பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 குறை கடத்திகளில்‌ எலெக்ட்ரான்‌-துளைத்‌ துளிகள்‌

222 குறை கடத்திகளில் எலெக்ட்ரான்-துளைத் துளிகள் அதன் மின்னேற்றத்துடனும் இருக்கும். டோனர் { toner) எனப்படும் எதிர் மின்னேற்றம் பெற்ற சிறிய கரிய துகள்கள் நேர் மின்னேற்றம் பெற்ற குறை கடத்தியின் மேற்பரப்புப் பகுதிகளால் ஈர்க்கப்பட்டு, மேலுள்ள நேர்மின்னேற்றம் பெற்ற தாளில் படியும். வெப்பத்தின் மூலம் இந்த டோனரை அத்தாளிலேயே நிலையாக ஒட்டிக்கொள்ளச் செய்து நிழற்படப்படி உருவாக்கப்படுகிறது. 10 தற்சமயம். மூன்று சிதைபடிகக் குறை கடத்தி களை உலோகத் தகட்டின் மேல் ஒன்றன் மீது ஒன்றாக மென்படலங்களாகப் பூசி மூன்றடுக்குச் சிதைபடிகக் குறை கடத்திகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தக் கருவி எல்லா வண்ண ஒளிகளுக்கும் ஒளிமின் கடத்தும் செயல் திறன் பெற்றுள்ளது. எனவே இதைத் தகுந்த வண்ண ஒளிவடிவப்பான்களுடனும் (colour filters) தகுந்த டோனர் துகள்களுடனும் பயன்படுத்தி வண்ணப் படிகள் எடுக்கலாம். ஜப்பான் நாட்டு ஹிட்டாச்சி, ஜப்பான் ஒளிபரப்பு நிலையத் தார் கூட்டாக, சாட்டிகன் (saticon) என்னும் கருவியைத் தயாரித்துள்ளனர். இக்கருவி சிதைபடிகச் செலீனியம், ஆர்செனிக், டெலூரியம் ஆகியவற்றைக் கொண்ட மூன்றடுக்குச் சிதைபடிகக் குறை கடத்திக் கருவியாகும். இது 2 செ.மீ நீளமேயுள்ளது. இக்கருவி ஒளியால் ஏற்படும் உருவத்தை மின்குறிப்பலைகளாக (electrical signals) மாற்றுகிறது. இதைச் சிறிய வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளில் பயன் படுத்துகின்றனர். சி.எஸ்.இராசிதினகர் நூலோதி. M.C. Lovell et. al., Physical Pro- perties of Materials, Van Nostrand, New York, 1976. கிளர்ச்சியூட்டல் ( photo excitation' மூலம் பெருமள வில் கிளர்துகள்களை உண்டாக்கலாம். பெருமள வான கிளர்நிலையில் ஜெர்மேனீயம் அவவிலா ஒளி கடத்துந்திறன் பெற்றிருப்பதை 1968 இல் செல்டிஸ் என்பார் விளக்கினார். கிளர்துகள் வளிமம் குளிர்ந்து எலெக்ட்ரான் - துளைத்துளிகளைக் கொண்ட உலோக நீர்ம நிலையையடைவதாகக் கருதினார். இவ்வளிம நீர்ம நிலை மாற்றத்தை, சோடியம் ஆளி, நீர்மச் சோடியமாகக் குளிர்வதற்கு ஒப்பிடலாம். ஓர் எலெக்ட்ரான் ஒரு குறிப்பிட்ட துளையுடன் பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கவில்லை. மாறாக அது எங்கு வேண்டுமானாலும் தன்னிச்சை யாசு நகரக்கூடியது. எலெக்ட்ரான் - துளை அடிநிலையாற்றல் (ground state energy) Eg (rs) எனக் கொண்டு விரிவான கொள்கை ஒன்று எலெக்ட்ரான் - துளை நீர்மத்திற்கு உருவாக்கப்பட்டுள்ளது. இது மீனல் எலெக்ட்ரான்- துளைப் பிளாஸ்மாவில் ( சார்புடையது. மேலும் அகத்துகள் பிரிப்பு, கிளர்துகள் ஆர அலகின் மதிப் பால் குறிப்பிடப்படுகிறது. இந்த ஆற்றலின் கூடுதல், இயக்க ஆற்றலை யும், ஒப்புமை ஆற்றலையும் (correlation energy ) கொண்டிருக்கும். இயக்க ஆற்றலையும், பரிமாற்று ஆற்றலையும் பகுமுறைவடிவ முறையில் கணக் கிடலாம். ஆனால் ஒப்புமை ஆற்கலைக் கணக்கிடும் r குறை கடத்திகளில் எலெக்ட்ரான்-துளைத் துளிகள் தூய் குறை கடத்திகள், குறைந்த வெப்பநிலையில் கட்டற்ற எலெக்ட்ரான்களையும், துளைகளையும் (எலெக்ட்ரான் காலியான இடம்) பெற்றிருக்க வில்லை. குறை கடத்தியைத் தகுந்த ஆற்றல் கொண்ட ஃபோட்டான்களைக் கொண்டு கிளர்ச்சி யடையச் செய்தால் எலெக்ட்ரான்களும், துளைகளும் உருவாகி அவை ஒன்றுடன் ஒன்று இடைவினை (interaction) புரியும். இடைவிளை கூலூம் வகையைச் சார்ந்தது. குறைந்த அடர்த்தி, வெப்பநிலை உள்ள போது.ஓர் எலெக்ட்ரான் துளையுடன் கட்டுண்டு ஹைட்ரஜன் அணுவைப் போன்ற சேர்க்கையை ஏற் படுத்திக் கொள்கிறது. இதைக் கிளர்துகள் (exciton) எனலாம். பல குறைகடத்திகளில் செறிவுமிக்க ஒளி EG (rs) f. படம் 1.ஓர் இணையின் அடிநிலை ஆற்றலுக்கும் மீள்குத்தாக்கல் செய்யப்பட்ட அகத்துகள் பிரிப்புக்கும். வரையப்பட்ட படம்