பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறைப்‌ பிரசவம்‌ (கால்நடை) 231

குறைப் பிரசவம் (கால்நடை) 231 கூடும். அசெட்டைல் கோலினுக்கு எதிராக இயங்கும் அட்ரோப்பின் போன்ற மருந்துகளை உட்கொள்ளும் போதும் உமிழ்நீர்க் குறை சுரப்பு ஏற்படுகிறது. இனிப்பு, காரம், புளிப்பான உணவுப் பொருள்கள் உமிழ்நீர்ச் சுரப்பைத் தூண்டுவதால், அத்தகைய பொருள்களை இந்நிலைகளில் தரலாம். உணவுப் பொருள்களையும் உட்கொள்ள வேண்டும். நீர்ம இரைப்பைக் குறை சுரப்பு. இரைப்பை, ஹைட்ரோ குளோரிக் அமிலம், பெப்சின், ரெசின் ஆகியவை அடங்கிய நீரைச் சுரக்கிறது. இரைப்பை நீர்க் குறை சுரப்பினால் ஏற்படும் பசியில்லாத நிலையில், கசப்புப் பொருள்களும் ஏலக்காய், இலவங்கம் ஆகியவற்றில் காணப்படும் ஆவியாகும் எண்ணெய்களும் பயன ளிக்கக்கூடும். தைராய்டு குறை சுரப்பு. தைராய்டு சுரப்பி நாளமில்லாச் சுரப்பி ஆகும். இது தைராக்ஸின் எனும் ஹார்மோனைச் சுரக்கிறது. தைராய்டு குறை சுரப்பு உள்ள குழந்தை, வலிமையிழந்து. உடல், மன வளர்ச்சி குன்றிக் காணப்படும். இதற்கு மருத்துவமாகத் தைராக்ஸின் செயற்கைத் தயாரிப்பு மருந்தைத் தொடர்ந்து வாழ்நாள் முழுதும் கொடுத்து வர வேண்டும். இன்சுலின் குறை சுரப்பு. இன்சுலின், கணையத் தின் லாங்கர்ஹான் நுண் திட்டுகளின் பீட்டாச் (B) செல்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. இன்சுலின் குறை சுரப்பு, நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயை ஏற்படுத்துகிறது. இந்நோயால், இதயம், மூளை, சிறுநீரகம் ஆகிய முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டுக் கடும் விளைவுகள் தோன்றக்கூடும். மாவுப் பொருள் களைக் குறைவாகக் கொண்ட உணவுப் பொருள் களைக் கொண்டும். இன்சுலின் சுரப்பைத் தூண்டும் குளோர் புரோப்பமைடு போன்ற மருந்து களைக் கொண்டும் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். நீரிழிவு கடுமையாக இருப்பின் நாளும் இன்சுலின் ஊசியைத் தொடர்ந்து செலுத்தி வரவேண்டும். மு. துளசிமணி குறைந்த வெப்ப மதிப்பு காண்க: எரிதல் -- குறைநிலை வகைக்கெழுச் சமன்பாடுகள் காண்க: வகைக்கெழுச்சமன்பாடுகள் குறைப் பிரசவம் (கால்நடை) சூல்கொண்ட விலங்குகள், முழுச் சூல் அடைந்தும் கன்றுகளை வளர்ச்சி ஈனமுடியாமல், குறைந்த கால அளவில் கருவை வெளியேற்றுவதற்குக் குறைப் பிரசவம் (abortion) என்று பெயர் கருப்பையில் நுண்ணுயிரிகள் செல்லல் அ. புருசெல்லோஸிஸ். பசுக்களை பு.அபார்டஸ் (Brucella abortus), வெள்ளாடுகளை பு.மெலி டெண்ஸிஸ் (B. melitensis), பன்றிகளை பு.சூயிஸ் (B,suis) செம்மறி ஆடுகளைப் பு.ஓலிஸ் (B.ovis) நுண்ணுயிரிகள் தாக்கிக் கருவை அழிப்பதால் குறைப் பிரசவம் ஆகக் கூடும். பசுக்களில் குறைப்பிரசவம். ஏழாம் மாதத்தில் பசுக்களுக்குக் குறைப்பிரசவம் தோன்றும். 4.அபார்டஸ் என்னும் நுண்ணுயிரி கருப்பையின் உள் சவ்வில் வளர்ந்து கருவை அழித்து விடுவதால் கரு வெளிப்படும். குறைப்பிரசவம் ஆன சில வாரங்களில் இவ்வுயிரிகள் கருப்பையிலிருந்து மறைந்துவிடு கின்றன. நுண்ணுயிரிகள் உடலுக்குள் செல்லல். முன்னரே வெளியேற்றப்பட்ட கரு, கருவைச் சுற்றியுள்ள கொடி, கருப்பையிலிருந்து வெளியேறும் நீர் இவை மாடுகள் உண்ணும் வைக்கோல், புல், தீவனம், நீர் ஆகியவற்றை மாசுபடுத்துவதன் மூலம் நுண்ணு யிரிகள் பசுக்களின் சூற்பையை அடைகின்றன. இயற்கைப் பொலிவு மற்றும் செயற்கைச் சினை முறை மூலம், காளையின் விந்துடன் இந்த உயிரிகள் கலந்து யோனி வழியாகக் கருப்பையை அடையக் கூடும். கண் விழியைச் சவ்வின் சுற்றியுள்ள (conjunctiva) வழியாகவும், மாட்டின் தோல் மூல மாகவும் இவை கருப்பையில் புகுந்து பின்வருமாறு கருச்சிதைவை உண்டாக்குகின் றன. கருவின் மேல் மூடியுள்ள இளங்கொடியைத் தாக்கி அதில் வீக்கம் உண்டாக்கும். கருப்பையின் உள்சுவருக்கும். கருப்பைக்கும் இடையில் கெடுநீர் தோன்றும். இளங்கொடி அழுகத் தொடங்கும் போது வீக்கம் உண்டாகும். இதனால் கருப்பையின் உள் சுவரிலிருந்து இளங்கொடி பிரிந்துவிடும். கருவுக் குத் தாயிடமிருந்து கிடைக்கும் இரத்த ஓட்டம் நின்று போவதால் கரு இறந்துவிடும். இக்கரு தாய்க்கு வேற்றுப் பொருளாகி, வெளியே தள்ளப் படும். நுண்ணுயிரிகளின் தாக்குதல் மந்தமாக இருந்தால் சுரு உயிருடன் பிறந்தாலும், மிகவும் நலிந்து பிறந் தாலும் அது சில மணித்துளிகளில் இறந்துவிடும். குறைப் பிரசவக் கன்றின் சுவாசப் பையில் சளியும்.