பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 குறு இழைகள்‌

162 குறு இழைகள் குறி போதே வலிவுடன் விறைத்து நிற்பதையே விறைத்தல் (priapism) என்பர். இது பல நாள் நீடிக் கலாம். சிறுநீர் கழிக்கும்போது வலி தோன்றுகிறது. ஆண் குறியின் உள்ளே அமைந்துள்ள கார்போரா கேவர்னோசா என்ற தசை பெரிதாகிப் பெருத்து இருப்பதால் இந்நிலை உண்டாகிறது. ஆனால் ஆண் குறியின் கார்பஸ் ஸ்பாஞ்ஜியோசம் என்ற தசை ஆண்குறியின் நுனித்தலை ஆகியவை எந்த மாறு தலும் அடைவதில்லை. இரத்தக் கோளாறுகளிலும் (leukaemia ) மைய நரம்பு மண்டல நோய்களிலும் குறி விறைப்பு நிலை உண்டாகிறது. பாலிசைதீமியா (polycythaemia > எனப்படும் சிவப்பு அணு மிகைப் பெருக்க நோய் நிலையிலும், குறி விறைப்பு உண்டாகிறது. ஆண்குறியின் விறைப் புத் திசுவில் இரத்தக்கட்டி உண்டாவதாலும் இந் நிலை உண்டாகலாம். இதற்கு இரத்த உறை எதிர் மருந்துகள் கொடுக்கப்பட்டால் தீர்வு கிடைக்கலாம். ஆண் குறிக்கு ஏற்படும் காயங்களாலும். சிறுநீர்ப் பையில் உருவாகும் கற்களாலும், தண்டுவட நைவு களின் போதும் குறி விறைப்பு உண்டாகலாம். சில சமயம் புணர்ச்சியின் போது விந்து வெளிப் படும் முன்பே ஆண் குறியை வெளியே எடுக்கும் நிலை வந்தால் இந்நிலை உண்டாகிறது. வீங்கியிருக் கும் கார்போரா கேவர்னோசாவின் உள்ளே ஊசி யைச் செலுத்தி, உப்பு நீரால் தூய்மை செய்தால் இந்நிலை சீரடையும். குறு இழைகள் அ. கதிரேசன் இவை சிறிய விலங்குகளை இடம் பெயரச் செய்ய வும், பெரிய விலங்குகளில் சிலேட்டுமப் படலத்தை நகர்த்தவும் பயன்படும் அமைப்புகளாகும். நீர்யச் சூழ்நிலையில் இயங்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ள இவை ஒரு செல் உயிரிகள் (protozoa) முதல், பலசெல் உயிரிகள் (melazoa) வரை காணப் படுகின்றன. புரோட்டோசோவா போன்ற ஒரு செல் உயிரிகளில் சீலியோஃபோரா (ciliophora) என்ற வகுப்பைச் சேர்ந்த அனைத்து உயிரிகளிலுமே இவை காணப்படுகின்றன. இவ்வகுப்பின் இன்ஃபுசாரியா என்ற குறு பிரிவில் உள்ள உயிரிகளில் ஆயிரக்கணக்கான இழைகள் உள்ளன. இவற்றின் ஒழுங்கான இயக்கம் விலங்கை நீர்மச் சூழ்நிலையில் இடம் பெயரச் செய்கிறது. இவற்றின் அமைப்பில் சில குறிப்பிட்ட பகுதிகளில் பல குறு இழைகள் ஒன்றாக இணைந்து சிர்ரஸ்கள் (cirrus) என்ற அமைப்புகளாக மாறியுள்ளன. இவை நெளியும் சவ்வுகள் (undulating membranes) எனப்படுகின்றன. பலசெல் உயிரிகளில் குறு இழைகள் விலங்கை இடம் விட்டு இடம் பெயரச் செய்ய உதவுவதில்லை. ஆனால் சில தட்டைப்புழு, நெமர்டினியா, முள் தோலி, மெல்லுடலி, வளைதசைப்புழு ஆகியவற்றின் இளவுயிரிகளின் (larvae) இயக்கத்தை இவை நிர்ண பிக்கின்றன. இவற்றில் உடலின் மேற்பரப்பைச் சூழ்ந்துள்ள எபிதீலியச் செல்கள் அசையும் ழைகளைக் கொண்டுள்ளன. குறு குறு இழை பல மேம்பட்ட உயிரிகளில் எபிதீலியத் தகடுகள் விலங்கின் உடற்குழிகள் அல்லது குழாய்கள் ஆகியவற்றைச் சூழ்ந்து உள்ளன. மேலும், இனப்பெருக்கப் பாதைகள், சுவாசப் பாதைகள் ஆகியவற்றில் இவை அமைத்துள்ளன. இவ்வுறுப்பு களில் எல்லாக் குறு இழைகளும் ஒரே நேரத்தில் ஒரே திசையில் இயங்குகின்றன. இதன் விளைவாக இவ் வுறுப்புகளில் உள்ள எபிதீலியச் சுவர்களின் மேற்பரப் பில் நீர்மம் உந்தித் தள்ளப்படுகிறது. இவ்வியக்கம் துகள்கள், பிற பொருள்கள் போன்றவற்றை நகர்த்து வதற்கு உதவுகிறது. எ.கா; பாலூட்டிகள், வாழ்விகள் ஆகியவற்றில் அண்டக் குழாய்களில் முட்டைகளை நகர்த்துதல். சிறிய விலங்குகளின் குறு இழைகளின் இயக்கம் இடம் பெயர் தலுக்குப் பயன்படுகிறது. ஆனால் பெரிய விலங்குகளில் இவற்றின் இயக்கத்தினால் உண்டாகும் ஆற்றல் இடம் பெயரப் போதுமானதாக இல்லாததால் சில குறிப்பிட்ட வேலைகளைச் செய் வதற்கு மட்டுமே பயன்படும். சில உயிரிகள் ஒரே இடத்தில் நிலையாக இருக்கின்றன.நகரும் உயிரிகள் உணவைப் பிடிப்பதற் காகச் சில சமயங்களில் நிலையாக ருக்கின்றன. இக் காலங்களில் தம்மைச் சூழ்ந்துள்ள நீரில் நீரோட்டங் களை உண்டாக்குகின்றன. இந்நீரோட்டங்கள் மூலம் எடுத்துக் கொண்டு வரப்படுகின்ற உணவுப் பொருள் களை உண்ணுவதற்காக எடுத்துக் கொள்கின்றன. வை சில உணர்ச்சி உறுப்புகளின் செல்களில் கடினத் தன்மை அடைந்து உணர் நீட்சிகளாகப் பயன்படுகின்றன. இத்தகைய குறு ழைகள் வெட்டுக் கிளியின் ஸ்கோலோஃபோரஸ் உணர்ச்சி உறுப்பில் காணப்படுகின்றன. இவ்வுனுப்பு பறைச் சவ்வின் அதிர்வுகளுக்கேற்ப எதிர்ச் செயல் புரிகிறது. தேனீக் களின் உணர் கொம்புகளிலும் இவை உள்ளன. குறு இழைகளைப் போன்றே சிறிய விலங்கு களில் இயக்கத்தை நடத்துகின்ற சில இழை அமைப்புகள் உள்ளன. இவை நீளிழைகள் (flagella) எனப்படும். குறு இழைகள், நீளிழைகள் ஆகியவற்றிற் கிடையே அமைப்பில் எவ்வித வேறுபாடும் இல்லை. எண்ணிக்கையில் குறைந்தும், நீண்டும் உள்ளவை நீளிழைகள் என்றும், எண்ணிக்கையில் மிகுந்தும்,