பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 குறுவை நெல்‌ சாகுபடி

198 குறுவை நெல் சாகுபடி சூரியன் ஒரு மஞ்சள் குறு விண்மீனாகும். வெண்ணிற ஒளி உமிழும் விண்மீன்களில் பெரிய பரிமாண முடையவை காணப்படவில்லை. மங்கலான வெண் ணிறமும், சிறிய அளவில் இருக்கும். இவற்றை வெள்ளைக் குறுமீன்கள் (white dwarfs) என்பர். வெள்ளைக் குறுமீன்களுள் ஒரு சிலவற்றையே அறிந் திருக்கின்றார்கள். சீரியஸ் பி (sirius B) வான் மானென் விண்மீன் (van Maanen's star) மங்கலாகவும்,சிறியனவாகவும் உள்ளமையால் டுணர்வது அரிதாகும். வை கண் நடை விண்மீன்கள் இவ்வாறு பரிமாணம், நிற வேறு பாடுகளுடன் தோன்றுவதற்கு வானியலார் தக்க விளக்கம் கொடுத்துள்ளனர். சிவப்புப் பெரு விண் மீன்களின் வெப்பநிலை குறைவு. விண்மீனின் ஆற்றல் உமிழ்விற்குக் காரணமான அணுக்கருப் பிணைப்பு வினை இதில் மிகக் குறைவான வீதத்திலேயே பெறும். இந்நிலை பெரும்பாலும் ஒரு விண்மீனின் தொடக்க நிலையாகவே இருக்கும் என்பதைக் சுண்டுபிடித்துள்ளனர். பொதுவாக நான்கு ஹைட் ரஜன் அணுக்கருக்கள் இணைந்து ஹீலியம் அணுக் கருவாக மாறுவதால் விண்மீன்களுக்கு ஆற்றல் கிடைக்கிறது. பிறக்கும் புதிய விண்மீன் களில் ஹைட்ரஜனின் அளவு மிக அதிகமாக இருப்ப தால், அந்த விண்மீன்கள் 100,000 மில்லியன் ஆண்டுகளுக்கு மிகுதியாக ஒளிர்கின்றன. இதனால் தாள் பல விண்மீன்கள் முதன்மை வரிசையைச் சேர்ந்தவையாகக் காணப்படுகின்றன. வ்வகை விண்மீனின் மையத்தில் ஹைட்ரஜன் முழுதும் எரிந்து செலவழிந்தபிறகு, வெப்ப அழுத்தமின்றி ஈர்ப்புச் சுருக்கத்தினால் சுருங்கத் தொடங்கும். இவ்வாறு சுருங்கிய விண்மீன்களே வெள்ளைக் குறு மீன்கள் எனப்படுகின்றன. இவ்விண்மீன்கள், குறைந்த அளவில் கதிர்வீச்சை உமிழ்கின்றன. ஈர்ப்புச் சுருக் கத்தின் மூலம் இக்கதிர்வீச்சு, பல ஆயிரம் ஆண்டு களுக்கு ஒளி வீசக் கூடும் இதனால் வெள்ளைக் குறுமீன்களின் நிறை எத்தனை மதிப் புடையதாக இருந்தாலும், அவை காலத்தால் வயதானவையே என்று கூறுகின்றார்கள். வீண்மீனின் படிமலர்ச்சிக்கு ஏற்ப அதன் ஒரு மாறுகின்றன நிறம் மற்றும் பரிமாணம் எவ்வாறு என்பதை இன்றைக்குத் திட்டவட்டமாக வரையறுத் துள்ளார்கள். தொடக்கத்தில் அகச்சிவப்புக் கதீர் களை (infrared rays) உமிழும் அகச்சிவப்புப்பெருவிண் மீனாகவும் (எ.கா. எப்சிலான் ஆருகி - epsilon aurigae) பின்னர் சிவப்புப் பெரு விண்மீனாகவும் (பிடெல்சியூஸ்), ஈர்ப்புச் சுருக்கம் தொடர, அவை வெப்பப்படுத்தப்படுவதுடன், மஞ்சள் பெரு விண் மீனாகவும், அதன்பின்னர் ஊதா வெள்ளை விண் மீனாகவும் மாறுசின்றன. பின்னர் ஈர்ப்புச் சுருக்கம் தொடர்ந்தாலும் அதன் வெப்பநிலை மிகுவதில்லை. 1 இதனால் அவை மங்கலாகத் தோன்றுகின்றன. ஊதா - வெள்ளை விண்மீன், ஒரு மஞ்சள் குறு மீனாகவும் (எ. கா. சூரியன்) பின்னர் சிவப்புக் குறு மீரைகவும் (எ.கா. பெர்னாடு விண்மீன்), இறுதியாக கறுப்புக் குறுமீனாகவும் ((black dwarf) மாறுகின்றது. இக்கருத்துகளிலிருந்து குறுமீன் என்பது ஈர்ப்புச் சுருக்கத்தோடு குளிர்ந்து வரும் ஒரு விண்மீன் என்பதை உணரலாம். குறுவை நெல் சாகுபடி - தனலட்சுமி மெய்யப்பன் தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மாவட் டங்களில் ஆடிப்பட்டத்தில் (ஜூன், ஜூலை) குறுவை நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஆற்றில் நீர் விட்ட வுடன் நாற்றங்கால் தயார் செய்து ஏக்கருக்கு 20 320 செ.மீ. பரப்பளவில் கிலோ நெல் விதையை விதைக்கிறார்கள். இம்மாவட்டங்களில்A, DT.36. TK M. 9. I R. 36, IR. 50 போன்ற குறுகிய கால வகைகளைப் பயன்படுத்துகிறார்கள். நாற்றங் காலுக்கு 400 கிலோ தொழு உரத்துடன் 16 கிலோ இடப்படுகிறது. டை அம்மோனியம் பாஸ்ஃபேட் இருபது நாள் வயது வந்த நாற்று நடுவதற்குத்தகுந்த தாக உள்ளது. கோடை உழவு செய்திருந்தால் நடவு எளிதாக இருக்கும். எந்திரக்கலப்பை அல்லது நாட்டுக் கலப்பை கொண்டு நன்றாக உழுது சேறு கலக்க வேண்டும். வயலைச் சமப்படுத்தி வாய்கால், வரப்புகளைக் கொத்தி, எலி, நண்டு வளைகளை அடைத்துச் சேறு பூச வேண்டும். நடவுவயலில் அடியுரமாக 5 டன் குப்பை, தழைச்சத்து 15 கிலோ, மணிச்சத்து 15 கிலோ, சாம்பல் சத்து 15 கிலோ, துத்தநாக சல்பேட் 10 கிலோ வீதம் வயலைச் சமன்படுத்திய பிறகு மேலாகத் தூவ வேண்டும். நன்கு வளர்ந்த நாற்று களைப் பறித்து ஒரு சதுர மீட்டருக்கு 66 நாற்றுகள் இருக்கும் வண்ணம் டைவெளிவிட்டு நடவேண்டும். நட்ட 5 நாளுக்குள் ஒரு லிட்டர் பூட்டாகுளோர் என்னும் களை கொல்லியை 25 கிலோ மணலுடன் கலந்து சமமாகத் தூவினால் களைக் கட்டுப்படுத்தலாம். உலர்ந்த களை நாற்றுகள் நடும்பொழுது 2 செ.மீ. நீர் இருந் தால் போதும். நட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு 5 செ.மீ. உயரத்திற்கு மேல் நீர் கட்ட வேண்டிய தில்லை. பாய்ச்சிய நீர் வற்றியவுடன் நீர் பாய்ச் சினால் போதும். பயிர் தூர்கட்டும் பொழுதும், பூட்டை வாங்கும் பொழுதும், பால்பிடிக்கும் தரு ணத்திலும் நீர்த் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க