத்துப் பலன் கொடுத்தது. இச்செய்முறையே குளிர் பதனிடுதல் (vernalisation) என்று வழங்கப்பட்டது. இதுவே, விரிவான முறையில், விதையைக் குளிர் பதனிடு தலைத் தவிர, வேறு வளர்ச்சிப் பருவங்களில் கொடுக்கும் போதும் வழங்கப்பட்டு வருகிறது. பூப்பதற்குக் குளிர்ச்சி தேவைப்படும் தாவர வகை கள். பூப்பதற்குக் குளிர்ச்சி தேவைப்படும் தாவரங் களில் கோதுமை, ரை நீங்க, குளிர் பருவ,ஒருபருவ, இருபருவ மற்றும்பல பருவத்தாவரங்கள் போன்றவை யும் உள்ளன. குளிர் பகுதிகளில் வளரும் ஏய்ரா பிரேகாஸ் (Aira praecox), இரோஃபைலா வர்னா (Erophila verna), மையோசாடிஸ் டிஸ்கலர் (Myoso- tics discolour), வரோனிகா அக்ரஸ்டிஸ் (Veronica agrestris) என்பவை குறிப்பிடத்தக்கவை. இவை தவிர பயிர்வகைகளான பீட் (Bera vulgaris) செலரி, இலைக்கோஸ், பட்டாணி, சாமந்தி ஆகியவையும் அடங்கும். , குளிர் பதனிடுதலின் வினையியல் தன்மைகள். குளிர் பதனிடுதலின் விளைவாக ஏற்படும் வினையியல் விளைவுகளைக் கிரிகாரி பர்விஸ் என்போர் குளிர் பருவ ரையிலும், மெல்செர்ஸ், லாங் என்போர் ஹென் பேன்னிலும், வெல்லன்சிக் என்பார்பலவகைத்தாவரங் களிலும் விரிவான ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள். கிரிகாரியும் பர்விசும் இம்மாற்றங்கள் கருவணுவில் (embryo) தோன்றுகின்றன; முளைசூழ்தசையில் (endosperm ) அல்ல என்று குறிப்பிட்டனர். செலரி, பீட், சாமந்தி போன்றவற்றில் முதிர்ந்த பருவத்தில் தண்டின் நுனிப்பகுதி குளிர் பதனிடப்பட வேண்டும். ஒளிநாட்டத்தில் (photoperiodism) இலைப் பகுதிகள் நுகர்திறனுடன் இருக்கையில், தண்டுப் பகுதியின் நுனியில் இந்நுகர்திறன் இருக்கிறது. வெல்லன்சிக்கின் கூற்றுப்படி, குருத்து இலைகளும் குளிர் பதனப்படுத் தலுக்கு இலக்காகின்றன. மாறாக, முதிர்ந்த இலைகள் குறிப்பாக வளர்ச்சிப் பருவம் முடிவடைந்த நிலையில் பாதிக்கப்படுவதில்லை. வளர்ச்சியும் பிரிவுமுடைய திசுவறைகளைக் கொண்ட திசுக்கள் மட்டுமே குளிர் பதனஞ்செய்வதற்கு இலக்காகின்றன என்று வெல்லன்சிக் உறுதியாகக் கருதினார். பெருவாரியான வகைளில் பலனளிக்கக்கூடிய வெப்பம், நீர் உறையும் நிலைக்குச் சற்று மேல்