166 குறு இழைகள்
166 குறு இழைகள் பட்டுள்ளது. இதிலிருந்து நெக்சின் என்ற இன்னொரு பிரித்தெடுக்கப்பட்டுள்ளது. இவ்விணைப்பு புரதம் களின் செயல் சரியாகத் தெரியவில்லை. இவை குறு இழைகளில் நடைபெறும் வழுக்கும் செயலின்போது ஆக்சோநீமின் அமைப்புக் குலைந்து விடாமல் கட்டுக் கோப்போடு வைத்திருக்கின்றன. ஆர அச்சுகள். மைய நுண்குழல்களைச் சூழ்ந் துள்ள உறைக்கும், இரட்டை நுண் குழல்களுக்கும் டையில் ஆர அமைப்பில் பாவங்கள் உள்ளன. இவை ஆர அச்சுகள் (radial spokes) எனப்படும். இவை அனைத்துமே மையத்தை நோக்கி அமைந்துள்ளன. இவற்றின் நுனீயில் அடர்த்தியான குமிழ் போன்ற பகுதி உள்ளது. இவை ஒரே நுண்குழல்களை ஒன்றின் மேல் ஒன்று வழுக்க வைத்துக் குறு இழையை வளைக் கின்ற செயலில் பங்கேற்கின்றன். . அடித்துகள்கள். வெளியில் நீட்டிக் கொண்டி ருக்கும் குறு இழை, செல்லின் உள்ளே அடித்துகளில் ணைக்கப்பட்டுள்ளது. இது செல் பிரிதலில் பங் கேற்கும் சென்டிரியோலுக்கு இணையாகக் கருதப்படு கிறது. சென்டிரியோலின் உள்ளமைப்பும், ஏறக் குறைய ஒரு குறு இழையின் உள்ளமைப்பையே ஒத்துள்ளது. இதன் ஓரத்திலும் 9 நுண்குழல்கள் காணப்படுகின்றன. வை துணை இழை A, து ணை இழை துணை B. துணை இழை C என்று குறிக்கப்படுகின்றன. இழை A யும், துணை இழை B யும் குறு இழைத்தகட்டைக் (ciliary plate) Lig Goo கின்றன. ஆனால் துணை இழை C குறு இழைத் தகட்டோடு முடிவடைந்து விடுகிறது. சென்டிரி யோலில் மைய நுண்குழல்கள் இல்லை. ஓர நுண் குழல்களில் டைனின் புயங்கள் ல்லை. குறு இழைச் சிறுவேர்கள். சில குறு இழைச் செல்களில் காணப்படுகின் ை அடி உறுப்பி லிருந்து தோன்றுகின்றன. இவற்றில் பட்டைகள் போன்ற அமைப்புகள் உள்ளன. இவை கைனட்டோ கோமை, செல்லோடு இணைக்கும் நங்கூரம் போன்று விளங்குகின்றன. இவையும் குறு இழைகளின் சுருக் கத்தில் பங்கேற்கின்றன என்று தெரிகிறது. ஏனெனில் சிறு வேர்களில் உள்ள குறுக்குப் பட்டைகளில் ATP - ase இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. வை குறு இழை இயக்கத்தின் வேதியியல் அடிப்படை. குறு இழைகளும், நீளிழைகளும் இயங்கும்பொழுது அவற்றில் நடைபெறும் வேதியியற் செயல்கள் ஒரே வகையாகக் காணப்படுகின்றன. இயங்கும் விதத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள, பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. துணை இழை A, துணை இழை B இவை இரண்டும் தனித்தனியாக இயங்கலாம் அல்லது அவை இரண்டும் ஒன்றின் மேல் ஒன்று வழுக்கிக் கொண்டும் இயங்கலாம். தசை ஒத்தியங்கு இயக்கத்தின்போது குறு இழைகள் வெவ்வேறு சில நிலைகளில் நேராக்வும், சில வளைந்தும் காணப்படுகின்றன. ஆனால் அவற்றின் நுண்ணிழைகளின் நீளத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று எலெக்ட்ரான் நுண்ணோக்கி ஆய்வுகள் தெளிவாக்கி உள்ளன. ஆகவே இழைகளில் நடப்பது போன்றே இவற்றிலும் நுண்ணிழைகள் ஒன்றின்மேல் வழுக்கிக் கொண்டு யங்குகின்றன. இதன் விளைவாகத்தான் குறு இழைகள் வளைகின்றன என்று தெரிகிறது. செயல் வழுக்கும் இழைக் கொள்கையால் விளக்கப் படுகிறது. வழுக்கும் இழைக்கொள்கை. இயக்கத்தின்போது ஒரே இணையில் உள்ள இரட்டை நுண்குழல்கள் ஒன்று ஒன்றின்மேல் கொள்கின்றன வழுக்கிக் இவ்வாறு நடைபெறும்பொழுது அடுத்தடுத்துள்ள இரட்டை நுண்குழல் அமைப்புகளுக்கிடையே (microtubular doublet) குறுக்குப் தோன்றித் தோன்றி மறைகின்றன. டைளின் புயங் களே இப்பாவங்கள் என்று தெரிகிறது. பாலங்கள் ATP -இன் பங்கு. பெரும்பாலான ஆய்வுகள் ATP -இன் பங்கை உணர்த்துபவையாக இருக் கின்றன. குறு இழைகளின் இயக்கத்திற்குத் தேவை யான ஆற்றல் ATP - இல் இருந்து கிடைக்கிறது என்பதை ஹாப்மேன், பெர்லிங் இருவரும் கண்டனர். குறு இழைகளைக் கிளிசரினேட் செய்தால் அவற்றின் யக்கம் நின்று விடுகிறது. ஆனால் அவற்றுடன் ATP - யைச் சேர்த்தால் அவற்றின் இயக்கம் மீண்டும் தொடங்குகிறது. இது சில நிமிடங்கள் முதல். சில து மணி நேரம் வரை நீடிக்கிறது. கிப்பன்ஸ், ரோவே இருவரும் டைனின் பாலங்களைக் கிளிசரினேட் செய்து நீக்கிவிட்டு, பின்னர் ATP சேர்க்கப் இழை இயக்கம் மீண்டும் தொடங்குவதில்லை என்று பட்டாலும்கூட குறு கண்டனர். ஆனால் டைனின்களை மீண்டும் குறு ழைகளோடு சேர்த் தால், அவை துணை இழையுடன் ஒட்டிக் கொள் கின்றன. இந்நிலையில் ATP சேர்க்கப்பட்டால் இயக்கம் மீண்டும் தொடங்குகிறது. ஆகவே ATP-யைப் பயன்படுத்திக் கொள்ளும் வேதியியல் அமைப்பு டைனின் புயங்களில் உள்ள தென்று தெரிகிறது. டைனின் புயங்களில் ATP-ase உள்ளது என்று ஆய்வுகள் தெளிவாக்கியுள்ளன. இவ் வாறு டியூபுலின், டைனின் ஆகியவற்றிற்கிடையே நடைபெறும் வேதியியற் செயல்கள் குறுஇழை இயக் கத்தில் அடிப்படையாக அமைகின்றன. மைய நுண்ணிழைகளையும், ஓர நுண்ணிழை களையும் இணைக்கின்ற ஆர அச்சுகளும் ம். இயக் கத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. நுண்ணிழைகள் வழுக்கிக் கொள்ளும்பொழுது அவற்றின் செயலை குறு இழையை வளைக்கின்ற செயலாக மாற்று