பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 குளோர்டெட்ராசைகளின்‌

136 குளோர்டெட்ராசைக்ளின் குளோர்டெட்ராசைக்ளின் டெட்ராசைக்ளின் வகையைச் சார்ந்த குளோர்டெட் ராசைக்ளின் (chlortetracycline), ஆக்ஸ்டெட்ரா சைக்ளின், டிமெக்ளோசைக்ளின், டாக்சிசைக்ளின். மானோசைக்ளின் அனைத்தும் ஒரே வகையைச் சார்ந்தவை. இவை நுண்ணுயிர்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றன. 250 - 500 மி.கி. / 6 மணிக்கு ஒரு முறை உணவுக்கு முன் தரப்பட வேண்டும். ஆனால் டாக்சிசைக்ளினை ஒரு முறை கொடுத் தால் போதும். முதல் நாளில் 200-300 மி.கிராமும் பின்னர் 100-200 மி.கிராமும் கொடுக்க வேண்டும். . விரிதிறன் கொண்ட குளோர்டெட்ராசைக்ளின் கிராம் சாயத்தை ஏற்கும் நுண்ணுயிர்களையும், கிராம் சாயம் ஏற்கா நுண்ணுயிர்களையும், ரிக்கெட் சியா, மைகோபிளாஸ்மா, கிளாமைடியா போன்ற நுண்ணுயிரிகளையும் பாதிக்கிறது. அண்மைக்கால மாக நியூமோகாக்கை நுண்ணுயிர்களும், இன்புளு நுண்ணுயிரிகளும் குளோர்டெட்ராசைக் கிளினை எதிர்க்கும் தன்மை படை உத்துள்ளன. மால்டா காய்ச்சவிலும் இம்மருந்து பயன்படுவ தாகத் தெரிகிறது. யென்சா முகப் பருக்களுக்கும், தோல் படைகளுக்கும் குளோர்டெட்ராசைக்ளின் பலன் தருகிறது. தோலில் கூருணர்வு ஏற்படுவதற்குத் தோல் களிம்பாகப் பய னளிக்கிறது. வேண்டாத பக்க விளைவுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. பொதுவாக ஏற் படும் வேண்டா விளைவு வயிற்றுப் போக்காகும். குளோர்டெட்ராசைக்ளினை நிறுத்தியவுடன் அது வும் நின்று விடும். மொத்தத்தில் டெட்ராசைக்ளின் கள் கால்சியத்துடன் வினைபுரிந்து எலும்புகளிலும் பற்களிலும் படிந்து நிறமாற்றத்தை உண்டாக்கு கின்றன. குழந்தைகளுக்கோ கொடுக்கக்கூடாது. ஆகவே குளோர்டெட்ராசைக்ளினைக் பேறுகாலப் பெண்களுக்கோ டாக்சிசைக்ளினைத் தவிர, பிற அனைத்து வகையான டெட்ராசைக்ளின்களும் சிறுநீரக முறிவை விரைவுபடுத்துகின்றன. ஆகவே சிறுநீரசு நோயாளி களுக்குக் ளோர்டெட்ராசைக்ளினைக் கொடுக்கக் கூடாது. இம்மருந்து சிரை வழியாகக் கொடுக்கப் பட்டால் சிரை அழற்சியை உண்டாக்குகிறது. பேறு காலத்தின்போது கொடுக்கப்பட்டால் சுல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை உண்டாகலாம். சாரதா கதிரேசன் Antioiotic & நூலோதி. Garrod L.P. et al., Chemotherapy, 5th Edn, Edinburg., Churchill Livingstone. 1981. குளோர்தாலிடோன் இது ஒரு சிறுநீர்ப்பெருக்கி (diuretic) ஆகும். அதா வது சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரிக்கும் மருந்தா கும். குளோர்தாலிடோன் {chiorthalidone) தயசைடு (thiazide) வகையைச் சார்ந்த சிறுநீர்ப் பெருக்கிகளு டன் அமைப்பில் தொடர்பு கொண்டது. வாய்மூலம் தரும்போது இம்மருந்து, குளோரோ தயசைடு எனும் சிறுநீர்ப் பெருக்கியைவிடப் உள் ஏற்கப்படுகிறது. சிறுநீர்ப்பெருக்க மெதுவாக விளைவு 2 மணி நேரத்தில் தொடங்கி 18- 24 மணி நேரம் நீடிக்கிறது. இது கரு அணையத் தடையைக் (placen- tal barrier) கடக்கிறது; தாய்ப்பாலிலும் சிறிதளவு வெளியேற்றப்படுகிறது. இயங்கும் விதம். இது சிறுநீரத்திற்குச் சேய்மை யிலுள்ள நுண்குழல்களில் (distal tubules) சோடியத் தின் மறு உள்ளேற்பைக் (reabsorption) குறைப்பதன் மூலம் சோடிய வெளியேற்றத்தை அதிகரிப்பதாகக் கருதப்படுகிறது. பயன்படும் நோய்நிலைகள். தேக்கமுறும் இதயத் திறனிழப்பு (congestive cardiac failure). பேறுகாலக் குருதி நச்சு (toxaemia of pregnancy), சில கல்லீரல் மற்றும் சிறுநீரசு அழற்சி ஆகிய நோய் நிலைகளில் ஏற்படும் உடல் நீர் வீக்கத்தைக் குறைக்க இது பயன் படுகிறது. இந்நிலைகளில் இது 100-200 மி.கி. அள வில் ஒன்றுவிட்டு ஒருநாள் தரப்படுகிறது. மிகை இரத்த அழுத்த நோயில் (hypertension) இது, பிற மிகை இரத்த அழுத்த எதிர் மருந்துகளுக் குப் பக்கத்துணையாகத் தரப்படும். நாள் ஒன்றுக்கு 50 மி.கி. அளவில் பிற மிகை இரத்த அழுத்த எதிர் மருந்துகளுடன் இதனைச் சேர்த்துத் தரும்போது ரத்த அழுத்த எதிர் மருந்துகளின் அளவைக் குறைத்துத் தரமுடியும். இம்மருந்து நீரிழிவு நோயில் (diabetes insipidus) சிறுநீர் வெளியேற்றத்தைக் குறைப்பதால், இந்நோய்க்கு மருத்துவமாக ஒன்றுக்கு 50-100 மி.கி. அளவில் தரப்படும். வேண்டாத விளைவுகள் நாள் இரத்தப் பொட்டாசியக்குறைவு (hypokalaemia). இம்மருந்தை நீண்டகாலம் உட்கொள்ளும்போது, இரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவு குறையக் கூடும். குறிப்பாக டிஜிடாலிஸ் மருந்தைப் பெறும் இதயத் திறனிழப்பு நோயாளிகளிடத்தில், இது டிஜி டாலிஸ் நச்சை ஏற்படுத்தக்கூடும். இந்நிலைை லையை எதிர்