232 குறை புரத இரத்தம்
232 குறை புரத இரத்தம் இதயம், கொப்பூழ்க் கொடி, தோல் ஆகியவற்றில் வீக்கமும், வயிற்றுப்போக்கும் காணப்படும். பன்றி புருசெல்லோசிஸ். பன்றியின் கருப்பையை தாக்கக்கூடியது. இந்நுண்ணுயிரி அடையும்போது. இதனால் மிகவும் இரண்டு மூன்று மாதத்திலேயே குட்டிகள் வெளிப் படுகின்றன. பெரும்பாலும் ஆண் பன்றியின் சேர்க் கையால் இந்நோய் உண்டாவதாக நம்பப்படுகிறது. விப்ரியோஸிஸ் (vibriosis). இந்நுண்ணுயிரி பசு, செம்மறி ஆடு இவற்றைத் தாக்கும். பசுவிற்கு இயற்கைப் பொலிவாலும், செயற்கை முறைக் கருவூட்டலாலும், செம்மறி ஆட்டிற்குத் தீவனம், நீர் முதலியவற்றாலும் இந்நோய் தோன்றலாம். பசுக்களுக்கு 5 7ஆம் மாதத்திலும். செம்மறி ஆடுகளுக்குச் சினைக்காலம் (150 நாள்) நிறைவு பெறும் வரையிலும் குறைப்பிரசவம் ஏற்படலாம். இந்நோயால் பிறந்த கன்று அல்லது குட்டியின் அடித்தோல், சுவாசப் பையின் மேல் உள்ள சவ்வு. இதயம். உதரப்பை, கல்லீரல் ஆகியவற்றில் வீக்கமும் சிறுநீரகங்களில் அழற்சியும் இரத்தக் தோன்றக் கூடும். கசிவும் டிரைகோமானியாசிஸ் (Trichomoniasis). பொலி காளைத் தண்டின் சவ்விலும் சிறுநீரகத் துளையிலும் என்னும் டிரைகோமானஸ் ஃபீடஸ் (T. foetus) நுண்ணுயிரி புகுந்து, பசுவைப் பொலிவு செய்யும் பொழுது யோனிக்குள் சென்றுவிடும். 3 நாளுக்குப் பிறகு யோனியிலும் பின்னர் கருப்பையின் கழுத் திலும் உண்டாக்கும், வீக்கத்தை கருப்பைக்குள் சென்று கருப்பையிலும் கருவின் இளங் கொடியிலும் வீக்கத்தை உண்டாக்குவதால் நான்காம் மாதத்தில் கருச்சிதைவு உண்டாகலாம். சில சமயங்களில் முழுமையாக இல்லாமல் கலங்கிவிடுவதும் உண்டு. அல்லது கருப்பையில் தேங்கும் கெடுநீர் உறிஞ்சப் பட்டுக் கரு மரக்கட்டை போல் உருப்பெற்றுக் கருப் பையில் தங்கி விடுவதும் உண்டு. கரு . விஸ்டெரியோசிஸ் (Listeriosis). லிஸ்டெரியா மானோஸைடோஜீன்ஸ் (Lysteria monocytogenes) என்னும் நுண்ணுயிரி பசுக்களின் மூளையைத் தாக்கக் கூடியது சில சமயங்களில் இந்நுண்ணுயிரி சினைப்பசு, செம்மறி ஆடுகளின் கருப்பை இவற்றைத் தாக்கிக் குறைப்பிரசவம் உண்டாக்கும். கருவை அடைந்து அதைக் கொன்றுவிடுவதாலும் குறைப்பிரசவம் தோன்றக் கூடும். குறைப்பிரசவம், சினைக்காலத்தின் முடிவில் ஏற்படும். எபிசூவோடிக் போவைன் கருச்சிதைவு (Epizootic Bovine abortion). இது நுண்ணோக்கியில் பார்க்க முடியாத வைரசினால் ஏற்படும் நோய் ஆகும். இது பசு, செம்மறி ஆடுகளில் குறைப்பிரசவம் உண்டாக்கும். இந்த வைரஸ், கருவைக் கொன்றுவிடுவதால் குறைப் பிரசவம் ஏற்படுகின்றது. லெப்டோஸ்பைரோசிஸ் (Leptospirosis). இந் நுண்ணுயிரி கருவைக் கொன்று விடுவதால் பசுக் களில் குறைப்பிரசவம் தோன்றும். சால்மோனெல்லா அபார்டஸ் ஈக்வை (Salmonella abortus equi). இவற்றால் குதிரைகளில் கருச்சிதைவு ஏற்படும். ஈக்வைன் வைரஸ் கருச்சிதைவு. இருவகையான நுண்ணுயிரிகளால் 9-10 ஆம் மாதத்தில் குதிரைக் குட்டி இறந்து பிறக்கக் கூடும். பூசணக்கருச்சிதைவு (Mycotic abortion). ஆஸ் பெர்ஜில்லஸ். அப்ஸீடியா, மியுகார், ரைசோபஸ் போன்ற காளான்கள் கெட்டுப்போன தீவனத்தின் மூலமாக உட்சென்று கருப்பையைத் தாக்கி, குறைப் பிரசவம் உண்டாக்கும். கருச்சிதைவு 5-7 ஆம் மாதங்களில் ஏற்படலாம். பெரும்பாலும் குளிர் காலத்தில் ஏற்படும் குறைப்பிரசவம் ஆடு,பசு இவற் றில் நோய்க்கான அறிகுறிகளைக் காட்டுவதில்லை. மேலும் வேறு பல உயிர்கள் கால்நடைகளின் உடலில் புகுந்து ஏற்படுத்தும் கருப்பை வீக்கத்தாலும் கருச் சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு. பசுக்களில் சால்மொ னெல்லா, கோரினி பாக்டிரியம் பயோஜெனிஸ், ஸ்ட் ரெப்டோ காக்கஸ், ஸ்டெஃபிலோ காக்கஸ், டியுபெர்கு லொஸிஸ், ஆக்டினோ பாஸிலஸ்,குதிரையில் ஸ்ட்ரெப் டோகாக்கஸ் எஷ்சரிச்சிய கோலை ; செம்மறி ஆடு களில் சால்மோனெல்லா, அபார்டஸ் ஒவிஸ், இவை தவிர வேறு சில காரணங்களாலும் குறைப்பிரசவம் ஏற்படக்கூடும். உண்டபின் நஞ்சிடுதல். எர்காட் செடி, கருப்பையை முறுக்கிப் பிழியவல்லது. ஆகையால் குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்புண்டு. ஈஸ்ட்ரோ ஜென் பெருமளவில் கொடுக்கப்படுவதாலும் நச்சுப் பொருள்களைத் தின்றுவிடுவதாலும், சூல் காலத்தில் ஊட்டச்சத்து, தாது உப்பு, வைட்டமின் முதலியவற் கொண்ட றின் குறைவாலும், சூல் மாட்டுக்குத் தடுப்பு ஊசி போடும்பொழுது காய்ச்சல் உண்டாவ தாலும், சூல் காலத்தில் தாய் நோய்வாய்ப்படுவதா லும், பாரம்பரியக் குறைபாட்டாலும், கன்றின் கொப்பூழ்க் கொடி திண்மையாக இருப்பதாலும், விலங்குகள் ஒன்றோடொன்று முட்டிக் கொள்வது போன்ற விபத்துகளாலும், தாயின் கருப்பையில் கட்டிகள் இருந்தாலும் குறைப்பிரசவம் தோன்றக் கூடும். குறை புரத இரத்தம் காண்க : இரத்தப்புரதக் குறைவு பி. இராமன்