குளிர்விப்புக் கோபுரம் 109
பூத் அதாவது 1-2° C ஆகவும், -1°C - 9'C வரையிலான வெப்பம் ஏறக்குறைய இதே பலனைக் கொடுக்க வல்லதாகவும் இருக்கும். இதிலிருந்து திசுவறைகள் உறையும் நிலையை அடைய வேண்டியதில்லை; மாறாக, தேவையான அளவு செயலியலில் மாற்றங் கள் ஏற்பட்டால் போதும் என்பது தெரிய வருகிறது. குளிர் பதனிடுதல் குறுகிய காலத்தில் தோன்றும் தன்மை குளிர்ச்சியின் வரம்பு ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. குளிர் பதனிடுதலைப் பலநாள் செய்யும்போது பூவின் தோற்றம் விரைவில் ஏற்படுகிறது. குறைந்த நாள் (7-11 நாள்) அளிக்கப்படும்போது பலன் படும் தன்மை தோன்ற வாய்ப்பு ஏற்படுகிறது. இத்தன்மை கால அளவு நீட்டிப்பிற்குத் தக்கவாறு படிப்படியாக அதிகரிக்கிறது. . அளவு, 4 கால ஏற் விதைகளை நான்கு நாள் உயர் வெப்பத்திற் குள்ளாக்கி(25° - 40°C) இக்குளிர் பதனிடுந்தன்மையை மாற்றலாம். இவ்வாறு செய்யப்பட்ட விதை, எதிர்க் குளிர் பதனிடப்பட்ட விதை (devernalised seed) எனப்படும். மிகு கால அளவு குளிர் பதனிடப்பட்ட விதைகளில் எதிர்மாற்றம் ஏற்படுத்துவது கடினம். முழு அளவு குளிர் பதனப்படுத்தப்பட்ட விதையில் உயர் வெப்பம் செலுத்தப்பட்டாலும் பலன் ஏற்படு வதில்லை. குளிர் பதன எதிர்மாற்றம் செய்யப்பட்ட விதைகளை மீண்டும் குளிரவைத்துப் பதனப்படுத்த முடியும். ஒருமுறை ரை போன்ற பயிர் வகைகளில் குளிர் பதனப்படுத்தப்பட்டால் அதன் பலன் புதிதாகத் தோன்றும் எல்லாத் திசுக்களிலும் பரவி யிருக்கும். குளிர் பதப்பட்ட பகுதி நீக்கப்பட்டா லும் புதிதாகத் தோன்றும் பகுதிகளிலும் இதன் பலன் காணப்படுவதால், பழைய திசுவறைகளிலிருந்து புதி தாகத் தோன்றும் திசுவறைகளில் இந்தத் தூண்டுதல் காணப்படும். மேலும் இப்பலன் சிறிது சிறிதாகக் குறைவதில்லை. குளிர் பதனப்படுத்தலில் தோற்றுவிக்கப்படும் பூக்கும் தன்மை. குளிர் பதனப்படுத்தலைப் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தபோதும் இதைச் சார்ந்த வினையியல் மற்றும் உயிர் வேதி யியல் செயல்கள் இன்னும் தெளிவாக்கப்படவில்லை. பூவின் தோற்றத்தை உண்டாக்கும் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி ஊக்கி (growth regulator) இருக்குமா என்பது சரியாகக் குறிப்பிடப்படவில்லை. எனினும் ஒருவகைக் கருதுகோள் தொடர்ந்து இருந்து வரு கிறது. ஒட்டுக் கட்டுதல் (grafting) சோதனை வாயி லாக மெல்செரஸ், லாங் என்ற ஆராய்ச்சியாளர் உட்செலுத்தப்படும் பூக்களைத் தோற்றுவிக்கும் ஊக்கி (flowering stimules) வகையான வெர்னாலின் என்ற ஒன்று குளிர் பதனப்படுத்துவதால் தோற்றுவிக்கப் படுகிறது என்று கருதினர். பூவைத்தோற்றுவிப்பதில் குளிர்விப்புக் கோபுரம் 109 வகை பயன்படுகிறது எனக் கருதப்படும் ஜிப்ரிலிக் அமில மும், வர்னாலின் ஊக்கியும் ஒன்றா என்ற ஐயமும் இன்னும் தொடர்ந்து நீக்கப்படாமல் இருக்கிறது. பூத்தோன்றுதலுக்கு செய்வன ஊக்கிகளே என்று பரவலாகக் கருதப்பட்டு வந்தபோதும் இந் நாள் வரை அதைப் பிரித்தெடுக்க முடியாத நிலையே இருந்து வருகிறது. ம. மூசா ஷெரீப் தாவரங்களின் வாழ் வியல், தமிழ் வெளியீட்டுக் கழகம், சென்னை, 1967. நூலோதி. எஸ். சுந்தரம், குளிர்விக்கும் அமைப்பு காண்க: குளிர்வூட்டி குளிர்விப்புக் கோபுரம் சூடான நீருடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு கொள்ளும் வளிமண்டலக் காற்று,கழன்று செல்லக்கூடிய கோபுரம் அல்லது கட்டட வடிவிலுள்ள அமைப்பே குளிர்விப்புக் கோபுரம் (cooling tower) எனப்படும். இவ்வாறு வளிமண்டலக் காற்று, சூடான நீருடன் தொடர்பு கொள்வதால், அந்நீர் குளிர்விக்கப் படுகிறது. குளிர்விப்புக் கோபுரம், குளிர்பதனம் (refrigeration) நீராவித்திறன் ஆக்க அமைப்புப் போன்ற வெப்ப இயக்கவியல் செயல்முறைகளில் (thermodynamic process) வெப்ப உறிஞ்சகமாகப் பயன்படுகிறது. இங்கு வெப்பம் கடத்தும் பாய்ம மாகச் செயலாற்றும் நீர், அதன் வெப்பத்தை வளி மண்டலக் காற்றிற்குக் கொடுத்துவிடுவதால், குளிர்ந்து, மீண்டும் திறன் ஆக்க அமைப்பிற்குள் (power generating system} செலுத்தப்படுகிறது. இதனால் நீரைக் குளிர்விப்பதற்கு ஏற்படும் செலவு குறைகிறது. வகைகள். பொதுவாக இரு வகையான குளிர் விப்புக் கோபுரங்கள் பயன்படுகின்றன. ஒரு வகையில் வெப்பம், சூடான நீரிலிருந்து குளிர்ந்த காற்றிற்கு ஆவியாகும் முறையில் கடத்தப்படுகிறது. இவ்வகை, ஆவியாகும் வகை அல்லது ஈரக் குளிர்விப்புக்கோபுரம் (wet cooling tower) எனப்படும். மற்றொரு வகையில், வெப்பம் எளிதான வேறு முறையில் கடத்தப்படு கிறது. இது ஆவியாகாத வகை அல்லது உலர் குளிர்விப்புக் கோபுரம் (dry cooling tower) எனப் படும். இவ்விரு வகைகளும் ஒன்றாகப் பயன் படுகின்றன. இவ்வகை, ஈர - உலர் கோபுரங்கள் எனப்படும். குளிர்விப்புக்