பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுக்குப்‌ பேச்சு 187

மக்காச்சோளச் செல்களில் இதனைக் கண்டறிந்து தாவரங்களிலும் இது நிகழ்வதை உறுதிப்படுத்தினர். பல காரணக்கூறுகள் குறுக்குப் பரிமாற்ற நிகழ்வு களை மிகுதியாக்கவோ குறைக்கவோ செய்கின்றன. குறுக்குப் பரிமாற்றங்களின் வீதம் 227 C க்கு அதிக மான அல்லது குறைவான வெப்ப அளவாலும், எக்ஸ் கதிர்களாலும், மைடோமைசின்-C ஆக்டினோ மைசின் D ஆகிய நுண்ணுயிர்எதிர்பொருள்களாலும் அதிகரிக்கின்றன. உணவில் வேறுபாடுகள். ஜீன்களின் திடீர்மாற்றங்கள் குரோமோசோம் பகுதிகளின் தலை கீழ் இணைப்புகள் ஆகியவை இதன் வீதத்தைக் குறைக்கின்றன. குரோமோசோமின் ஒரு பகுதியில் ஏற்படும் குறுக்கிணைவு, அப்பகுதியினருகில் இன்னொருகுறுக்கிணைவு ஏற்படுவதைத் தடுக்கிறது. குரோமோசோமின் மையப்பகுதி மற்றும் முனைப் பகுதிகளில் குறுக்கிணைவு தோன்றுவது அரிதாகும். ஒரு குரோமோசோமில் இரு ஜீன்களுக்கிடையில் உள்ள தொலைவு மிகும்போது, அவற்றிற்கிடையே குறுக்கிணைவு தோன்றுவதரிது. என்டோநியூக் ளியேஸ், விகேஸ் என்ற நொதிகள் குறுக்குப்பரிமாற் றத்தின்போது பெரும் பங்கு வகிக்கின்றன எனக் கண்டறியப்பட்டுள்ளது. குறுக்குப்பரிமாற்றத்தின் காரணமாக ஜீன்கள் புதிய முறையில் இணைக்கப் படுகின்றன. இதனால் புதிய பண்புகளைக்கொண்ட இனங்கள் தோன்றுவதால் அவை படிமலர்ச்சிக்கு அடிப்படையாகின்றன எம். இராமலிங்கம் குறுக்குப் பேச்சு 187 பிரிப்பு வழி முறைகள் பல அமைப்புகள் ஒன்றாக ணைந்துள்ள முறைகளாகும். இதன் மூவகையான முறைகளும் அவற்றின் பல வகையான கூட்டுகளும் ஓர் அமைப்பில் பரவலாகப் பயன்படுகின்றன. இடவெளிய பிரிகை (space) (space division). இந்த ஒருங்கிணைந்த முறையில் ஒவ்வொரு குறிப்பும் தனித்தனிக் கம்பி அல்லது கடத்தல் ஊடகத்தின் மூலமாகச் செலுத்தப்படும். வெவ்வேறு கடத்தல் ஊடகங்கள் நெருக்கமாக அமைந்திருக்கும்போது மின்காந்த இணைப்பு ஏற்பட்டுக் குறுக்குப் பேச்சுத் தோன்றும். சரியான வடிவமைப்பின் மூலம் இம்மின் காந்த இணைப்பைக் குறைக்கலாம். கம்பி வடத்தி லுள்ள வெவ்வேறு இணைக் கம்பிகளை வெவ்வேறு விதமாக முறுக்கி வைத்தல், காப்பிடுதல், இடை வெளியிட்டுப் பிரித்து வைத்தல் ஆகியவற்றாலும் மின்காந்த இணைப்பைக் குறைக்கலாம். இடவெளிப் பிரிசை அமைப்புகளில் தோன்றும் குறுக்குப் பேச்சு ஒரு நேர்போக்கான நிகழ்வாகும். அது குறிப்பு ஆற்றல் மட்டங்களைச் சாரந்திருப்பதில்லை, குறுக் குப் பேச்சினால் இடையூறு செய்யப்படுகிற ஏற்பியும் இடையூறு செய்யும் கடத்தியும் அமைப்பின் ஒரே முனையிலிருந்தால் அது அண்மை முனைக் குறுக்குப் பேச்சு எனவும் ஏற்பியும் கடத்தியும் அமைப்பின் எதிர் எதிர் முனைகளில் இருந்தால் அது சேய்மை முனைக் குறுக்குப் பேச்சு எனவும் வகைப்படுத்தப் படும். Z1 இடையூறு செய்யும் குறிப்பு குறுக்குப் பேச்சு ஒரு பல்வழிச் செய்தித் தொடர்பு அமைப்பில் பிற வழிகளிலிருக்கும் குறிப்புகளின் காரணமாக ஒரு வழி யில் ஏற்படும் குறுக்கீடு, குறுக்குப்பேச்சு (cross talk} எனப்படும். ஒரு பல்வழிச் செய்தித் தொடர்பு அமைப்பின் வழிகள், பல நுகர்வோர்களுக்கிடையில் ஒரே சமயத்தில் குறிப்புகளைப் பரிமாறிக் கொள்ள உதவுகின்றன. வழிகளை இடவெளியிலும், அதிர் வெண்களிலும், காலங்களிலும் தனித்தனியாகப் பிரித்து வைப்பதன் மூலம் இயல்பான குறுக்கீடுகள் தவிர்க்சுப்படுகின்றன. பொருளாதாரப் பற்றாக்குறை போன்ற இடையூறுகள் காரணமாக வழிகளை முற்றி லுமாகப் பிரிக்க முடிவதில்லை. இதனால் குறுக்குப் பேச்சுத் தோன்றுகிறது. குறுக்குப் பேச்சுத் தோன்று வது வழிகள் பிரிக்கப்பட்டிருக்கிற முறையைப் பொறுத்து அமையும். தொலைபேசி வலையமைப்பின் குறுக்குப் பேச்சு மற்றவர்களின் பேச்சுக் குரல்களாக வும், மற்றத்தொலைபேசிகளின் மணியோசையாகவும், அழைப்பு ஒலியாகவும் தெரியும். செலுத்தி இடையூறு செய்யும் வழி வாங்கி 2 (NEXT) அண்மை முனை (FEXT) சேய்மைமுனை Z. NEXT வாங்கி FEXT வாங்கி இடையூறு செய்யப்படுகிற வழி படம் 1. Z.2, Z. Z, மின்மாற்றிகள் அதிர்வெண் பிரிகை. இந்த முறையில் வேறு அதிர்வெண் பட்டைகள் ஒதுக்கப்படுகின்றன. குறிப்புகள், பண்பேற்றத்தின் மூலம் அவற்றின் வெவ்