பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளோரமின்‌ 141

இளம் சிறார்களிடையேயும், ஈரல் நோய் கண்டவர் களிடையேயும் பெரிதும் குறைந்து காணப்படுவதால் இவர்களிடையே இரத்தத்தில் குளோரம்ஃபெனிகால் அதிக அளவு கட்டுப்பாடற்ற நிலையில் காணப்படு கிறது. உடலில் இம்மருந்து பல்வேறு அழற்சி நீர்மங் களில் எளிதில் பகிர்வு அடைவதுடன், கருவில் உள்ள சிசுவின் இரத்தத்திலும் கலந்து காணப்படுகிறது. ஆக்கச்சிதை மாற்றம் (metabolism). உடலினுள் செலுத்தப்பட்ட மருந்தின் பெரும்பகுதி குளுக்கோ ரோனிக் அமிலத்துடன் இணையும் அல்லது திறனற்ற அரைல் அமீன் வேதிப்பொருளாகக் கல்லீரலில் மாற்றம் அடையும். 90% மருந்து மாற்றப்பட்ட நிலையிலும் 10% மாற்றப்படா நிலையிலும் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படும். பக்க விளைவுகளும் நச்சு விளைவுகளும் வாய்ப்புண். இது, இம் மருந்து தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் கொடுக்கப்பட்ட நிலைகளில் ஏற்படுகிறது. வாயில் உள்ள சாதாரண பாக்டீரியாக் கள் இவ்வேதி மருந்தால் அழிவதுடன் கான்டிடா அல்பிகன்ஸ் (Candida albicans) என்ற காளான் வளர்ச்சி ஊக்கம் பெறுதலுமே காரணம் என அறியப் பட்டுள்ளது. குமட்டல், வாந்தி பேதி. எலும்புச் சோற்றுச் {bone marrow) சார்பு விளைவுகளில் முதலில் கிரானுலோசைட் என வழங்கும் வெள்ளணுக்கள், பின்னர் இரத்த உற்பத்திச் சார்பான அணுக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, மரணத்தைத் தோற்று விக்கும் இரத்தஅணு முழுச் சோகை(aplustic anaemia) ஏற்படுகிறது. மூளை அழற்சி (etcephalopathy), தொடர்ந்து குளோரம்ஃபெனிகால் மருத்துவம் செய்யப்பட்டவர் களில் சிலரிடம் தோன்றும் வெளிப்பிதற்றல் (delirium) அறிகுறி இவர்களிடம் தோன்றும் மூளை அழற்சியின் அறிகுறியே ஆகும். ஆகும். இது, மருத்துவத்தின்போது விளையும் நச்சுமிகு பாக்டீரியப் பொருள்களின் விளைவேயாகும். சிறுவர்களிடம் காணப்படும் சாம்பல நிற அறி குறிகள் வாந்தி, குழந்தை பால் உறிஞ்ச வயிறு மறுத்தல், உப்புசம். உடல் தசைத் தளர்வு, புறத்தோல் சாம்பல் நிறப்பூச்சு அடைதல், உடல் வெப்பநிலை மிகவும் குறைதல் போன்றவை இத்தொகுப்பில் அடங்கும் முக்கிய அறிகுறிகளாகும். குழந்தைகளிடம், கல்லீரலில் குறைந்த அளவே குளோரம்ஃபெனிகால் குளுக்கோ ரோனிக் அமில அணைப்பு அரைல் அமீனாக இறக்கம் நடைபெறுதலும்,குறைந்த அளவு மருந்தே சிறுநீர் மூலம் வெளியேறுதலும், இரத்தத்தில் குளோரம் ஃபெனிகாலின் அளவினை அதிகப்படுத்துதலுமே இந்த நோயின் காரணமாகும். குளோரமின் /41 மருத்துவப் பயன். சிறு நோய் நிலைகளில் குளோ ரம்ஃபெனிகாலைத் தவிர்ப்பது நலம். டைஃபாய்டு காய்ச்சல், இன்புளுயன்சா காய்ச்சல், கக்குவான் இருமல் போன்ற நோய் நிலைகளில் இம்மருந்து மிகவும் பயனளிக்கிறது. கே. என். ராஜன் குளோரமின் நைட்ரஜன் அணுவுடன் குளோரின் அணு சகபிணைப் பால் இணைந்துள்ள மூலக்கூறுகள் குளோரமின்கள் (chloramine) எனப்படுகின்றன. இவற்றுள் கனிம வகை கரிம வகைக் குளோரமின்கள் என இரு வகை யுண்டு. கனிம குளோரமின்கள். அம்மோனியாவை ஹைப்போகுளோரஸ் அமிலத்துடன் வினைப்படுத்திப் பெறப்படும் மூலக்கூறுகள் இவ்வகையாளவை. NH, + HOCI → NH,CI + H, O NH, + 2HOC1 – NHC!, + 2H,0 NH, + 3HOCI + NCI, + 3H,O மோனோ குளோரமின், (NH,CI,) நெடிகொண்ட நிறமற்ற நீர்மம் ஆகும். நீரில் கரையக்கூடியது: நீரற்ற ஈதரில் இதைச் சேமித்து வைக்கலாம். வெப்பநிலையில் வெடிக்கும். டைகுளோரமின் (NHCL,) நிலையுற்றது. டிரைக்குளோரமின், (NCI, பளிச்சென்ற மஞ்சள் நிற நீர்மம்: நீரில் கரையும் அறை தன் கொதிநிலை 70°C; வெடிக்கவல்லது, மிகக் குறைந்த செறிவுகளில்ல்லாமல், சேமித்து வைக்க ஏற்றதன்று. இதன் புகை கண்ணீரை வரவழைக்கக் கூடியது. N - ஏனைய கரிம வகை குளோரமின்கள்: 11 HO-S NHCI ONa--S- N -S- ONa 11 குளோரோ- சல்ஃபமிக் அமிலம் சோடியம் - N- குளோரோ இமிடோ னடசல்ஃபனேட் கரிமக் குளோரமின்கள். கிளைகால்யூரில் நீச்சல் குளங்களில் தொற்றுநீக்கவும், குளோரோ ஹைடன் டாயின் மாசு நீக்கவும், சக்சின் குளோரிமைடு நீரைத் தூய்மையாக்கவும், குளோரோமெலமின்கள் நுண்ணு யிர் நீக்கவும் பயன்படும். குனோரமின் -T. குளோர மின்- B ஆகிய இரண்டுமே வெண்ணிறப்படிகங்கள்.