பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறை இறக்‌கைப் பூச்சிகள்‌ 201

நலிந்து காணப்படுதல், உடல் அயர்ச்சி, உற்சாசு மின்மை, தலைசுற்றல் ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும். நேர்நிலை (incidence). உடல் நல்ல நிலையில் உள்ளவர்களில் மூன்று சதவிகிதத்தினர்க்கு இந்நிலை ஏற்படுகிறது. அதிலும் பெண்பாலாரிடம் பெரும் பான்மையாகக் காணப்படுகிறது. P தோற்றுவாய் (etiology)- ஜீன் காரணமாக இது அமையலாம். மேலும் இதயத் தொடர்புடைய நோய் காரணமாகப் பலவாறு ஏற்படலாம். உடல் நலிவு அதிர்ச்சியான நிலை, அடிசன் நோய் போன்றவையும் சில பொதுக் காரணங்கள் ஆகும். நிலைமாற்றத்தின் போது ஏற்படும் குறைந்த இரத்த அழுத்தம் காரண மாகலாம். மருத்துவம். காரணத்தைப் பொறுத்து அமை கிறது. பொதுவாக நல்ல சத்துணவும், போதுமான ஓய்வும் தேவை. நீண்ட நேரம் தொடர்ந்து நிற்பது, குடல் கழுவல், சூடான நீரில் குளிப்பது ஆகிய வற்றைத் தவிர்க்க வேண்டும். குறை இரத்த அழுத்தத்தை நீக்க இரவில் உயரமான தலையணையை வைத்துக் கொள்ளுதல், உப்புச் சத்தைச் சிறிது கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளுதல், வயிற்றுப் பகுதியில் பட்டி கட்டிக் கொள்ளுதல், இரத்த அழுத்தத்தைக் கூடுதலாக்கும் மருந்துகளைப் பயன்படுத்தல் ஆகியவற்றையும் கடைப்பிடிக்க வேண்டும். குறை இரத்தச் சர்க்கரை காண்க: சர்க்கரைக் குறைவு குறை இறக்கைப் பூச்சிகள் சுவயம்ஜோதி அறுகால் பூச்சிகள், கணுக்காலிகள் தொகுதியைச் சேர்ந்தவையாகும். இவற்றைப் பொதுவாகப் பூச்சி கள் என்றே குறிப்பிடுவர். பூச்சிகள் பல வரிசைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. குறையிறக்கையுடை யன (hemiptera) என்பது ஓர் அறுகால்பூச்சி வரிசை யாகும். தாவரச் சாறு உறிஞ்சிகள், மூட்டைப்பூச்சி கள், நீர்வாழ் சாறுவுறிஞ்சிகள், செதில் பூச்சிகள், செடிப் பேன்கள் (plant lice) ஆகியன குறையிறக்கை வரிசையைச் சேர்ந்த பூச்சிகளே. குறையிறக்கைப்பூச்சிகள் அவற்றின் வாழ்க்கைச் சுற்றின் எல்லா நிலைகளிலும் திசுக்களைத் குறை இறக்கைப் பூச்சிகள் 201 துளைத்துச் சாற்றை உறிஞ்சுவதற்கேற்ற கூர்மை யான நீளமான, ஊசி போன்ற உண்ணுமுறுப்பு களைப் பெற்றுள்ளன. இந்தப் பூச்சிகளின் மேல் தாடையும்,கீழ்த்தாடையும் திசுக்களைத் துளைப் பதற்கு ஏற்றவாறு நுண்ணிய, கூர்மையான ஈட்டிகள் போலவுள்ளன. இந்த நுண்ணிய ஈட்டித்தாடைகள் (stylets) கீழுதட்டினால் சூழப்பட்டுள்ளன. இப் பூச்சிகளின் வாழ்க்கைச் சுற்றில் இளஉயிரி (larva) நிலை காணப்படுவதில்லை. முட்டைகள் பொரிந்து வெளிவரும் இள உயிரிகள் (nymphs), நிறையுயிரி (adult) போன்ற உருவத்துடன் சிறியனவாக உள்ளன. அதனால் குறையிறக்கைப் பூச்சிகள் யாவும் குறை உருமாற்றப் (hemimctabolic) பூச்சிகள் எனப்படு கின்றன. குறையிறக்கையுடையவற்றின் வரிசை, பூச்சி களின் முதல் ணை இறக்கைகளின் தடிமனை அடிப்படையாகக் கொண்டு இருதன்மையிறக்கை யுடையன (heteroptera) என்றும் ஒருதன்மையிறக்கை யுடையன (homoptera) என்றும் இரண்டு உள்வரிசை களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இருதன்மையிறக்கை யுடைய உள்வரிசையைச் சேர்ந்த பூச்சிகளின் முன் இறக்கைகளின் அடிப்பகுதி தடிமனாகவும், மேல்பகுதி ஜவ்வு போலவும் காணப்படும். ஆனால் ஒருதன்மை யிறக்கையுடையனவற்றின் முன் இறக்கைகள் முழுதும் ஜவ்வு போலவே இருக்கும். இருதன்மையிறக்கையுடையன, இரு தன்மை இறக்கையுடைய உள்வரிசையைச் சேர்ந்த பூச்சிகள் உட்காரும்போது அவற்றின் இருபக்கத்து இறக்கை களும் ஒன்றின் மேலொன்றாக மடித்து வைக்கப்படு கின்றன. பல நீர்வாழ் சாறுவுறிஞ்சிகளும், தாவரச் சாறுவுறிஞ்சிகளும், மூட்டைப்பூச்சிகள் போன்ற பல நில வாழ் சாறுவுறிஞ்சிகளும் இந்த உள்வரிசையில் அடங்கும். தாவரச் சாறுவுறிஞ்சிகள் தாவரங்களின் சாற்றினை உறிஞ்சி வாழ்வதால் இவை தாவரங் களுக்குப் பெரும் கேடு விளைவிக்கின்றன. இவற்றின் உடலிலிருந்து ஒரு கெடு நாற்றம் வெளிப்படுகிறது. வளர்ப்பில் தேனடைகளுக்கு அருகில் மரத்தின் கிளைகளி லுள்ள பிளவுகளிலும் இடுக்குகளிலும் அகாந்தாஸ் பிஸ் சிவா (Acanthaspis siva) என்னும் சாறுவுறிஞ்சி கள் காணப்படுகின்றன. வேலைக்காரத் இவை தேனீக்களின் உடலைத் துளைத்து அவற்றின் உடல் நீர்மத்தை உறிஞ்சி உட்கொண்டு வாழ்கின் ன்றன தேனீ ஈடுபட்டுள்ளவர்கள் தேனீப் பெட்டிகளின் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளாத காலங்களில் இப்பூச்சிகளின் தாக்குதலால் பேரிழப்பிற்கு உள்ளாகிறார்கள். சிமெக்ஸ் லெட்டுலேரியஸ், சிமெக்ஸ் ஹெமிப்ட்டிரஸ் என்னும் இரண்டு சிறப்பினங்களைச் சேர்ந்த மூட்டைப் பூச்சிகள் மனிதரின் இரத்தத்தை உறிஞ்சி வாழ்கின்றன. சி. லெட்டுவேரியஸ் ஐரோப்பா. வடஅமெரிக்க நாடுகளிலும், சி.ஹெமிப்ட்டிரஸ்