பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுக்கு மின்‌ சுற்று 189

குறுக்கு மின் சுற்று 189 களைக் குறைக்கப் பயன்படுத்துகின்றனர். எண்குறிச் செய்தித் தொடர்பு அமைப்புகளில் துடிப்பு உருவாக் கத்தைப் பயன்படுத்திக் குறியீட்டுக் குறுக்கீடுகளைக் குறைத்துக் குறுக்குப் பேச்சுகள் குறைக்கப்படுகின்றன. தகுந்த அளவில் குறிப்பு மட்டத்திற்கும் குறுக்கீட்டு ஓசை மட்டத்திற்கும் இடையிலான தகவைப் பராமரிக்க வேண்டியிருப்பதால் மறு அஞ்சல் கருவி களின் எண்ணிக்கையையும், அவற்றுக்கிடையிலான தொலைவையும் உயர்த்த முடியாமல் போகிறது. 100 கே.என். குறுக்குமணி, கம்பளத்துணி காண்க: கம்பளி குறுக்கு மின் சுற்று ராமச்சந்திரன் ஒரு மின் சுற்றில் ஒன்று அல்லது மேற்பட்ட தறு வாய்களில் மிகை மின்னோட்டம் பாயும் நிலையே குறுக்கு மின்சுற்று (short circuit) எனப்படும். பழுது ஒரு தறுவாய்க்கும், நில இணைப்பிற்கும் இடையே உள்ள குறுக்கிணைப்பாகவோ இரண்டு அல்லது மேற்பட்ட தறுவாய்களுக்கும் நிலத்திற்கும் தறு டையே உள்ள குறுக்கிணைப்பாகவோ இரண்டு அல்லது எல்லா மூன்று தறுவாய்களுக்கிடையே உள்ள குறுக்கிணைப்பாகவோ இருக்கக்கூடும். ஒரு வாய்க்கும், நிலத்திற்கும் இடையே உள்ள இணைப்பு. நில இணைப்புச் செய்யப்பட்டிருந்தால்தான் குறுக்கு மின்சுற்றாக மாறும். ஒரு மின்னியல் தொகுதியின் பல்வேறு புள்ளி களில் தோன்றக்கூடிய குறுக்கிணைப்பு மின்னோட்டங் களை மதிப்பிடல் இன்றியமையாதது. அப்போது தான் அம்மின்னோட்டங்களைத் தாங்குவதற்கு ஏற்ற சுற்றுத் திறப்பான்களைத் தேர்ந்தெடுத்துச் செம்மை யாகப் பழுதான பிரிவுகளைத் துண்டிக்க முடியும். முறையான இயக்கத்திற்கான பாதுகாப்பு உணர்த்தி களையும் வடிவமைக்க முடியும். மேலும் தொகுதியில் சுற்றுத் திறப்பான்கள் தாங்கும் அளவிற்கு னோட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கேற்ற எதிர் வினைப்பிகளின் அளவுகளைக் கணக்கீடு செய்யவும் குறுக்கு மின் சுற்று மின்னோட்டத்தை அறிதல் வேண்டும். மின் மின்னெதிர்ப்புச் சதவீதமும், குறுக்கிணைப்பு மின் ளோட்டங்களும். மின்னெதிர்ப்புச் சதவீதம் கீழ்க் காணும் சமன்பாட்டின் வாயிலாகப் பெறப்படுகிறது. IX × 100 X% = IX X E மின் எதிர்ப்பு E-நியம மின் அழுத்தம் I - முழுப் பளு மின்னோட்டம், சுற்றில் இது மட்டுமே மின் மறுப்பாக இருப்பின் Iss = E}X = 1× 100 X% ஆகவே மின்னெதிர்ப்பு 10% என்றால் குறுக்குச் சுற்று மின்னோட்டம் முழுப் பளு மின்னோட்டத் தைப் போன்று 10 மடங்கு ஆகும். 40% ஆக இருந் தால் 2.5 மடங்கு ஆகும். X,,X2, X, என்று பல மின்னெதிர்ப்புகள் தொடர் நிலையில் இருப்பின் குறுக்கிணைப்பு மின்னோட்டம் 100 Isc I X (X1%) + {X2%) + {Xs%) மின் சுற்றில் வெவ்வேறு திறன் நியமங்கள் கொண்ட பல வகைக் கருவிகள் இருப்பின் ஓர் அடிப்படை நியமத்தைத் தெரிந்தெடுக்கலாம். அனைத்துச் சதவீத மின்னெதிர்ப்புகளையும் தக்க மிகைப்பிகள் மூலம் ஏற்றவாறு குறிப்பிடலாம். கரு விகள் தொடர்நிலையில் இருப்பின் முன்னர்க் கண்ட சமன்பாட்டின் வாயிலாகக் குறுக்குச் சுற்று மின் னோட்டம் காணப்படுகிறது. தொடர்நிலையில் X% = X,% 4- X% + Xa% ஆனால் அவை பக்கவாட்டில் இணைக்கப்பட்டி ருந்தால், X% 1 X10 1 1 + X,% X3% என்ற சமன்பாட்டின் மூலம் X% கணக்கிடப்பட்டுப் பின்னர் குறுக்கிணைப்பு மின்னோட்டம் கணக்கிடப் படும். இக்கணக்கீடுகளின் மூலம் தக்க இடங்களில் தக்க அளவுள்ள எதிர்வினைப்பிகளைப் பொருத்தி, குறுக்கு மின்சுற்று மின்னோட்டத்தைக் கட்டுப் படுத்த முடியும். குறுக்கு மின்சுற்று, மின்காப்பு முறிவடைவ தாலோ, முறையற்ற இயக்கத்தாலோ, எந்திரவியல் சேதத்தாலோ, 'மின்னல் மழை போன்ற இயற்கைக் காரணங்களாலோ ஏற்படக்கூடும். இது குறுக்கு மின்சுற்றுப் பழுது எனவும் கூறப்படும். இவை நிகழ்ந்த இடங்கள் சமனி அளவீட்டால் பெறப்படும். மின்பாதைகளில் குறுக்கு மின் சுற்றுகள் விரும்பத் தகாதவை எனினும் உயர் அலைவெண்பாதைகளில்