பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 குறுக்கீடு

182 குறுக்கீடு அமைப்புகள் மூலம் அளவிடப்படுகிறது. மைக்கல்சன் அளவி, முதல் நிலைக் குறுக்கீட்டு விளைவைக் காட்டு கிறது எனின். இது இரண்டாம் நிலைக் குறுக்கீட்டு விளைவைத் தருகிறது எனலாம். படம் 12 இல் இரு முனைகளின் இடைத் தொலைவை மிகுதியாக்கினாலும் ஆடிகளின் இருப் பிட வேறுபாட்டால் குறுக்கீட்டுப் பாங்கம் மாறுவ தில்லை, ஒளியியல் கூறுகளின் சிறு மாறுபாடுகள் ஒளிச்செறிவு இணக்கத்தைப் பாதிப்பதில்லை. சாதாரண ஆடிகளின் உதவியால் 0.0069 கலை கோண விட்டம் உள்ள சிரியஸ் மீனை ஃஆன்பெரி, பிரவுன், ட்விஸ் மூவரும் ஆய்ந்தனர். ஆஸ்திரே லிய நாராப்ரியில் உள்ள 188 மீட்டர் அடித்தள டைவெளியுள்ள இணக்க அளவியால் 0.5 மில்வி கலை கோண விட்டமும் அளக்கப்பட்டது. வரியை கட்டத் தூண்டு கதிர்ப்புக் குறுக்கீட்டு விளைவு அளவிகள் (phase-switching radio interferometer). இவை ஒளியலைக் கட்டத் தூண்டுதல் என்னும் அடிப் படையில் அமைந்தவை. கீழ் - மேல் திசை போன்ற வெவ்வேறிடங்களில் அமைந்த வான்கம்பிகள் (aerials) ஏற்பியுடன் இணைக்கப்பட்டிருக்கும். விண்மீன் ஒன்றி லிருந்து வரும் கதிர்களை வான்கம்பிகளிலிருந்து சம தொலைவில் இல்லாத அனைத்து நேரத்திலும் ஒரு வான்கம்பி மற்றதற்கு முன்னதாக அன்றிப் பின்ன தாக உணரும். இதனால் ஏற்படும் ஒளிப்பாதை, வேறுபாட்டுக் குறுக்கீட்டு ஒளிர் - இருள் உருவாக்கும். பின்புலக் கதிர்வீச்சுக் குறியீடுகள் மேல் பொருந்துவதால் இது தெளிவாக இராது. எனினும் ஒரு வான்கம்பியின் கட்டத்தைச் சீரான கால இடை யிட்டு மாற்றி வந்தால் ஏற்பியின் வெளிப்பாடு, ஒரே கால நிகழ்வில் நேர்மாறாக்கப்படுகிறது. இதுவே கட்டத் தூண்டல் எனப்படும். இதனால் பின்புலக் கதிர்வீச்சு, ஏற்பி அலையிரைச்சல் யாவும் நேர் மாறாக்கி நீக்கப்பட்டு, தெளிவான குறுக்கீட்டு வரிகள் மட்டுமே தெரியும். நடுவரி உச்சத்தின் காலத்தை அளவிட்டு, விண்பொருளின் செங்குத்து. ஏற்றத்தை யும், வரி இடைவெளியையும் அளந்து, வரிப்பாங்க வீச்சைக் கணித்து மூலத்தின் ஒளி வலிமையையும் அறியலாம். தொடர்பற்ற, நெடுந்தொலைவில் உள்ள இரு வான்கம்பிகளின் உதவியால் துல்லிய நேரத் தனித் தனிப் பதிவுகளை ஆய்வகத்தில் ஒருங்கிணைத்து வரிப்பாங்கத்தை உருவாக்கிச் செய்திகளை அறிய லாம். பல வான்சும்பிகளை வரிசையாகக் கொண்ட கீற்றணிக் குறுக்கீட்டு விளைவு அளவிகளும் இம்முறை யில் அமைக்கப்பட்டுள்ளன. புள்ளிக் குறுக்கீட்டு விளைவு அளவியல் (speckle (interferometry). வேசர் போன்ற ஓரியல் தன்மை மிக்க மூலங்களிலிருந்து வரும் கதிர், சொரசொரப்பான தளங்களால் சிதறடிக்கப்படும்போது, புள்ளிப் பாங்கம் என்ற தாறுமாறான செறிவுப்பரவீடு உருவாக்கப்படு கிறது. விண்மண்டலக் கொந்தளிப்புகளால் பகுதிறன் குறையும்போது விளிம்பு விளைவுக்குட்பட்ட பகு திறனைப் பெற, புள்ளிக் குறுக்கீட்டு மாதிரி பயன் படுகிறது. முழு நுண் பதிவுக் குறுக்கீட்டு விளைவு அளவியல் (holographic interferometry ) லேசர் போன்ற ஓரியல்புக் கதிரின் ஒரு பகுதி நேராகவும், மறுபகுதி பொருளில் பட்டு எதிரொளித்தும் இணைந்து குறுக் கீட்டு விளைவை உருவாக்கி ஒரு முழு நுண்பதிவைப் படச் சுருளில் பதிக்கிறது. பதிக்கப் பயன்படுத்திய ஒளிக்கதிரை மீளாக்கத்துக்குப் பயன்படுத்தும்போது அதே அலை முகத்தால் குறுக்கீட்டுப்பாங்கம் பெறப் படுகிறது. நீண்ட காலத்திற்குப் பின்னும் குறுக்கீட்டுப் பாங்க மீள் உருவாக்கம் இதன் தனிச்சிறப்பு. இரட்டை ஒளித்திறப்பும் (double exposure) காலச் சராசரி (time average) முழு நுண் பதிவுக் குறுக்கீட்டு விளைவு அளவியல்களும் வழக்கத்தில் உள்ளன. இல். இரத்தினவேல் க. நூலோதி. Jenkins and white, Fundamemals of Optics. McGraw-Hill Book Company, Singapore, 1985. குறுக்கீடு தேவையான குறிப்புகளைப் பெறும்போது அத்துடன் குறுக்கிடக்கூடிய தேவைப்படாத மின்னாற்றல் எதுவும் குறுக்கீடு (interference) எனப்படும். அது மனிதனால் உருவாக்கப்படும் குறிப்புகளாகவோ. அருகிலுள்ள மின்னோடிகள், தானியங்கு தொகுதி கள், வானொலி' செலுத்திகள், சரிவர இயங்காத மின்னியல் கருவிகள் ஆகியவற்றால் உருவானவை யாகவோ இருக்கக்கூடும். . குறுக்கிடும் குறிப்புகள் வழிகாட்டப்படாத மின் காந்த அலைகளாகப் பரப்பப்படலாம். அல்லது மின் பாதைகளின் வழியே வழிகாட்டப்பட்டும் பரப் பப்படலாம். மின்னல் போன்ற இயற்கை நிகழ்ச்சி களாலும் சில சமயங்களில் குறுக்கீடு நிகழக்கூடும். செய்தித் தொடர்பு அல்லது ராடார் தொகுதி களை நெருக்கிக் குலைக்கும் (jamming) பொருட்டுத் திறன் வாய்ந்த செலுத்திகளால், குறுக்கீட்டுக் குறிப்பு கள் சில சமயங்களில் உற்பத்தி செய்யப்படும். மனித னால் உருவாக்கப்படும் குறுக்கீடுகளை அவை உற்பத்தி யாகும் டங்களிலேயே நன்கு அடக்க முடியும். மின்பொறிகளைக் கட்டுப்படுத்த. பொறி வீசும் தொடுவான்களுக்கிடையே மின்தேக்கிகளை கலாம். கருவியை உலோகக் கூடுகளால் ணைக் கவசமிட