126 குளூக்கோஸ்
126 குளுக்கோஸ் இருக்குமானால் பல்வேறு பின்விளைவுகள் தோன்றும். குவாண்டம் நிற இயக்கவியல் குறிப்பிடும் குவார்க்கு கள், குளுவான்கள் ஆகியவற்றின் இடைவினைகள் பல புதிய ஹேட்ரான் இனங்கள் இருக்கலாமெனக் காட்டுகின்றன.. குளுவான்கள் மட்டுமே அடங்கிய குவார்க்கில்லாத மெசான்கள் இவற்றில் மிகவும் முக்கியமானவை. வை சில சமயங்களில் கோளங்கள் எனக் குறிப்பிடப்படுவதுண்டு. அவற்றை J/ போட்டான் + 2 குளுவான்கள் என்ற சிதைவின் போது அல்லது நிறைமிக்க குவார்க்கோனியம் நிலை கள் சிதைவின்போது காணலாம். பசைக் குளுவான்களுக்கு இருப்பதாகக் கருதப்படும் பண்புகளை மெய்ப்பிக்க மேலும் பல ஆய்வுகள் செய்து து பார்க்க வேண்டும். நிறைமிக்க குவார்க்கோனியங் களின் திசையின் நிலைகளிலிருந்து வெளிப்படும் ஹோட்ரான் பீச்சல்களின் கோணப் பரவீடு மூன்று மடல்களைக் காண் பாங்கை வெளிக்காட்டி மூன்று குளுவான்களைக் கொண்ட அரை இறுதி நிலை ஒன்று இருப்பதை மறைமுகமாகக் காட்டலாம். எலெக்ட்ரான் + பாசிட்ரான் - குவார்க் + எதிர்க் குவார்க் + குளுவான் ஹேட்ரான்கள் என்ற சிதைவின் செயல்முறையில் மூன்று பீச்சல் நிகழ்வு களின் விவரமான தன்னியல்புகள், எந்த ஹேட்ரான் பீச்சல் குளுவான்களிலிருந்து வெளிப்பட்டன என் பதைத் தெரிவித்துக் குளுவானின் ஒற்றைத் தற் சுழற்சித் தன்மையைச் சோதித்துப் பார்க்கலாம். மீள் தன்மையற்ற லெப்டான் சிதறலில் அளவுத் திட்ட மீறல்களின் பாங்குகளைப் பகுப்பாய்வு செய்வது, பல் வேறு குவார்க்கோனியம் நிலைகளின் ஹேட்ரான் சிதைவு வீதங்களை ஒப்பிடுவது ஆகியவற்றின் மூலமும் தற்சுழற்சியைச் சோதித்துப் குளுவான் முடியும். பார்க்க விதிக்கப்பட்ட பண்புகளுடன் கூடிய குளுவான் கள் இருப்பது மெய்ப்பிக்கப்பட்டு விட்டால் நிற அள வின் திட்டச் சமச்சீர்மை பற்றிய கருத்துச் சரியானதே என்பது நிறுவப்படும். குவாண்டம் நிற இயக்க வியலுக்கு ஒரு வலுமிக்க ஊக்குளிப்புக் கிடைக்கும். அத்துடன் வலுமிக்க விசைகள், வலுவற்ற விசைகள், மின்காந்த விசைகள் ஆகியவற்றை ஒருமைப்படுத்தச் செய்யப்பட்டு வரும் முயற்சிகளுக்கும் ஆதரவுகிட்டும். கே. என். ராமச்சந்திரன் குடிக்கோஸ் ஒற்றைச் சாக்கரைடுகளில் மிகவும் முக்கியமானது குளுக்கோஸ். இது இனிப்பான பழங்களிலும், தேனி லும், திராட்சைப் பழங்களிலும் உள்ளது. மனித இரத்தத்திலும், நீரிழிவு நோயுடையோரின் சிறுநீரிலும் காணப்படுகிறது. வணிகமுறையில் குளூக்கோஸ் ஸ்டார்ச்சை நீர்த்த ஹைட்ரோகுளோரிக் அமிலத்தி னால் அழுத்தத்தில் நீராற்பகுத்துப் பெறப்படுகிறது. HCI (CH, O,)n + n.H,0 – n.C Hign. → H10O 19 கரும்புச் சர்க்கரையை ஆல்கஹால் கலந்த நீர்த்த ஹைட்ரோகுளோரிக் அமிலத்தினால் நீராற்பகுத்தும் குளூக்கோசைப் பெறலாம். இயற்பண்புகள். D( - )குளூக்கோஸ் இனிய சுவை மிக்க நிறமற்ற படிக உருவம் கொண்ட திண்மப் பொருள். இதன் உருகு நிலை 146 C. நீரில் மிகையா கவும், ஆல்கஹாலில் குறைவாகவும் கரையும். இயற் கையில் கிடைக்கும் குளூக்கோஸ் வலஞ்சுழிப்பொரு ளாகும். எனவே இதற்கு டெக்ஸ்ட்ரோஸ் என்னும் பெயர் வந்தது. வேதிப் பண்புகள். குளூக்கோஸ் சிறந்த ஒடுக்கி யாகும். ஃபிலிங் கரைசலையும் (Fehling's solution). அம்மோனியா வெள்ளி நைட்ரேட் (ammoniacal silver nitrate} கரைசலையும் ஒடுக்குகிறது. நீரிய குளூக்கோஸ் கரைசலுடன் சோடியம் ஹைட்ராக் சைடைச் சேர்த்து வெப்பப்படுத்தும்போது பழுப்புப் பொருள் உண்டாகிறது. ஹைட்ரஜன் சயனைடுடன் வினைபுரிந்து சயனோஹைட்ரினையும், ஹைட்ராக் சில் அமினுடன் சேர்ந்து ஆக்சிமையும் கொடுக்கிறது. இவ்வினைகள் ஆல்டிஹைடுகளுக்குரிய வினைகளா கும். ஆனால் அசெட்டிக் அமிலம் கலந்த ஃபீனைல் ஹைட்ரசினுடன் வினைபுரிந்து ஃபினைல் ஹைட்ர சோனைக் கொடுப்பதில்லை. நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்யும்போது ஹைட்ராக்சிமெத்தில் ஃபர்ஃபியுரால் கிடைக்கிறது. தன் அமைப்பு. குளூக்கோஸின் அமைப்பினை அறிய அதன் பல்வேறு வினைகளும், இயற்பியல் குறிப்பு களும் பயன்படுகின்றன. பண்பறி பகுப்பாய்வின் மூலம் குளூக்கோஸில் கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய தனிமங்கள் இருப்பது தெரிகிறது. அளவறி பகுப்பாய்வின் மூலம் தன் மூலக்கூறு எடை 180 எனக் கணக்கிடப்பட்டு C,H,O, என்பதே மூலக்கூறு வாய்பாடு என அறியப்பட்டது. ஒடுக்க வினையில் ஈடுபட்டு இது 1 - ஹெக்சேனைத் தரு கிறது : n - ஹெக்சேனில் ஆறு கார்பன் அணுக்களும் சங்கிலித் தொடர்போல் இணைந்திருப்பதால் குளூக் கோஸிலும் அவ்வண்ணமே இருக்கவேண்டும் தெரிகிறது. குளூக்கோஸில் கார்போனைல் தொகுதி இருப்பதை அது HCN, NH,OH போன்றவற்றுடன் வினைபுரிவதிலிருந்து அறியலாம். மேலும் அக்கார் போனைல் தொகுதி ஆல்டிஹைடுதான் என்பதற்கு. புரோமின் நீரோடு ஆக்சிஜனேற்றமடைந்து கார்பன் அணு எண்ணிக்கையில் குறையாமல் குளுக்கானிக் அமிலம் கிடைப்பதிலிருந்து தெரிகிறது. குளுக்கானிக் என்று