152 குளோரோஃபார்ம்
152 குளோரோஃபார்ம் பிளவுக்கு இணையான திசையில் மறைவு நிலை அடைகின்றன. இவற்றின் விளிம்புகள், (ஊடுருவல் ஒளியில் மிக மெல்லியனவாக இருக்கக் காணலாம். குளோரைட்டுகள் பல வகையான பாறைகளில் உள்ளன. இவை ஷிஸ்ட் எனப்படும் உருமாற்றப் பாறையாகப் பெரிதும் காணப்படும். குளோரைட்டு கள் பைராக்சின், ஆம்ஃபிபோல், பயோடைட், கார்னட் முதலான பல கனிமங்கள் மாற்றமடைவ தால் உண்டாகின்றன. குளோரைட்-ஷிஸ்ட்டுகளில் மேக்னடைட, எண்முக வடிவுப் படிகங்களாக இருக்கக் காணலாம். ளோரைட்டுகள் பெரிய அளவு (5.செ.மீ) படிகங்களாக ஸ்விட்சர்லாந்து, பென்சில் வேனியா ஆகிய நாடுகளில் கிடைக்கின்றன. வைத்திலிங்கம் நூலோதி. M.B. Krishnan, Geology of India and Burma, Sixth Edition, CBS Publishers and Distributors, New Delhi, 1982. குளோரோகுயின் நோய்த்தடுப்புக்கும், குடற்புழுத் இது மலேரியா தாக்கத்திற்கும் பயன்படும் மருந்தாகும். அமைப்பு வாய்பாடு: இதன் NHCH(CH,) N(CH). I-டை ளோரோ அடர்த்தி இரத்தப் பிளாஸ்மா அடர்த்தியைவிட 25 மடங்கு மிகுதி. கல்லீரலில் இதன் அடர்த்தி பிளாஸ்மா அடர்த்தியைவிட மிகுதியாகும். இது கல்லீரலில் ஆக்கச் சிதை மா ற்றமடைந்து சிறுநீரில் வெளியேற்றப்படுகிறது. அமிலத்தன்மையுடைய சிறுநீரில் இதன் வெளியேற்றம் அதிகரிக்கிறது. வேண்டா விளைவுகள். தலைவலி, தலைச்சுற்றல். வாந்தி, இரைப்பை எரிச்சல் ஆகியவை ஏற்படு கின்றன. இதனைத் தொடர்ந்து பயன்படுத்தினால் விழித்திரையில் பாதிப்பு ஏற்பட்டுப் பார்வைக் கூர்மை குறையக்கூடும். மருந்து அளவு. குறு மலேரியப் பாதிப்பில் மூல மருந்தான இது, தொடக்க அளவாக வாய்மூலம் 600 மி.கி.தரப்படுகிறது. பின் 6 மணி நேரஞ்சென்ற பின் 300 மி.கி. தரப்படுகிறது. பின்னர் நாள் ஒன்றுக்கு 500 மி.கி இரண்டு வேளை பிரித்து 2 நாளுக்குத் தரப்படுகிறது. இந்த அளவைப் பயன்படுத்துவதன் மூலம் பெரும்பான்மையான நோயாளிகள் 24 மணி நேரத்தில் நோய்த் துன்பத்தி லிருந்து விடுபடுகின்றனர். மலேரியா நோயை கட்டுப்படுத்தும் மருந்தாக, வாரத்துக்கு 500மி, கி, வீதம் நோயாளிக்கு மலேரியா பரவியுள்ள பகுதியில் வசிக்கும் வரையிலும், பின் அப்பகுதியை விட்டு வெளியேறிய பின்னும் 6 வாரங் கள் வரை தொடர்ந்து கொடுக்கப்படுகிறது. பயன்கள். இது பிளாஸ்மோடியம் ஃபால்சிபெரே நோய்த் தொற்றை முழுதும் குணப்படுத்துகிறது; அனைத்து மலேரிய ஓட்டுண்ணிகளின் நோய்த் தொற்றுகளிலும் நோயைக் குணப்படுத்தும் மருந்தாக உள்ளது. குடல் வெளி அப்பா நோயிலும் பயன்படு கிறது; இதற்கு அழற்சி எதிர் இயக்கமும் உள்ளதால் முடக்குவாத மூட்டு அழற்சி (rheumatoid arthritis) போன்ற நோய்களிலும் இது பயன்படுகிறது. குளோரோகுயினுக்கு எதிர்ப்புணர்ச்சி, குளோரோ குயினுக்கு எதிர்ப்புண்ர்ச்சி காட்டும் பிளாஸ்மோடியம் ஃபால்சிபெரே ஒட்டுண்ணிகள் அண்மையில் தென் அமெரிக்காவிலும், தென் கிழக்கு ஆசியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முத்துலட்சுமி பாரதி CI 4.7 - டைகுளோரோகுயினோலினுடன் எத்தில் அமினோ-4 அமினோ பென்ட்டேனைக் குறுக்க வினைக்குட்படுத்துவதால் குயினைப் பெறலாம். இது வெளிர் மஞ்சள் நிறமுடைய படிகத்தூள்; உருகுநிலை 90C. குறைந்த அளவே நீரில் கரையக் கூடியது. நீர்த்த அமிலங்களிலும், ஈதரிலும், குளோரோஃபார்மிலும் கரையச்கூடியது. நச்சுத் தன்மையற்றதெனினும் தொடர்ந்து பயன்படுத்தி னால் கண்பார்வை மந்தமாகும். DNA, RNA ஆகிய வற்றின் பிணை திறன் குறையும். J வாய் மூலம் தரும்போது இது நன்கு ளுறிஞ்சப்படுகிறது. சிவப்பு அணுக்களில் உள் தன் குளோரோஃபார்ம் இதனைவிட து ஒரு பொது உணர்விழப்பு மருந்து ஆகும். நஞ்சு குறைவான ஹாலோத்தேன் போன்ற உணர்விழப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டது முதல் இது உணர்விழப்பு மருத்துவத்தி லிருந்து ஒதுக்கப்பட்டுவிட்டது.