பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 குறுக்குப்‌ பேச்சு

188 குறுக்குப் பேச்சு பட்டைகளுக்கு மாற்றப்படுகின்றன. அதன் மூலம் தோன்றும் அனைத்துக் குறிப்புகளும் சேர்ந்தாற் போல ஒரே கடத்தல் ஊடகத்தின் வழியாகப் பரப்பப்படுகின்றன. இதற்கு இதற்கு ரேடியோ அலைப் பரப்பு ஓர் எடுத்துக்காட்டு ஆகும். ஊடசுத்தில் தோன்றும் நேர்போக்கற்ற தன்மைகள் டைப்பண் பேற்றக் குலைவுகளைத் தோற்றுவிக்கின்றன. அமைப் பின் நெடுக்கத்தை நீட்டுவதற்காகப் பயன்படுத்தப் படுகிற மிகைப்பிகள் இத்தகைய நேர்போக்கற்ற தன்மைகளை ஏற்படுத்தும். அவற்றால் ஏற்படும் இடைப்பண்பேற்றக் குலைவுகள் அதிர்வெண் பிரிகை செய்யப்பட்ட அமைப்புகளில் குறுக்குப் பேச்சு ஏற் படுவதற்கு முக்கிய காரணமாகும். வீச்சுப் பண்பேற்ற (amplitude modulation) அமைப்புகளில் இடைப் பண்பேற்றக் குலைவுகள் ஏற்படுவதன் காரணமாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வழிகளில் செல்லும் குறிப்புகளின் படிகள் வேறு ஒரு வழியின் அதிர்வெண் பட்டையில் தோன்றும். அதிர்வெண் பண்பேற்றம் அல்லது கட்டப் பண்பேற்றமுள்ள அமைப்புகளில் இவ்வகைக் குறுக்கீடுகள் தோன்றா. ஆனால் அவை கட்ட நேர் போக்கின்மைகளால் பாதிக்கப்படுகின்றன. குறிப் பாக அதிர்வெண் பண்பேற்றத்தைக் கட்டப் பண் பேற்றமாக மாற்றுகிற கட்ட நேர் போக்கின்மைகள் அவற்றைப் பாதிக்கின்றன. இவை ஒரு வழியில் சிறிய அளவில் எஞ்சியிருக்கிற வீச்சுப் பண்பேற்றத்தை வேறு வழிகளில் அதிர்வெண் பண்பேற்றம் அல்லது கட்டப் பண்பேற்றமாக மாற்றுகின்றன. அடை காலப் பிரிகை (timc division). இம்முறையில் ஒவ் வொரு குறிப்பிற்கும், தனித்தனியான நேர இடை வெளிகள் ஒதுக்கப்படுகின்றன. இந்த நேர டை வெளிகள் காலப் பிறைகள் (time slots) எனப்படு கின்றன. குறிப்பு துண்டுகளாக்கப்பட்டு அந்த நேர வெளிகளில் ஒரே கடத்து ஊடகத்தின் மூல மாகப் பரப்பப்படும். எல்லா வழிகளின் காலப் பிறை களும் ஒரு சீரான முறையில் மாற்றி மாற்றி அமைக் கப்பட்டிருக்கும், ஒரு குறிப்பிட்ட காலப் பிறையின் போது ஒரு வழியில் வரும் குறிப்பு, கடத்தல் ஊடகத் தின் வழியாகச் செலுத்தப்படுகிறது. அனைத்துக் காலப் பிறைகளும் அடங்கிய காலப் பிரிவில் ஒரு முறை மட்டுமே அந்தக் குறிப்புச் செலுத்தப்படும். முறை அமைப்புகளில் அடுத்தடுத்துள்ள காலப் பிறை களுக்கிடையிலும் மிக நெருக்கமாக அமைந்துள்ள காலப் பிறைகளுக்கிடையிலும் குறுக்குப் பேச்சுகள் தோன்றுகின்றன. வழியின் பட்டை அகலம் யறுக்கப்பட்டு விடுவதால், தோன்றுகிற நேர் போக்கான நிகழ்வான இடைக்குறியின் குறுக்கீட்டு வடிவத்தில் (inter symbol interference) இக்குறுக்குப் பேச்சு அமையும். எண் வரை குறுக்குப் பேச்சுத் தீமைகள். ஏற்பியில் தோன்றும் குறுக்குப் பேச்சுகள் தெளிவாகப் புரியக் கூடியவை யாக இருக்கலாம் அல்லது புரியாமலும் போகலாம். குறுக்குப் பேச்சு தெளிவாக இருந்தால் மற்றவர் களுடைய தனிப்பட்ட செய்திகள் வெளியாகிவிடும். இது நுகர்வோருக்கு ஒவ்வாததாகிவிடும். புரியாத குறுக்குப் பேச்சு இன்றியமையாச் செய்தித் தொடர்பு களின்போது இடையூறு செய்யும். தீர்வுகள். குறுக்குப் பேச்சால் ஏற்படுகிற குலைவு களை உருவாக்கும் சில காரணிகள் வடிவமைப்பாளர் சுனால் கட்டுப்படுத்த முடியாதவை. எடுத்துக் காட்டாக இடையூறு செய்யும் வழியும் இடையூறு செய்யப்படும் வழியும் சேர்ந்தாற் போலச் செயல் படும்போது மட்டுமே குறுக்குப் பேச்சு தொல்லை யாக அமைகிறது. ஏற்பியின் உணர்வுக் கூர்மை பிற கூறுகளுடன் நுகர்வோரின் தொலைபேசி அல்லது தகவல் பெறுமுனைக் கருவியின் தரத்தையும், செய்தித் தொடர்பு அமைப்புக்குள்ளிருந்தும் வெளியி லிருந்தும் உள்ள தோற்றுவாய்களிலிருந்து வெளிப் படும் சூழ்நிலை ஓசையையும் பொறுத்திருக்கும். பல்வழி அமைப்புகளை வடிவமைக்கும்போது இடவெளிப் பிரிகை அமைப்புகளில் ஓரச்சுக் கம்பி வடங்கள் அல்லது ஒளியியல் இணைப்புத் தோன்று வதைக் குறைக்கும் முயற்சிகள் செய்யப்படுகின்றன. அதிர்வெண் பிரிகை அமைப்புகளில் மறு அஞ்சல் (repeaters) சுருவிகளின் தற்சிறப்பியல்புகள் நேர் போக்காக அமைவதற்குத் தகுந்த கட்டுப்பாட்டு ஏற்பாடுகள் செய்வதன் மூலமும் அதிர்வெண் பண் பேற்றத்தைப் பயன்படுத்துவதன் மூலமும் குறுக்குப் பேச்சுகளைக் குறைக்கிறார்கள். காலப் பிரிகை அமைப்புகளில் அகன்ற பட்டை கடத்தல் திறனுள்ள ஒளியியல் இழைகள் போன்ற ஊடகங்களைப் பயன் படுத்துவதன் மூலம் குறுக்குப் பேச்சுகள் குறைக்கப் படுகின்றன. அதிர்வெண் பட்டைகள், காலப் பிறைகள், பெரும குறிப்பு - திறன் மட்டங்கள் ஆகிய வற்றை அமைப்புகளுக்கிடையில் பொறுக்க முடியாத அளவில் குறுக்கீடுகள் ஏற்படாத வகையில் குறிப்புக் கடத்தல் ஊடகத்தைத் திறம்படப் பயன்படுத்துமாறு வெவ்வேறு அமைப்புகளுக்கு ஒதுக்க முடியும். எனவே குறுக்குப் பேச்சு இடையூறைக் கட்டுப்படுத்துவதில் அதிர்வெண் நிரலை நிர்வகிப்பது ஒரு குறிப்பிடத்தக்க முறையாகும். வடிவமைப்பின் மூலம் வழிகளுக்கிடையிலான இணைப்பைக் குறைப்பதுடன் குறிப்பு மட்டத் திற்கும், குறுக்கீட்டு ஓசை மட்டத்திற்கும் இடை யிலான தகவும் குறுக்கீட்டு ஓசை மட்டமும் ஏற்பி முனையில் சிறும அளவுக்குக் குறைக்கப்பட வேண்டும். ஒப்புமைச் (anaiog) செய்தித் தொடர்பு அமைப்புகளில் ஒலிக் குறிக் குறைப்பிகள் (syllabic compandors ) என்ற கருவிகளைக் குரல் மூலச் செய்தித் தொடர்பு களின்போது வெற்று வழி ஓசைகளை, அதாவது இரு வர் பேசிக் கொண்டிருக்கும்போது இடையிடையே அமைதி நிலவும்போது உண்டாகிற குறுக்குப் பேச்சு .