பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 குறுக்க வினைகள்‌

172 குறுக்க வினைகள் விளைபொருள் மூலக்கூறுகள் மட்டுமே உருவாகின் றன. இவ்வினையுறு இரட்டையில் & - ஹைட்ரஜ னைப் பெறாத மூலக்கூறில் மட்டுமே வினையுறு கார் போனைல் தொகுதி இடம் பெற்றிருப்பின், ஒரே யொரு வினை விளைபொருள் மட்டுமே கிட்டும். காட்டாக. ஃபார்மால்டிஹைடு அசெட்டால் டிஹைடு கலவையில் காரத்தைக் கலந்தால் ஹைட் ராக்சி புரோப்பியானால்டிஹைடு மட்டுமே விளை கிறது. ஏனெனில், ஃபார்மல்டிஹைடின் கார்போ னைல் தொகுதி அசெட்டால்டிஹைடினுடையதை விட அணுக்கருக்கவர் சேர்க்கை வினையில் வினைத் திறன் கூடுதலாகப் பெற்றுள்ளது. குறை வெப்ப நிலையில் மேலும் குறுக்கம் நிகழ்ந்து, அசெட்டால் டிஹைடின் மூன்று ஹைட்ரஜன் அணுக்களும் பதி லீடாகி,இறுதியாக (CH,OH), CCHO எனும் சேர்மம் உண்டாகிறது. அறிமுறை அடிப்படையில், இரு வேறு அல்க் கைல் தொகுதிகளைக் கொண்ட கீட்டோன் வினை யுறுவதால் இருவேறு கார்பன் அயனிகள் தோன்ற வாய்ப்புள்ளது. எனினும், நடைமுறையில் ஹைட்ரஜன் அணுக்களைக் கூடுதலாகக் கொண்ட கார்பன் அயனியே தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக CHCOCHCH, ஐ விட-CH,COCH,CH, உருவாகும். வாய்ப்பு மிகுதி. ஓர் ஆல்டிஹைடையும். ஒரு கீட்டோனையும் ஒரே குடுவையில் இவ்வினைக்குட்படுத்தினால், எதிர் பார்க்கப்படும் நான்கு விளைபொருள்களுக்குப் பதி லாக இரண்டு மட்டுமே கிடைக்கின்றன. அவை ஆல் டிஹைடு மூலக்கூறுகள் தமக்குள் குறுக்கம் நிகழ்த்தி விளைவிக்கும் சேர்மம். கீட்டோனின் கார்பன் அயனி யும் ஆல்டிஹைடின் கார்போனைல் தொகுதியும் வினையுற்று விளைவாக்கும் சேர்மம். இவற்றுள் முதலாவதாகக் கூறப்பட்ட வினை விளை சேர்மத் தின் விளைச்சலைக் குறைப்பதற்கு கீட்டோன்-காரக் கலவையுடன் ஆல்டிஹைடை மெல்ல, சிறிது சிறி சேர்க்கலாம். இம்முறையைப் பயன்படுத்தி வைட்டமின் A இன் முழுத் தொகுப்பில் ஒரு பகுதி பாக, சிட்ராலிலிருந்து நீ அயோனோனைப் பெறும் கட்டம் நிகழ்த்தப்படுகிறது. CH,CHO+CH, COCH, NaOH C,H,CH=CHCOCH,+H,O (65-78%) C,H,CH=CHCOCH,+C,H,CHO→ C,H,CH=CHCOCH=CHC H5+H,O (90-94%) மேற்காணும் வினையில் அசெட்டோனுக்குப் பதிலாக அசெட்டால்டிஹைடைப் பயன்படுத்தினால், சின்னமால்டிஹைடு கிடைக்கும் (கிளெய்சன் வினை). CHCHO+CH CHO NaOH CHCH=CHCHO+H,0 கிளெய்சன் வினை கிளெய்சன் எஸ்ட்டர் குறுக்க வினை இரண்டுமே குறுக்கவினைகளேயாயினும் ரண்டும் னெவ்வேறானவை. பெர்கின் வினை. ஓர் அரோமாட்டிக் ஆல்டி ஹைடும் அமில நீரிலியும் கார்பாக்சிலேட் அயனியின் வினையூக்கத்தினால் விரைவாகக் குறுக்கமடை, கின்றன. காரத்தன்மை கொண்ட கார்பாக்சிலேட் அயனியின் தாக்கத்தால் அமில நீரிலி கார்பன் எதிர் அயனியாகச் சிதைவுறுகிறது. CHCHO+(CH, CO),0 CII CO₂Na CH,COOCOCH,+CH,CO,- 3 C,H,CH=CHCO,H CH,COOCOCH;+CH3CO,H CgH,C+CH,COOCOCH, C,H,CCH,COOCOCH, H H OH H₂O CH,CCH,COOCOCH₁ 2016, H 1170 C,H,CH=CHCOOCOCH, CHCH=CHCO;H+CH CO H அரோமாட்டிக் இவ்வினையில் வளையத்தில் எலெக்ட்ரான் ஈர்க்கும் தொகுதிகள் இருப்பின், வினையின் திறன் உயருகிறது.பாரா-நைட்ரோபென் சால்டிஹைடு 82% விளைச்சலில் பாரா-நைட்ரோ சின்னமிக் அமிலத்தைத் தருகிறது. எலெக்ட்ரான் விலக்கும் தொகுதிகள் திறனைக் குறைக்கின்றன.