குறு விண்மீன்கள் 197
நிறைந்தது. உடல் மருங்குகளில் நீள்வாட்டத்தில் வெள்ளைப்புள்ளிகளோ கோடுகளோ இருக்கும். வயிற்றுப்பகுதி வெண்மையாகும். தொண்டையில் மூன்று வெள்ளை வரிகள் உள்ளன. மலைப்பகுதிகளில் வைகறை அல்லது எற்பாடு நேரத்தில் புல்வெளிகளிலும் புதரோரங்களிலும் திரியும் இது மனிதர் கண்ணில் படுவதில்லை. ஏதாவது ஒலி கேட்டால் விரைவாக ஓடி அண்மையிலுள்ள புதரிலோ பொந்திலோ மறைந்து விடும். குளிர்காலத் தொடக்கத்திலோ, மழைக்கால முடிவிலோ, தான் வாழும் பொந்தில் பொதுவாக இரண்டு குட்டி ஈனும். இணைவிழைச்சுக் காலந்தவிர ஏனைய காலத்தில் ஆண் பெண் தனித்தே வாழும் இயல்புடைய இவ் வினம் இயல்பாக அஞ்சும் சாதுவான விலங்கின மாகும். ஒரு சிலர் இதைக் குட்டிப் பருவத்திலிருந்தே வீட்டில் வளர்ப்பர், டிராகுலஸ் என்னும் மலேயா குறும்பன்றி சற்றுப் பெரியது. கே.கே. அருணாசலம் குறும்பொதி எந்திரத்தில் பொதியிழை நூற்றல் காண்க: ழை இணைவித்தல் குறுமயிர் லேனுகோ மயிர், வெல்லஸ் மயிர், இறுதி மயிர் என மூன்று வகையாக மயிரைப் பிரிக்கின்றனர். லேனுகோ. கருப்பையில் வளரும் குழந்தையிடம் குறு மயிர் காணப்படுகிறது. இது மெல்லியதாகவும், குறுகலாகவும் இருக்கும். மிகவும் குறைவான நிறங் காண்டுள்ளது. பிறப்பதற்கு முன்பு இதன் வளர்ச்சி முடிவு பெறுகிறது. பெண், கருத்தரித்த 4 ஆம் மாதத்தில் இந்த லேனுகோ மயிர் சிசுவிடம் வளரத் தொடங்கும். உடலின் அனைத்துப் பகுதியிலும் காணப்படும் இந்த மயிர் உள்ளங்கையிலும், பாதத் திலும் காணப்படுவதில்லை. சிலபோது இளம் பெண் களின் முகத்திலும். அரிதாகக் காணப்படும். அ. கதிரேசன் நூலோதி.T.H. Stein, Internal Medicine, Little Brown & Company. Boston, 1983. குறு விண்மீன்கள் ஒரு விண்மீனின் நிறமாலை பொதுவாக அதன் புறப்பரப்பின் வெப்பநிலையைப் பொறுத்து இருக்கும் குறு விண்மீன்கள் 197 வானி என்பதால், விண்மீன்களை அவற்றின் சிறப்பு நிறமா லைகளுக்கு ஏற்றவாறு வகைப்படுத்துவதை யலார் ஒரு வழிமுறையாகக் கொண்டுள்ளனர், இதையே தொடர் வரிசை (continuous sequence) என்பர். இதைக் குறிப்பாக O, B, A, F, G, K, M என்ற எழுத்துகளால் குறிப்பிடுவர். இதன்மூலம் 0 வகை விண்மீனின் மேற்புற வெப்பநிலை மிக அதிகமாகவும் (20, 000°C மேல்) M வகை விண்மீன் களுக்கு மிகக் குறைவாகவும் (3000°C) இருக்கும். தனால் சீரான செந்நிறத்தோடு தோன்றும் M வகை விண்மீன்கள், மங்கலாகத் தெரியும் என எதிர் பார்க்கலாம். புவிக்கு மிக அருகில் இருக்கின்ற பெர்னாடு விண்மீன் (Bernard's star } உட்படப் பல சிவப்பு விண்மீன்கள் மங்கலாகத் தெரிந்தாலும், எல்லாச் சிலப்பு விண்மீன்களும் அவ்வாறில்லை என்பது கண்டறியப்பட்ட உண்மையாகும். ஓரியனில் உள்ள பிடெல்சியூஸ் (Betelgeuse) தேள் வடிவ மீன் மண்டலத்தில் (scorpio) உள்ள அண்டாரெஸ் (Antares) போன்றவை சிவப்பாக இருந்தும் மிகவும் ஒளிர்வனவாகத் தோன்றுகின்றன என்பதே இதற்குச் சான்றாகும். 1905 ஆம் ஆண்டில் ஹல்ட்ஸ் பரங் என்பார் சிவப்பாகவும் அதே சமயத்தில் ஒளிர்வாகவும் இருக் கின்ற விண்மீன்கள் அளவில் மிகப் பெரியனவாக இருக்க வேண்டும் என்றும், அதிகமான புறப்பரப்பின் வழியே வருகின்ற மங்கலான ஒளியே அவற்றின் ஒளிர்விற்குக் காரணமாக இருக்கவேண்டும் என்றும் விளக்கினா னார். இத்தகைய விண்மீன்கள் சிவப்புப் பெரு விண்மீன்கள் (red giants) எனப்படுகின்றன. பெர்னாடு விண்மீன் போன்றவை சிலப்புக் குறு விண்மீன்கள் (red dwarfs) எனப்படுகின்றன. சிவப்புப் பெரு விண்மீன்களுக்கும், சிவப்புக் குறு விண்மீன்களுக்கும் இடையில் நடுத்தரமான பரி மாணத்துடன் செந்நிறவிண்மீன்கள் காணப்பட வில்லை. இதை ஹெர்ட்ஸ்ப்ரங்கு இடைவெளி {Hertzsprung gap) என்று குறிப்பிடுகின்றனர். 1913 இல் ரஸ்ஸல் என்னும் அறிஞர் செந்நிற விண்மீன்களைத் தவிர, மற்ற நிறங்களை உடைய விண்மீன்களையும் இவ்வாறு பிரிக்கலாம் என்று கண்டறிந்தார். எனினும் செந்நிற விண்மீன்களில் காணப்படுவதைப்போல, பரிமாண இடைவெளி இந் நிறங்களில் காணப்படவில்லை. இருந்தபோதும் மஞ் சள் நிறத்தில் இது குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக உள்ளது. மஞ்சள் நிறத்தில், மஞ்சள் பெரு விண் மீன்கள் (ycllow giants)(சிவப்பைப் போல் பெரியன வாயும், அல்லது குளிர்ச்சியாயும் இல்லை). மஞ்சள் குறு விண்மீண்கள் (yellow dwarfs) (சிவப்பைப் போலச் சிறியனவாயும் அல்லது குளிர்ச்சியாயும் காணப்படுகிறது. இல்லை) என்ற பாகுபாடு ஓரளவு காபிலா (capella) ஒரு மஞ்சள் பெரு விண்மீனாகும்.