பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 குறை கடத்திகள்‌

2/4 குறை கடத்திகள் c EF By (அ) Maga Ech -ED E- Ev (ஆ) Ec EF Ex Ev (இ) படம் 2. தூய - வகைக் குறை கடத்தி - Pவகைக் குறை கடத்திகளில் ஆற்றல் மட்டங்கள் இரண்டும் மிசுச் சிறந்த குறை சுடத்திகள். இவை திரிதடையங்களிலும், திருத்திகளிலும் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. படிக வெள்ளீயம் 13°C வெப்பநிலைக்குக் கீழ் நிலையான படிக அமைப்புக் கொண்டது. இது, குறைந்த ஆற்றல் இடைவெளி கொண்ட குறை கடத்தி ஆதலால், இதன் கடத்துந் திறன் மிகுதி. அலு அறை வெப்பநிலையில். இதன் கடத்துந்திறன் 5×10' ஓம்-1 செ.மீ,1 ஆகும். இத்துடன் மினியம், ஆன்ட்டிமனி போன்ற மாசு அணுக்களைச் சேர்த்து n - வகை அல்லது p - வகைப் படிக வெள்ளீயக் குறை கடத்தியை உருவாக்கலாம். சிலிகான், ஜெர் மானியம் படிக வெள்ளீயம் இவற்றில் அணுக்களுக் கிடையிலுள்ள தொலைவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. செலீனியம், டெலூரியம் போன்ற குறை சுடத்தித் தனிமங்கள் அறுகோணப் படிக அமைப்புடையவை. இவை, அச்சில் சுருள் வடிவச் சங்கிலிப் படிக அமைப்பைக் கொண்டுள்ளமையால் இப்படிகங்களின் பண்புகள் சீரற்று உள்ளன. டெலூரியத்தின் மின்தடை, சங்கிலித் தொடர் உள்ள அச்சில் அதற்குச் செங்குத்தான தளத்தில் இருப்பதை விடப் பாதியளவு உள்ளது. டெலூரியம், குறை கடத்தி என்றாலும், அறை வெப்பநிலையில் அதிக கடத்துந்திறன் கொண்டது. உலோகக் சுடத்தி களை விட10 மடங்கு குறைவான கடத்துந்திறன் கொண்டது. செலீனியம் குறை கடத்தி மின் திருத்தி களிலும், ஒளிமின் கலங்களிலும் மிகுதியாகப் பயன் படுகிறது. எ.கா. குறை கடத்திக் கலவைகள். ஜெர்மானியம். சிலிக்கான் போன்ற தனிமங்கள் மட்டுமல்லாமல் தனிமக் கலவைகளும், குறை கடத்திகளாகச் செயற் படுகின்றன. தாமிர ஆக்சைடு (Cu, 0), பாதரச 1 இண்டியம் டெலூரைடு (Hg In, Te) போன்றவையும். குறை கடத்திக் கலவைகளே தனிம அட்டவணையின் ஒரு தொகுப்பில் இருக்கும் தனிமம், வேறொரு தொகுப்பில் இருக்கும் தனிமத்துடன் சேர்ந்து துத்த நாக சல்ஃபைடு (ZnS), துத்தநாக செலினைடு (ZnSe), துத்தநாக டெலூரைடு (Zn Te), கேட்மியம் செலினைடு (Cd Se), பாதரச செலினைடு (HgSe) போன்ற குறை கடத்தி இரட்டைக் கலவைகளை உண்டாக்கும். இவ்வாறே மக்னீசியம் வேறு தனிமங்களுடன் சேர்ந்து, மக்னீசியம் ஆன்டி னைடு (Mg, Sb,) மக்னீசியம் டெலூரைடு (MgTe) மக்னீ சியம் அயோடைடு (MgI) போன்ற குறை கடத்திக் கலவைகளையும் உண்டாக்கும். கலவையை தனிம அட்டவணையில் III -V; II-IV; I-VI தொகுப்புகளிலுள்ள A, B என்ற இரு தனிமங்கள் சேர்ந்து AB வகைக் குறை கடத்திக் உண்டாக்குகின்றன. இண்டியம் ஆன்டிமனைடு (In வெள்ளி Sb), கேட்மியம் டெலூரைடு (CdTe), அயோடைடு (AgI) போன்றவை இவ்வமைப்பைச் சார்ந்தவை. இவற்றுள் III-V வகைக் கலவைகள் மிகுதியாக ஆராயப்பட்டுள்ளன. இவை. அதிக மின்னூட்ட இயக்க எண் கொண்டலை. ஜெர் சிலிக்கான் போன்ற குறை கடத்திகள் உண்டாக்கும் வரைபடிக அமைப்புப் போன்ற துத்தநாக பிளண்டு மானியம். படிசு அமைப்புள்ளவை. கேவியம் ஆர்சனைடு அலுமினியம் பாஸ்ஃனபடு (AIP) போன்றவை இத்தகைய குறை கடத்திக் கலவைகள். இண்டியம் ஆன்டிமனைடின் இயக்க எண் 80,000 செ. மீ". /வோல்ட்! நொடி ஆகும். இது ஜெர் மானியம், சிலிக்கான் குறை கடத்திகளின் இயக்க எண்களைவிட மிகுதி. II-VI வகைக்கலவைகளாகிய துத்தநாக சல்ஃபைடு (ZnS), காட்மியம் சல்ஃபைடு இண்டியம் ஆன்டிமனைடு. (Ga As),