பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 குறை சுடத்துமையும்‌ கோபால்ட்‌ சேர்மங்களும்‌

228 குறை கடத்துமையும் கோபால்ட் சேர்மங்களும் குறை சுரங்க இருமுனையம். கடத்திக் கருவிகளில் மிகவும் இன்றியமையாததாகும். இதில் p-பகுதி I -பகுதி ஆகிய இரண்டுமே கலப்புடை + நெடுக்கழி அடுக்கு படம் 6 0° + 0° யாவை. நெருக்கமிழந்த அடுக்கு ஏறத்தாழ ஒரு மைக்ரோ சென்டி மீட்டர் அளவில் இருக்கும். இதன் சிறப்பியல்பு வளைகோடு சாதாரண இருமுனையக் கோட்டிலிருந்து மாறுபட்டிருக்கும். இது ஓர் இருமுனையமாக இருந்தாலும் ஒருபெருக்கியாகவோ, அலை இயற்றியாகவோ, இணைப்பியாகவோ செயல் படக்கூடியது. இதன் செயல்முறை அதிர்வெண் ஏறத்தாழ 10 கிலோ மெகா ஹெர்ட்ஸ் ஆகும். ஓர் இணைப்பியாக 10-9 நொடிக்கும் குறைவான நேரத்தில் செயல்படக்கூடியது. இதன் சிறப்பு அதன் சிறிய உருவம் செயல்படத் தேவையான மிகச்சிறிய ஆற்றல், நீண்ட வெப்பநிலை நெருக்கத்தில் செயல் படக்கூடிய தன்மை ஆகியவை ஆகும். புலவிளைவு திரிதடையம் (field effect transistor). அந்த அமைப்பின் உட்பகுதியில் நீள் சதுரக் கட்டை போன்ற வடிவத்தில் n-வகை ஜெர்மேனியப் படிகம் உள்ளது. கட்டையின் மேற்பரப்பிலும், கீழ்ப்பரப் பிலும் P-வகைக் குறை கடத்திகளைக் கொண்ட P,n சந்திகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இது ஒரு மின்னழுத்தக் கட்டுப்பாட்டுக் கருவியாகும். பொது திரிதடையங்கள் மின்னோட்டச் செயற்பாட்டுக் கருவியாகும். த ஒரு பெருக்கியாகப் பயன் படுத்தலாம். இதன் சிறப்பியல்பு இதன் உள்ளீட்டு மின்திசை மிகுந்துள்ளமையும், இதன் செயற்பாடு சுற்றுப்புற வெப்பநிலையால் மாறாமையும் ஆகும். வாக, குறைகடத்தி லேசர்கள் (semiconductor laser). தூண்டப்பட்ட கதிர்வீச்சு உமிழ்வால் ஒளிப் பெருக்கம் என்பதன் குறுகிய வடிவமே லேசர் ஆகும். குறை கடத்திகளில் முக்கியமாக, கேலியம் - ஆர்சனைடு p-n சந்தியில் தொகை தலைகீழாக்கத்தை உண்ட ாக்கி லேசர் நிகழ்ச்சியைச் தோற்றுவிக்கலாமெனக் கண்டு பிடிக்கப்பட்டது. குறைகடத்தி லேசர்களின் சிறப்புகள். இதில் செலுத்தப்படும் மின்னோட்டத்தைப் பண்பேற்றம் செய்துவிட்டால் வெளிவரும் லேசர்கதிர்ப்பண்பேற்றம் பெற்றிருக்கும். லேசர் நேரடியாக மின்னாற்றலை ஒளியாக மாற்றுகிறது. இதன் உள்ளீடு முழுதுமே ஏறத்தாழ கதிர்வீச்சாக வெளிவருகிறது. குறை கடத்தி லேசர் ஒன்றில்தான் வெளிவரும் கதிர்வீச்சின் அலைநீளத்தைக் கட்டுப்படுத்த முடியும். பெல் தொலைபேசி ஆய்வுக்கூடங்களில் பணி யாற்றி வந்த ஜான் பார்டீன், வில்லியம் ஷாக்லி ஆகியோர் கண்டுபிடித்த திரிதடையங்கள் 1951 ஆம் ஆண்டில் மின்னணுவியலில் மிகுதியாகச் செயல்படத் தொடங்கின. வெற்றிடக் குழல்களின் இடத்தை எல்லாத் துறைகளிலும் பிடித்துக் கொள்ளும் அள வுக்கு எண்ணற்ற சிறப்புடன் செயல்படத் தொடங் சின. உருவாக்குவதற்கும், மேன் குறைகடத்தியை மேலும் ஆய்வதற்கும் உலகின் அனைத்துப் பகுதி களிலும் பெருமுயற்சிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இத்தகைய திரிதடைய அமைப்புகளை உருவாக்கிய தில் பெரும்பங்கு கொண்ட ஜான் பார்டீன், வில்லியம் ஷாக்லி, பிரைட்டன் ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. & சு அ. தனலட்சுமி குறை கடத்துமையும் கோபால்ட் சேர்மங்களும் கோபால்ட் மோனாக்சைடு (CoO) விகிதவியலுக்குப் புறம்பானதொரு (nonstoichiometric) சேர்மம். இதன் வாய்பாடு Co(-8)0 ஆகும். இங்கு 8 ஒரு மிகச்சிறிய பின்னம். Cooஐ எந்த முறையில் தயாரிப்பினும், கோபால்ட் அணுக்குறைபாடு இருந்து கொண்டே. இருக்கும்,மொத்தத்தில் மின்னேற்ற நடுநிலை பின்வரு மாறு எய்தப்படுகிறது. படிக அமைப்பில் காணாமல் போகும் ஒவ்வொரு Co' + அயனிக்கும் மாற்றாக எஞ்சியுள்ள கோபால்ட் அயனிகளுள் இரண்டு Co+ ஆக ஆக்சிஜனேற்றம் அடைந்திருக்கும். கூடுதலாக உள்ள ஒவ்வொரு நேர்மின்னேற்றத்திற்கும் மின் துளை எனப் பெயர்.ஓர் எலெக்ட்ரான் அண்மை Co+ இலிருந்து Co+ க்குத் தாவினால், Co2+, Co+ ஆகவும் Col+,Co+ ஆகவும் பரிமாற்றம் அடையும். இத்தாவல் நிகழ்ச்சி வெளியிலிருந்து செலுத்தப்படும்