பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளிர்விப்புக்‌ கோபுரம்‌ 111

குளிர்விக்கும் முறை. ஆவியாகும் முறையில் சூடான நீர், குளிர்ந்த காற்றுடன் நேரடித் தொடர்பு கொள்கிறது. குளிர்விப்புக் கோபுரத்தில் காற்று நுழையும்போது, அதன் ஈரப்பத அளவு தெவிட்டு நிலைக்குக் குறைவாக உள்ளது. அக்காற்று. குளிர்விப்புக் கோபுரத்தை விட்டு உயர் வெப்பநிலை யோடும். தெவிட்டு நிலை ஈரப்பத அளவோடும் வெளியேறும். நீரிலிருந்து வெப்பத்தை எடுத்துக் கொள்வதால், காற்றின் வெப்பநிலை உயர்கிறது. மேலும், நீரை (ஈரப்பதம்) உறிஞ்சிக் கொள்ளும் திறனும் அதிகரிப்பதால் ஆவியாதல் தொடர்ந்து நடைபெறுகிறது. மேற்கூறிய காரணங்களால், குளிர் விப்புக் கோபுரத்தில் உட்புகும் காற்று, தெவிட்டு நிலையில் இருந்தாலும் ஆவியாதல் முறையில் குளிர் விப்பு நடைபெறக்கூடும். கடத்தப்படும் மொத்த வெப்பத்தில் 65-75% ஆவியாகும் முறையிலும் எஞ்சிய பிற எளிய வெப்பம் கடத்தும் முறைகளிலும் கடத்தப் படும். ஈரக்குமிழ் வெப்பநிலையே (wet-bulb tempera- ture) உட்புகும் காற்றின் குளிர்விக்கும் கோட்பாட்டு வரம்பு ஆகும். ஈரக்குமிழ் வெப்பநிலையை விட 15°C முதல் -6.7°C வரைமிகுதியாகக் குளிர்விப்பது சிறந்த அமைப்பாகும். இங்கு ஆவியாகும் நீரின் அளவு மிகக் குறைவாகும். 0.45 கி.கி நீரை ஆவியாக்குவதற்கு 1055 கிலோஜூல் வெப்பம் தேவைப்படுகிறது. இது. ஒவ்வொரு 6°C குளிர் வித்தலுக்கும், மொத்த நீரின் அளவில் 0.75% ஆவியாவதைக் குறிக்கிறது. ஆவியாகாத குளிர்விப்பு முறையில், வெப்பமான நீர் மெல்லிய உலோகச் சுவர்களால் குளிர்ந்த நிலையில் உள்ள காற்றிலிருந்து பிரிக்கப்படுகிறது. இச்சுவர்கள் வட்ட வடிவக் குறுக்கு வெட்டுப் பரப் புடைய குழாய்கள் ஆகும். சில வேளைகளில் இவை நீள் வட்ட வடிவக் குறுக்கு வெட்டுப் பரப்பையும் கொண்டுள்ளன. வளி மண்டல அழுத்தத்தில், ஒரு பரப்பிலிருந்து காற்றிற்குக் கடத்தப்படும் வெப்ப விகிதம் மிகக் குறைவாகும். எனவே காற்றை நோக்கிய குழாய்ப் பகுதி (air side of the tube), பல்வேறு வடிவங்களில் அமைந்த துடுப்புகளாக நீள் வகையில் வடிவமைக்கப்படுகிறது. நீரை நோக்கி யுள்ள வெப்பங் கடத்தும் பகுதி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாய்வையும் காற்றை நோக்கி யுள்ள பகுதி ஒரேயொரு குறுக்குப் பாய்வையும் கொண்டிருக்கும். உலோகச் சுவர்களிலிருந்தும் நீட்டிக் கொண்டி ருக்கும் பகுதியிலிருந்தும் எளிய முறையில் கடத்தப் டும் வெப்பம், குளிர்விக்கும் காற்று, சூடான நீரிலிருந்து எடுத்துக் கொள்ளும் மொத்த வெப்பத் திற்குச் சமமாகும். இதனால் நீரின் வெப்பநிலை குளிர்விப்புக் கோபுரம் 111 குறைந்து, காற்றின் வெப்பநிலை மிகுதியாகும்.- இந்த ஆவியாகாத குளிர்விப்புக் கோபுரங்களே. உயர் வெப்ப நிலையிலுள்ள நீராவியைக் குளிர்விக்கப் பெரிதும் பயன்படுகின்றன. குழாய்களிலுள்ள நீராவி அதன் உள்ளுறை வெப்பத்தைக் குளிர்ந்த காற்றிற்கு அளிப்பதால் குளிர் நீராக மாறிவிடுகிறது. இங்கு, உட்புகும் காற்றின் வெப்பநிலையே, குளிர்வித்தலின் கோட்பாட்டு வரம்பு ஆகும். உட்புகும் காற்றின் வெப்பநிலைக்கும், குளிர்விக்கப்பட்ட நீரின் வெப்ப நிலைக்கும் உள்ள வேறுபாடு 14°C -20°C வரை இருக்குமாறு வடிவமைக்கப்பட்ட குளிர்விப்புக் கோபுரமே சிறந்ததாகக் கருதப்படுகிறது. இம்மூன்று வகையுள் வெப்ப உறிஞ்சசுமாக உள்ள ஆவியாகும் குளிர்விப்புக் கோபுரம், உயர் அளவு வெப்பத்திறன் கொண்டது. எனினும் அதிக அளவு நீரை ஆவியாக்குவதால், இக்கோபுரங்களின் மேற்புறத்தில் குறிப்பிட்ட உயரத்திற்கு ஆளிக்கவசம் (vapour plume) காணப்படுகிறது. い 維繫 படம் 3. ஈர உலர் குளிர்விப்புக் கோபுரம் ஆவியாகாத குளிர்விப்புக் கோபுரம் குறைந்த வெப்பத்திறன் உடையது. ஆனால் இதில் குறைந்த அளவு நீரே ஆவியாக்கப்படுவதால், கோபுரத்தின் மேற்புரத்தில் ஆவிக்கவசம் காணப்படுவதில்லை. அதனால் இக்குளிர்விப்புக் கோபுரங்களை எந்த