குறுந்துணிகள் 195
பின்னல் வேலைகளில் உடைப்பின்னற் கயிறு, உருண்டைப் பின்னற்கயிறு என இருவகையுண்டு. துகிலிழைகள், உலோக இழைகள், வைக்கோல், தோல் ஆகிய பல்வேறு பொருள்களிவிருந்தும் இவ் வமைப்புகளை உருவாக்க முடியும். வைக்கோல் திணித்த குல்லாய், சிறு தரைவிரிப்பு, ரிப்பன், மகளிர் தலை அலங்காரம், கால்மூடணி நாடா, திரி, மிதவைக் குடை, மிதவை விமானம், டயர், மின் கம்பிச்சுருள், குழாய் ஆகியவற்றின் உறைகள் தயாரிப்பில் இம் முறை பயன்படுகிறது. வலையமைவு. வலை நூல்களுக்கு இடைப்பட்ட துளையளவு பின்னலைவிடக் கூடுதலாகும். நூல்கள் ஒன்றோடொன்று குறுக்கிடும் பகுதியில் ஒரு முடிச்சுத் தோன்றும், வலையின் துளைவடிவில் சதுரம். அறு கோணம். எண்கோணம் எனப் பல வகை உண்டு. வலையை எந்த இழையிலிருந்து வேண்டுமானாலும் பின்னலாம். இதற்கு மென்மையான அல்லது விறைப் பூட்டும் கஞ்சியிடல் அளிக்கப்படுகிறது. வலைகள் எளிதில் அறுந்துவிட வல்லவை. ஆதலால், மிகவும் கவனமாகக் கையாளவும். கழுவவும் வேண்டும். அறுந்த வலைத் துணிகளைச் சீர் செய்தாலும் செப் பனிடப்பட்ட பகுதி தெளிவாகத்தெரியும். பாபினெட், மலின்ஸ் டூலி என்பவை வலைகளுக்குரிய சில வணிகச் சின்னங்கள் ஆகும். கெண்டை (lace). வளைய உருவாக்குதல், முடிச்சு இடுதல், பின்னுதல், முறுக்குதல், தைத்தல் ஆகிய உத்திகள் யாவும் அடங்கிய வழிமுறையில் கெண்டை தயாரிக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக மகளிர் பொழுதுபோக்காகக் கெண்டைத் தயாரிப்பு இருந்து வந்துள்ளது. ஏழாம் நூற்றாண்டில் கன்னிமார்கள் திருச்சபை விழாக்களில் பயன்படுத்துவதற்காகச் சரிகை வேலைப்பாடுகள் அமைந்த பொருள்களைத் தயாரித்தனர். பின்பு மணமகள் முகத்திரைச் சீலை களுக்கும் இச்சன்ன அமைப்புகள் பயன்பட்டன். துகிலியல் நாகரிகம் பரவப் பரவ. ஐரோப்பிய நகரங் களான பிரஸ்ஸல்ஸ், லில்லி, வெனிஸ் போன்றவற்றில் இது ஒரு கைத்தொழிலாகவே பரவியது. வெனிசில் இத்தொழில் மிக்க வருவாயுடையதாக வளர்ந்து விட்டதால் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யக்கூடிய அளவுக்குத் தயாரிப்பும் உயர்ந்தது. இத்தொழில் எந்திரமயமாக்கப்பட்ட பின்பும் கைவேலையாகத் தயாரிக்சுப்பட்ட கெண்டைகளுக்கே மதிப்பும் தேவை யும் உயர்ந்து நின்றன. அழகும். சிக்கலான கேர்ல அமைப்பும் வாய்ந்த ஓட்டுச் சரிகை வேலைப்பாடுடைய பொருள்களைக் குடும்பச் சொத்தாகக் கருதும் வழக்கமும் உண்டு. ஊசிமுனை, உருளை அல்லது திண்டு, தையல். குரோசி முடிசசுப் போன்ற எந்திர முறையில் தயாரிக் கப்பட்ட பலவகைச் சரிகை நாடாப் பொருள்களும் அ.சு. 9-13 அ குறுந்துணிகள் 195 கைத்தொழிலாசுத் தயாரிக்கப்பட்ட அதே பொருள் களும் இனம் காண முடியாதவாறு சிறந்து விளங்கின. உயர்வகை நாடாத் தயாரிப்பில் லினன் துணியே பெரிதும் பயனாகிறது. உருளை அல்லது திண்டு சரிகை நாடா. விரும்பிய கோலத்தை ஒரு காகிதத்தில் வரைந்து, ஒரு திண்டின் மீது அதைப் பதித்து அதற்கு ஏற்றவாறு ஊசிகளைக் குத்தி வைக்கவேண்டும். தனித்தனி உருளைச் சக்கரங் களில் சுற்றப்பட்டுள்ள நூல்களை மாற்றி, மாற்றி ஊசிகளைச் சுற்றி முறுக்கியும், பின்னியும் வலைவடி வில் அலங்கார அமைப்புப் பின்னப்படும். பிஞ்சி, சான்டிலி, குளூனி, டச்சஸ், ஹோனிடன், லில்லி, மால்டீஸ், மேக்லின் எனப் பல உட்பிரிவுகள் இதில் உண்டு. குருசி வகைகளில் கொக்கி ஊசியால் பல நீள் வளையங்களை உருவாக்கி, ஒவ்வொன்றையும் ஒரு நுண்ணிய தையலால் நிறைவு செய்வது மற்றோர் உத்தியாகும். இழை ஒட்டு (darned) முறையில் வலையமைப்புப் பின்னணியில்,தொடர் தையவைக் கொண்டு கோலங்களை உருவாக்குவர். வலையமை வுப் பின்னணி சதுரமாகவோ, செவ்வகமாகவோ இருக்கலாம். ஊசிமுனை முறையில் தையல் ஊசியும் நூலுமே முழுதும் பயனாகின்றன. காகிதத்தின் மீது விரும்பத் தக்க கோலத்தை வரைந்து நூலைக் கோலத்தின் மீது நிலைக்குமாறு மூடு தையலால் (blanket stitch) பதிக்க வேண்டும். அலெங்கான், மிலான். ரோஸ் பாயிண்ட். வெனிஷியன் ஆகியன இவ்வகையில் சில. பறவைகள், மலர்கள் எனப் பல அழகிய வடிவங்களை இதில் உருவாக்கலாம். டாட்டிங், மக்ராமே ஆகியன சிறப்பு (சரிகை) நாடா வேலைப்பாடுகள். வீவர்ஸ், நாட்டிங்ஹேம் ரசேல், ரடினே. சிஃப்லி ஆகியன எந்திர வழியில் உருவாக்கப்படும் அலங்கார நாடாக்களில் சிலவாகும். வனப்பு நாடாக்களை வேறுப்படுத்திக் காண்பதற்கு வசதியாக இவ்வமைப்புகளின் பல்வேறு பகுதிகளும் பலவாறு பெயரிடப்பட்டுள்ளன. பின்னணி வலைய மைவுக்கான நூல் பகுதியைப்பிரைடு அல்லது ரேசோ என்பர்; படிவத்தைச் சுட்டும் தடித்த நூல் கார்டோ னெட் எனப்படும்; படிவத்திலும் அதன் விளிம்பிலும் தைக்கப்படும் அலங்கார நீள்வளையத்தைப் பிகாட் என்றும், பின்னுதல், முடிச்சிடுதல், முறுக்குதல் ஆகிய செயல்களால் உருவாக்கப்பட்ட பகுதியை டாய்ல் என்றும் குறிப்பிடுதல் வழக்கம். சித்திர வேலைப்பாடுடைய நாடாக்களில் பின் வரும் வகையீடு வழக்கிலுள்ளது. முழுச் சரிகை வகை யில் கோலம் துணி முழுதும் மீண்டும் மீண்டும் டம்