பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறை உணர்‌ திறன்‌ 203

. போன்ற இடங்களில் காணப்படும் இவை இலை. பூ. தண்டு ஆகிய பகுதிகளைத் துளைத்து உணவு கொள் கின்றன. இராக் காலங்களில் இவை விளக்கொளி யால் ஈர்க்கப்படுகின்றன. மா. பருத்தி, நெற்பயிர் போன்றவற்றைத் தாக்கி அழிக்கின்றன. செதில் பூச்சிகளும் மாவுப் பூச்சிகளும் மிகச்சிறிய சாறுவுறிஞ்சிப் பூச்சிகளாகும். ஆண் செதில் பூச்சி களில் ஓர் இணை இறக்கைகள் மட்டுமே உள்ளன. வாயுறுப்புகள் குறைவுற்றுச் செயல்படா நிலையில் காணப்படுகின்றன. பெண் பூச்சிகளுக்கு இறக்கைகள், கண்கள், கால்கள் ஆகியன இல்லை: உடல் கண்ட அமைப்பும் தெளிவாக இல்லை. பொதுவாகப் பெண் பூச்சிகளின் வாயுறுப்புகள் (உறிஞ்சுகுழல்) உண வளிக்கும் தாவரத்துடன் நிலையாக ணைந் துள்ளன. பெண் பூச்சிகளின் உடல் அவற்றின் உடலி விருந்து இணைந்து அவற்றிலிருந்து உண்டாகும் செதில்களால் மூடப்பட்டிருக்கும். பெண் பூச்சிகள் இந்தச் செதில்களுக்கடியில் வாழ்ந்து வாழ்ந்து முட்டையிடு கின்றன. நாரத்தைவகை மரங்களில் வாழும் அய்செரியா பர்ச்சேசி (Icerya purchasi), காஃப்பிச் செடியில் காணப்படும் பச்சைநிறக் காக்கஸ் விரிடிஸ் (Coccus viridis), கரும்பில் காணப்படும் மெலனாஸ்ப்பிஸ் குளோம்ரேட்டா (Melanaspis glomerata), தென்னை யில் காணப்படும் அஸ்பிடியோட்டஸ் டிஸ்ட்ரெக்டார் (Aspidiotus destructor) ஆகியன தாவரங்களுக்குக் கேடு பயக்கும் செதில் பூச்சிகளுக்குச் சில எடுத்துக் காட்டுகளாகும். மாவுப் பூச்சிகளின் உடல் அவற்றின் உடலில் சுரக்கும் மாவு போன்ற வெண்மையான தூளால் மூடப்பட்டிருக்கும். சுத்தரிச் செடிகளில் வாழும்செண்ட்ரோக்காகஸ் இண்சோலிட்டஸ்(Centro- cocus insolitus), கரும்பிற்குக் கேடுவிளைவிக்கும் ரிப்பெர்சியா சேக்காரி (Ripersia Sacchari), நெற் பயிரைத் தாக்கும் ரிபெர்சியா ஒரைசே (Ripersia Dryzae) ஆகியன மாவுப் பூச்சிகளுக்குச் சில எடுத்துக் காட்டுகளாகும். அரக்குப் பூச்சியாகிய லேக்கிஃபேர் லேக்காவி லிருந்து (Laccifer lacca) அவலரக்கு எடுக்கப்படுகிறது. டேக்டிலோப்பியஸ் இண்டிகஸ் (Dactylopius indicus) டேக்லோப்பியஸ் காக்கஸ்(D.coccus) ஆகிய சாயப் பூச்சிகளின் உலர்த்தப்பட்ட உடலிலிருந்து, கருஞ் சிவப்புச்சாயம் எடுக்கப்படுகிறது. டேக்டிலோப்பியஸ் டொமெண்ட்டோசஸ் (D. tomentosus) எனப்படும் சாயப்பூச்சி மெக்சிகோ நாட்டிலிருந்து இந்தியா விற்குக் கொண்டுவரப்பட்டது. இந்தியா முழுதும் புதர்களாகப் பரவியிருந்த சப்பாத்திக்கள்ளி இப்பூச்சி களால் முற்றிலும் அழிக்கப்பட்டது. செடிப்பேன்கள் அல்லது அசுவுணிகள் (aphids) எனப்படும் சாறு உறிஞ்சிகள் தாவரங்களில் வாழ்கின் றன. தாவரங்களின் சாற்றை உறிஞ்சி உட்கொண்டு A அவற்றிற்குத் தீங்கு குறை உணர் திறன் 203 லை செய்கின்ற றன. அசுவுணிகள் மென்மையான உடலுடையவை; சிறியவை; தலைப் பக்கம் குறுகியும் பின்பக்கம் அகன்றும் பரங்கி விதை போன்ற உருவமுடையன. அசுவுணிகள் பொதுவாக இறக்கையற்றவை. ஆனால் சில அசுவுணிகளில் இரண்டு இணை இறக்கைகளும் இருக்கின்றன. ஒவ் வொரு பக்கத்தின் முன், பின் இறக்கைகளும் ஒன் றோடொன்று கொக்கி போன்ற அமைப்புகளால் இணைக்கப்பட்டுள்ளன. இப்பூச்சிகளின் வயிற்று மேல் மருங்குகளில் ஓர் இணை குழாய் போன்ற மெழுகுச் சுரப்பிக் காம்புகள் உள்ளன. பொதுவாகத் தாவரங்களின் வேர்களிலும், தண்டுகளிலும் களிலும் வாழ்ந்து அவற்றின் சாற்றை உறிஞ்சி உட் கொண்டு கேடு விளைவிக்கின்றன. பருத்தி அசுவுணி யாகிய ஏபிஸ் காஸ்ஸிப்பி (Aphis gossypii), அவரைச் செடி வகைகளில் காணப்படும் ஏபிஸ் கிராக்சிவோரா (Aphis craccivora). வாழை அசுவுணியாகிய பென்ட் லோனியா நைக்ரோநெரூசா (Pentalonia (Pentalonia nigro neroosa) சோளச் செடிகளில் வாழும் ரோப்பலோ சைபம் மாடிஸ் (Rhopolosiphum madis) ஆகியவை அசுவுணிகளுக்குச் சில எடுத்துக்காட்டுகளாகும். வாழை அசுவுணி, வாழையின் சாற்றை உறிஞ்சிக் கேடு விளைவிப்பதோடன்றி, வைரஸ் நோயான முடிக் காத்து நோய் பரப்புவதாகவும் செயல்படுகிறது. நுரைப்பூச்சிகளின் இளவுயிரிகள் சோப்பு நுரை போன்ற ஒரு பொருளால் மூடப்பட்டுள்ளன. ஆனால் நிறையுயிரி நிலையில் அலைந்து திரிந்து வாழ்கின்றன. இப்பூச்சிகள் வாழை, மா, பலா, இலந்தை போன்ற தாவரங்களுக்குக் கேடு விளைவிக்கின்றன. அலி ரோடிடே குடும்பத்தைச் சேர்ந்த சாறு உறிஞ்சிகளுக்கு வெள்ளைப் பூச்சிகள் என்று பெயர். மாவுப் பூச்சி களைப் போன்றே இவற்றின் உடலும் ஒரு வெண்மை யான் தூளால் மூடப்பட்டிருக்கும். இப்பூச்சிகள் ஆமணக்கு, கரும்பு, எலுமிச்சை போன்றவற்றிற்குப் பேரழிவை விளைவிக்கின்றன. சில்லிடே குடும்பத்தைச் சேர்ந்த இலைப்பேன்கள் துள்ளிக்குதிக்கும் தன்மை யுடையன. இவை மா, பலா, அத்தி, நாவல் போன்ற மரங்களுக்குக் கேடு விளைவிக்கின்றன. மு. ஜெயந்தி நூலோதி. K.K. Nayar,es.at., General and Applied Entomology, Tata McGraw Hill publishing Co., Ltd., New Delhi, 1983. குறை உணர் திறன் இது சில மருந்து அல்லது பொருள் உடலில் படுத்தும் விளைவுகளின் தன்மையைக் குறைத்து உணரும் நிலையாகும். ஒரு சிலர், சில மருந்து அல்லது உணவுப்பொருள்களை உட்கொள்ளும்போது