பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 குறை ஒலிவேகப்‌ பறப்பு

206 குறை ஒலிவேகப் பறப்பு குறை ஒலிவேகப் பறப்பு ஒலியின் வேகத்தைவிடக் குறிப்பிடத்தக்க அளவு குறைந்த வேகக் காற்றுமண்டலத்தில் ஓர் ஊர்தி நகர்வதைக் குறை ஒலிவேகப் பறப்பு (subsonic flight) என்பர். மிதத்தல் (hovering) போன்ற வேகமே இல்லாத நகர்வு முதல் ஒலிவேகத்தைப்போல ஏறத் தாழ 85% வரை வேகமுள்ள நகர்வு வரை அனைத் துமே இப்பகுப்பில் வருகின்றன. இப்பகுப்பில் வரும் ஊர்திகள் திருகு ஊர்தி முதல் ஏவுகணை வரை பல்வேறு வகைப்படும். குறை ஒலிவேகப் பறப்பு, திசைவேகத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஆராயப்படுகிறது. மணிக்குச் சுமார் 480 கி. மீ வனர யான திசைவேகங்களில் வளிமம் அழுந்தாத்தன்மை உடையதாகக் கருதப்படுகிறது. கூடுதலான திசை வேகங்களில் வளிமம் அழுந்தும் தன்மை உடைய தாகக் கொள்ளப்படுகிறது. எனவே பொதுவாகப் பாய்வு எதிர்ப்புத் தன்மை அற்ற அழுந்தும் தன்மை உள்ள வளிமத்திற்குப் பயன்படுத்தப்படும் தத்துவங் களும் சமன்பாடுகளுமே குறை ஒலிவேகப் பறப்பிற்கு ஏற்றவாறு பொருந்துகின்றன. மிகக் குறைந்த வேக மாசு இருப்பின் மேற்சொன்ன தத்துவங்களில் பாய்வு எதிர்ப்புத் தன்மைக்கும் அழுந்தும் தன்மைக்கும் ஏற்ப மாற்றங்கள் செய்து கொள்ளலாம். இருக்கும். வளைவைக் குறை ஒலிவேகப் பறப்பில் சுமையைத் தாங்கு தற்கும் பறக்கும்போது கட்டுப்படுத்துவதற்கும் சிறகு களே முக்கியபணி ஆற்றுகின்றன. இவ்லகைப் பறப்புக்குப் பயன்படும் சிறகுகள் பொதுவாசுக் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் முன்புறம் வளைவாக வும் பின்புறம் கூராகவும் சிறகின் முன்புற காற்று அடைந்ததும் காற்றின் திசைவேகம் குறைந்து பூஜ்யத்தை அடைகிறது. பிறகு மேல்புறமாக வரும் காற்றும் சிறகின் கீழ்ப்புறமாக நசுரும் காற்றும் சிறகின் கூரிய பின்புறத்தில் ஒன்றிணையும் இட, த் திலும் காற்றின் திசைவேகம் பூஜ்யம் அடைகிறது. இவ்வாறு காற்றின் திசைவேகம் பூஜ்யம் அடைகிற இவ்விரு புள்ளிகளும் தடைப் பகுதிகள் (stagnation points) எனப்படும். சிறகின் முன் தடைப்பகுதியில் இருந்து பின் தடைப் பகுதிக்குக் காற்று நகரும்போது சிறகின் மேற்புறமாக உள்ள பாதை சிறகின் கீழ்ப்புறமாக உள்ள பாதையைவிட நீளமாக இருக்குமேயானால் சிறகின் மேற்புறத்துக் காற்றின் திசைவேகம் கீழ்ப் புறத்துக் காற்றின் திசைவேகத்தைவிட மிகுதியாக இருக்க வேண்டும். எனவே ஆற்றல் அழிவின்மையின் படி (conservation of energy) சிறகின் மேற்புறக் காற்றின் அழுத்தம் குறைவாகவும் சிறகின் கீழ்ப்புறக் காற்றின் அழுத்தம் மிகுதியாகவும் இருக்கும். இவ்விரு அழுத்தங்களின் தொகுபயனாகச் சிறகை மேல்நோக்கித் தள்ளும் விசை ஒன்று உருவாகிறது. இதுவே தூக்கு விசை எனப்படும். படம் 1. (அ) சுழற்சி அற்ற பாய்வு (ஆ) குட்டா விதி சுழற்சியின் இன்றியமையாமை. சிறகின் மேற்புற மாகச் செல்லும் காற்றின் திசைவேகம் கீழ்ப்புறத்தின் திசைவேகத்தை விட மிகுதியாக இருத்தலே சுழற்சி எனப்படும். கழற்சியற்ற நிலையெனில் படம் 1 ( அ) வில் கண்டுள்ளவாறு இரு தடைப் பகுதிகளுக்கும் இடையேயான தொலைவு சிறகின் மேற்புறமும் கீழ்ப் புறமும் ஒரே அளவாக இருக்க வேண்டும். சிறகின் பின்புறம் மிகக் கூரியதாக இருப்பின் கீழ்ப்புறக் காற்றின் திசைவேகம் மிக அதிகமாக இருந்தால் தான் சிறகின் பின்புறத் தடைப்பகுதியைச் சென்று அடைய முடியும். இத்தகைய திசைவேகம் நடை முறையில் இயலாதது. எனவே மேற்புறக் காற்றில் கூடுதல் திசைவேகம் இருந்தால்தான் பின்புறத் தடைப் பகுதியைச் சிறகின் கூரிய பின்பகுதிக்கு நகர்த்தி வர முடியும். எனவே சிறகின் மேற்புறமாக வரும் காற்றும் கீழ்ப்புறமாக வரும் காற்றும் சிறகின் கூரிய பின்முனையில் மட்டுமே சந்திக்க வேண்டும். இதுவே 'குட்டா கட்டுப்பாடு' படும். இதைப் படம் 1 (ஆ) வில் காவாம். எனப்