குறிப்பலை காணலின் கோட்பாடு 159
லிருந்து வந்தது. அது புள்ளியியல் முடிவுக் கொள்கையின் மொழிபெயர்ப்பு ஆகும். கொள்கை யில் இப் பகுதியின் பெரும் பங்களிப்பு, அது தனிப் பட்டவரின் வேறுபடுத்திப் பார்க்கும் திறமையை அல்லது நுண்ணுணர்வை அளவிட உதவுகிறது என்பதாகும். அவ்வாறு அளவிடப்படுகிற வேறு படுத்திப்பார்க்கும் திறமை அவர் வேறுபடுத்திப் பார்க்கும்போது பெற்றிருந்த ஒரு சார்பு முடிவைச் செய்வதற்கான உரைகல்லைச் சார்ந்ததாக இராது. கொள்கையின் ஏனைய பகுதி மின்னணுவியல் செய்தித் தொடர்பு முறைகளின் ஆய்விலிருந்து பெறப் பட்டது. அது ஒலிகள் அல்லது ஒளிகள் போன்ற எளிய குறியீடுகளுக்கு எட்டக்கூடிய தலைசிறந்த வேறுபடுத்திப் பார்க்கும் திறனைக் கணக்கிட உதவு கிறது. குறியீடுகள் அவற்றுடன் குறுக்கிடுகிற ஒலி ஆகியவற்றின் இயற்பியல் அளவீடுகளின் அடிப்படை யில் ஊகம் அமைகிறது. இவ்வாறு பலவகையாள குறியீடுகளுக்கு ஒரு சாதாரணமான காட்சிப் பதிவாளரும், குறிக்கோள் கொண்ட காட்சிப் பதிவாளரும் பெற்றுள்ள உணர் திறன்களை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான வாய்ப்புக் கிடைக்கிறது. உணர்வு உளவியலில் இந்த வாய்ப்பு பெரும்பயன் பெற்றுள்ளது. அதைப் பற்றிய அறி வியல் நாட்டமும் வளர்த்து வருகிறது. கொள்கையின் முதற்பகுதி வேறுபடுத்திப் பார்த்தல் மூலம் கிட்டிய முடிவுகளை இரண்டு ஆக்கக் கூறுகளாகப் பகுப் பாய்வு செய்ய உதவுகிறது. அதன் மூலம் வேறு படுத்தல் திறன். முடிவு செய்தலுக்கான உரைகற்கள் ஆகியவற்றின் ஆளுமையைத் தனியே பிரித்து விடு கிற றது.அது உளவியலுடன் மேலான தொடர் புடையது. வேறுபடுத்தல் முடிவுகளின் பகுப்பாய்வு. ஓர் எளிய எடுத்துக்காட்டின் மூலம் குறிப்பலை காணல் கொள்கையின் முக்கிய கருத்துகளை விளக்கலாம். ஒரு பனிக்குழைவு (ice cream) வணிகரின் மணியொலி பெருந்தொலைவிலிருக்கும் குழந்தைகளுக்கும் கேட்கக் கூடும். ஆனால் அந்த மணி அருகில் வந்தபிறகே பெரியவர்கள் அதன் ஒலியை உணர்கிறார்கள். இதற்குக்காரணம், குழந்தைகளுக்குப் பெரியவர்களை விடச் செவிப்புலன் மிகவும் கூர்மையாக இருக்கலாம். வயதாக வயதாகச் செவியின் கேள்திறன் குறையவே செய்யும். ஆனால் குழந்தைகள் பனிக்குழைவின் மேலிருக்கிற ஆர்வம் காரணமாகத் தொலைவில் கேட்கும் எந்த மணி ஒலியையும் வணிகரின் மணி ஒலி யாகவே நம்பி விடுகிற மனப்பான்மையுள்ளவர்கள். ஆகவே குழந்தைகளுக்கு ஒரு சார்பு மனப்பாங்கு இருப்பதாகச் சொல்லலாம். மணியொலி கேட்டவுடனே வணிகர்
- பனிக்குழைவு
வந்து விட்டார்' என்று மகிழ்ச்சிக்குரல் எழுப்பும் மறுவிளைவு பெரியவர்களைவிடக் குழந்தை களிடம் பெரிதும் காணப்படும். முடிவெடுப்புக் குறிப்பலை காணலின் கோட்பாடு 159 கொள்கையின் மொழியில் இதை விளக்கும்போது இத்தகைய தெளிவில்லாத குறியீட்டைப் பற்றிய ஓர் உ உறுதியான முடிவை எடுக்கும் குழந்தைகளுடைய உரைகல், நீக்குப்போக்குத் தன்மையுடையதாகி விடுகிறது எனலாம். ஒருவன் தான் காண விரும்பு வதையே அல்லது காண எதிர்பார்ப்பதையே காணு கிறான். பனிக்குழைவு வணிகர் வரும்போது அவனுடைய மணி ஒலியை அடையாளம் கண்டுபிடிப் பதால் ஏற்படும் நன்மையும், அதை அடையாளம் கண்டுபிடிக்கத் தவறுவதால் ஏற்படும் இழப்பும் பெரியவர்களின் கண்ணோட்டத்தைவிடக் குழந்தை களின் கண்ணோட்டத்தில் பெரியவை. நிகழ்தகவு களும் குழந்தைகளுக்கு அதிக நீக்குப்போக்குள்ள முடி வெடுக்கும் உரைகல் இருப்பதற்கு ஆதரவாகவே உள்ளன. எந்தக் கணத்திலும் பனிக்குழைவு வணிகரின் மணியோசை கேட்கலாம் என்று குழந்தை எதிர் பார்த்துக்கொண்டேயுள்ளது. ஆனால் பெரியவர் களோ அதில் அக்கறையின்றி வேறு செயல்களில் சிந்தனையை ஓடவிட்டிருப்பார்கள். இங்கும் தனிப் பட்டவரின் முடிவெடுக்கும் உரைகல் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறாக இருக்கக்கூடும். அது அவருடைய கூருணர்வைச் சார்ந்ததாக இல்லாமல் மாறிக்கொண்டே இருக்கலாம். குளிர் மிகுந்த நாளில் பனிக்குழைவின் மேல் விருப்பம் குறைந்துள்ள நிலையில், பனிக்குழைவு வணிகர் தெருவுக்கு வருவதற்கான வாய்ப்புக் குறை வாக இருக்கும் நிலையில் குழந்தைகளின் காதில் அந்த மணியொலி விழுந்தாலும் அது பனிக்குழைவு வணிகரின் மணியொலிதான் என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள அவர்கள் வேறுபலவற்றையும் ஆராய்கின்றனர். சரியான மறுவிளைவு காட்டுவதற்கு ஒரு கடுமையான உரைகல்லைக் குழந்தைகளிடம் பயன்படுத்துகின்றனர் என்று முடிவெடுக்கும் கொள்கை இதை விளக்கும். அளவிடுதலும் வளர்ச்சியும். குறியீடு உள்ளபோது ஒருவர் அதைக் கண்டுபிடிப்பது வெற்றி (hit) எனப் படுகிறது. வெற்றிகள் கிடைக்கும் விகிதத்தை மட்டும். பதிவு செய்வது வெற்றி விகிதம். ஆனால் குறியீடு துலக்கல் கொள்கையின் மூலம் அவ்வாறு வெற்றி விகிதத்தை மட்டுமே பதிவு செய்வது, தனிப்பட்ட வரிடம் குறியீடு இருப்பதற்கும் இல்லாளாக்கும் இடையில் வேறுபடுத்திக் காணப்பெறும் திறமை திறமையை நுட்பமாக அளவிட உதவாது. காட்சிப் பதிலின் கூர்மையை மட்டுமே பொறுத்து இந்த வெற்றி விகிதத்தின் அளவு அதிகமாகவோ குறைவாகவோ இராது. வெற்றி விகிதத்தின் அளவு காட்சிப் பதிவுக் கூர்மையுடன் தொடர்பே இல்லாத வேறு பல காரணி களைப் பொறுத்தும் மாறுபடும். எதிர்பார்ப்பு, நோக்கம் ஆகியவை இத்தகைய காரணிகளில் சில. ஒரு குறியீடு இல்லாதபோது. அதைக் கண்டு பிடித்ததாகச் சொல்லுகிற முறைகளின் விகிதம்