122 குளுக்கோஃபேன்
22 குளுக்கோஃபேன் இதன் சுரப்பு, உணவுப்பாதை ஹார்மோன்கள், பேங்க்ரியோஸைமின், சில அமினோ அமிலங்கள், பரிவு மற்றும் எதிர்ப்பரிவு மண்டலங்களின் நரம்புத் தூண்டுதல்கள் ஆகியவற்றால் ஒழுங்குபடுத்தப்படு கிறது. பயன்கள். இன்சுலினைப் பெறும் சர்க்கரை நோயாளியிடத்தில் இன்சுலினால் ஏற்படும் இரத்தக் குளுக்கோஸ் குறைவைச் சீராக்குவதற்குக் குளுக்க கானைப் பயன்படுத்தலாம். இந்நிலையில் நோயாளி தன்நினைவில் இருந்தால் வாய்மூலம் குளுக்கோஸ் அலைது பழச்சாற்றைக் கொடுக்க வேண்டும். நோயாளி மயக்கத்தில் இருந்தால் குளுக்கோஸைச் சிரை வழியாகச் செலுத்துவது சிறந்தது. சிரைவழி யாகச் செலுத்த குளுக்கோஸ் கிடைக்கவில்லை. யெனில், குளுக்ககானைச் (0.5-1 மி. கி.) சிரை வழியாகச் செலுத்த வேண்டும். இந்நெருக்கடியான நேரங்களில் சிரைவழியே செலுத்த மருத்துவர் அல்லது தக்க செவிலியர் கிடைக்கவில்லை எனில். பயிற்சி பெற்ற எவரும் குளுக்ககானைத் (1மிகி.) தசைவழியே செலுத்தலாம். குளுக்ககான், கல்லீரல் கிளைக்கோஜனைக் குளுக் கோஸாக மாற்றுவதோடு அல்லாமல், இன்சுலின் சுரப்பையும் தூண்டுகிறது. எனவே, சர்க்கரை நோயைக் குறைக்கும் மாத்திரைகளினால் ஏற்படும். இரத்தக் குளுக்கோஸ் குறையை நீக்க இதைப் பயன் படுத்தக் கூடாது. இதயத் தசைகளைத் தூண்டுவதால் சில சமயங்களில் பிற மருந்துகளால் பயன் பெற முடியாத இதயச் செயல்திறன் வீழ்ச்சியில் இது பயன் தரக்கூடும். அட்ரினல் அகணிக்கட்டி, இன்சுலின் சுட்டி தைராய்டு புற்று முதலிய ஹார்மோன் சார்ந்த கட்டி களைக் கண்டறியவும் இது பயன்படக்கூடும். இந்நிலை களில் குளுக்ககானை 0.5-1 மி.கி. சினீரவழியே செலுத்தும்போது இக்கட்டிகளிலிருந்து வெளியிடர் படும் ஹார்மோன் சார்ந்த பொருள்களை அளவிடு வதன் மூலம் கட்டிகளைக் கண்டறியக்கூடும். வேண்டா விளைவுகள், குளுக்ககான், குமட்டல், வாந்தி ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும். அரிதாக ஒவ்வாமை, இரத்தப் பொட்டாசியக் குறைவு ஆகிய விளைவுகள் ஏற்படலாம். குளுக்கோஃபேன் மு. துளசிமணி இது ஆம்பிபோல் கனிம வகைகளில் ஒன்றாகும். இ கனிமம் ஒற்றைச்சரிவுப் படிகத்தொகுதியைச் சார்ந்தது. பொதுவாக, பட்டகங்களாகவும் இழை அல்லது துகள்களாகவும் காணப்படும். இதன் கனியப் பிளவு (110) பட்டைப் படிகத்திற்கு இணையாகத் தெளிவாகத் தெரியும். ஒழுங்கற்ற அல்லது வளை முறிவுடன் (conchoidal fracture) காணப்படும். இது எளிதில் நொறுங்கக்கூடியது. இதன் கடினத் தன்மை 6-6.5; அடர்த்தி 3.3.15. இது முத்து மிளிர்வு அல்லது கண்ணாடி மிளிர்வு உடையது. நீலநிறம் முதல் கருநிறம் வரை இருக்கும். வேதியியல் சேர்க்கை Ma,Mg,Al,Si,O,,(OH), ஆகும். வண்ண ஒளியியல் பண்புகள் உருப் பெருக்கியின் மூலம் இக்கனிமத்தைப் பார்க்கும் போது இதன் ஒளியியல் (vibration) Qoval அதிர்வுகளில் வேறு நிறங்களைக் காணலாம். லை, வானத்தின் நீலநிறம்; சிவப்பு நீலம; மஞ்சள் நீலம் ஆகும். ஒளி யியல் மறைவு கோணம் (extinction) 4 - 6". ஒளி அச்சுக் கோணம் 2V = 45, குளுக்கோஃபேன் உருமாறிய பாறைகளில் காணப் படும். அதாவது குளுக்கோபேன் சிஸ்ட், எக்லோகைட் போன்ற பாறைகளாகும். இக்கனிமம் குவார்ட்ஸ், பைராக்ஸின், குளோரைட், கார்னட் கனிமங்களுடன் சேர்ந்து காணப்படும். ந. சந்திரசேகரன் நூலோதி. A.N. Winchell and H. Wincheli, Elements of Optical Mineralogy, Part II, Wiley Eastern Private Ltd, New Delhi, 1968. குளுவான்கள் குவார்க்குகளைச் சேர்த்து அடிப்படைத் துகள் கருதப்படுகிற களாகப் பிணைத்து வைப்பனவாகக் விசைத் துகள்கள் குளுவான்கள் (gluons) எனப்படு கின்றன. இவை இன்னமும் கண்டுபிடிக்கப்பட வில்லை. குவார்க்குகளில் வலுவான இடைவினைகள் குளுவான்களால் நடத்தி வைக்கப்படுமென விவரிக் கிற கொள்கை மாதிரிச் சித்திரங்கள், துகள் இயற் பியலின் நிகழ்வுகளை முன்னறிவிப்பதிலும், விளக்கம் தருவதிலும், புரிந்து கொள்வதிலும் வெற்றி பெற்றுள்ள போதும் ஆய்வுகளில் தனியான குளுவான் களை இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ் வாறே, தனியான குவார்க்குகளும் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. குளுவான்களைத் தனியாகப் பிரித்தெடுக்க முடியாது என்ற கருத்து இப்போது நிலவுகிறது. சமச் நிறம். வலுமிக்க அணுக்கரு இடைவினை. SU(3) ஒருமைச் சமச் சீர்மையைப் பணிந்து நடத்து கிறது எனவும், ஹேட்ரான்கள் எனப்படும் வலுவான இடைவினை செய்கிற துகள்களை SU(3) சீர்மையால் குறிப்பிடப்படுகிற பாங்குகளின்படி வகைப்படுத்த முடியும் எனவும் 1961 ஆம் ஆண்டில் ஜெல்-மான், நீயிமன் ஆகியோர் தனித்தனியாகக் கருத்துகளை வெளியிட்டனர். அவ்வாறு உருவாக்கப் பட்ட குடும்பக்குழுக்கள் அல்லது மிகு பன்மை துகள்கள் SU(3) சமச்சீர்மை விதிகளால் அனுமதிக்கப் மைத்