பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுக்க வினைகள்‌ 167

குறுக்க வினைகள் 167 வதற்கு இவற்றின் உறுதியான அமைப்பு உதவுகிறது. குறு இ ை ழை வளைந்துள்ள பகுதியில் இவை நீட்சி யுற்று விரிந்திருக்கின்றன என்றும், பிற இடங்களில் சாதாரணமான நிலையில் உள்ளன என்றும் எலெக்ட் ரான் நுண்ணோக்கி காட்டுகிறது. குறு இழைகளைக் கிளிசரினேட் செய்து பின்னர் அவற்றை டிரிப்சின் நொதியுடன் சேர்த்தால் ஆர அச்சுகள் கரைந்து விடுகின்றன. ATP சேர்க்கப் பட்டால் துணை இழைகள் தனித்தனியாகப் பிரிந்து சென்று விடுகின்றன. இதற்குக் காரணம், ஆக்சோ நீமை ஒன்றாகச் சேர்த்து வைத்திருக்கும் அமைப்பு கள் இல்லாமயால் குறு இழைகளில் வளைதல் நடைபெறுவதில்லை. மாறாக, டைனின் பாலங் களுக்கும், துணை இழைகளுக்கும் இடையில் வேதி யியற் செயல்கள் இடைவிடாமல் நடைபெற்று, இறுதியில் ஒரு நுண்குழல் இன்னொரு நுண்குழலி லிருந்து தனியே பிரிந்து விடுகிறது. குறு இழைகளின் இயக்கத்திற்குக் கால்சியம், மக்னீசியம் அயனிகள் தேவைப்படுகின்றன. க.பழனிவேல் நூலோதி. Arthur Giese, Cell Physiology, Fifth Edition. W.B. Saunders Company, philadelphia, 1973: E. D. P. De Robertis and E. M. F. De Robertis, Cell and Molecular Biology, Seventh Edition, W.B. Saunders Company. Philadelphia, 1980. குறுக்க வினைகள் இரு வினைப்படு மூலக்கூறுகளுக்கு இடையே, ஒரு சிறிய மூலக்கூறு (நீர், எத்தில் ஆல்கஹால், ஹைட் ரஜன் குளோரைடு போன்றவை) நீக்கமுற்றாலோ, புதிய கார்பன் கார்பன் பிணைப்புத் தோன்றி னாலோ அவ்வினை குறுக்க வினை (condensation reaction) எனப்படும். சிறு மூலக்கூறு வெளியேறும் குறுக்கவினை வகைக்கு, கிளெய்சன் எஸ்ட்டர் குறுக்கவினை சிறந்த எடுத்துக்காட்டாகும். ỊCH COOCH C, H₂ONa எத்தில் அசெட்டேட் CH COCH COOCH, +C,H,OH எத்தில் அசெட்டோ அசெட்டேட் சிறு மூலக்கூறு எதுவும் வெளியேறாமல் புதிய கார்பன் - கார்பன் பிணைப்பு மட்டுமே உருவாகும் குறுக்க வினை வகைக்கு ஆல்டால் குறுக்கவினையைச் சான்றாகக் குறிப்பிடலாம். OH 2CH CHO அசெட்டால்டிஹைடு CH CHOHCH CHO அசெட்டால்டால் குறுக்கவினைகளுக்கென்று தனி வினை வழிகள் இல்லை. காட்டாக, கிளெய்சன் குறுக்கவினையில் எஸ்ட்டர் மூலக்கூறின் கார்போனைல் தொகுதியில் கார்பன் எதிர் அயனியால் அணுக்கருக்கவர் பதிலீடு நிகழ்கிறது. ஆல்டால் குறுக்கவினையிலோ, ஆல்டி ஹைடு அல்லது கீட்டோன் மூலக்கூறின் கார்போ னைல் தொகுதியிலோ அணுக்கருக்கவர் சேர்க்கை நிகழ்கிறது. கிளெய்சன் எஸ்ட்டர் குறுக்க வினை. இதனை எஸ்ட்டரை எஸ்ட்டரால் அசைலேற்றம் செய்தல் எனலாம். 2RCH,COR RCH,CCHCOR' 11 (30% விளைச்சல்) கார்பாக்சி தொகுதிக்கு அடுத்த கார்பன் அணுவில் ஒரு ஹைட்ரஜன் அணுவையேனும் கொண்ட எஸ்ட்டர் களைச் சோடியம் எத்தாக்சைடு போன்ற வலிமிகு காரத்துடன் வினைப்படுத்தினால், குறுக்கவினை நிகழ்ந்து ஒரு - கீட்டோ எஸ்ட்டர் விளைகிறது. பொதுவாக, இவ்வினையை நிகழ்த்துவதற்கு உலர் எத்தில் அசெட்டேட் நீர்மத்தைச் சோடியத்துடன் ஆவி மீள் கொதிப்புக்குட்படுத்துதல் வழக்கம். எத்தில் அசெட்டேட்டில் மாசாக இடம் பெறும் 2-3% எத்தனாலுடன் சோடியம் வினையுற்றுச் சோடியம் எத்தாக்சைடை உண்டாக்குகிறது. 8 இடத்தில் ஹைட்ரஜன் அணுக்களைக் கொண்ட இரு வேறு எஸ்ட்டர்களை ஒரே கலவையில் குறுக்கவினைக்குட் படுத்தினால் நான்கு வினை விளைபொருள்களைக் காண்ட கலவை கிடைக்கிறது. இதனால் வினையை வேதித் தொகுப்பில் பயன்படுத்துவதில்லை. ஆனால் இந்த ஆய்வு முடிவிலிருந்து இவ்வினையின் வினை வழிமுறை மூலக்கூறுகளுக்கு இடைப்பட்டது (intramolecular) என்பது தெளிவாகிறது. இடத்தில் ஹைட்ரஜன் இடம் பெறாத எஸ்ட்டரையும் & ஹைட்ரஜனைப் பெற்றுள்ள எஸ்ட்டரையும் ஒரே கலவையில் கிளெய்சன் குறுக்க வினைக்குட்படுத்தினால், இரு எஸ்ட்டர்களும் இணைந்த விளைபொருளே மிகுதியாகக் கிடைக் கிறது. ஹைட்ரஜன் இடம் பெறாத எஸ்ட்டர் களுக்குச் சான்றுகள்: பென்சோயிக் அமிலம், மற்ற அரோமாட்டிக் அமிலங்கள் ஆகியவற்றின் எஸ்ட்டர் கள். எத்தில் கார்போனேட், எத்தில் ஆக்சலேட் ஆகியன மெலனோக் எஸ்ட்டர்களைத் தரு கின்ற றன.