பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 குறை வளர்ச்சி

234 குறை வளர்ச்சி ராங்கியரின் வகைப்பாட்டில் 5 முக்கியமான வகுப்புகள் காணப்படுகின்றன. இவ்வுயிர் வடிவங் களில் தழைமொட்டின் பாதுகாப்புக்கு ஏற்ப, தாவர வடிவங்கள் அமைந்துள்ளன. குறைமறை தாவரங் களில், மொட்டுகள் தரை மட்டத்திலேயே அமைந் திருக்கும். இவ்வகுப்பை ராங்கியர் 3 துணை வகுப்புகளாகப் பிரித்துள்ளார். ரோசட் வகையில் எல்லா இனங்களும் தரை மட்டத்திலிருக்கும். துணை ரோசட் வகையில் இலைகள் தரை மட்டத்திலும், வெளித் தண்டிலும் அமைந்திருக்கும். ரோசட் லையற்ற வசையில் லைகள் வெளித் தண்டில் மட்டும் காணப்படும். றைமறை தாவரங்கள், புல்வெளித் தாவர அமைப் பிற்கு ஏற்றவாறு உள்ளன. குறை வளர்ச்சி நா.வெங்கடேசன் கிரேக்க மொழியில் ஹைபோ (hypo) என்றால் குறை என்றும், பிளாசியா (plasia) என்றால் உருவாதல் என்றும் பொருளாகும். இவற்றிலிருந்து குறைவாக உருவாவது அல்லது குறை வளர்ச்சி (hypoplasia என்னும் சொல் வந்தது. குறை வளர்ச்சியுடனோ, வளர்ச்சி இல்லாமலோ குழந்தைகள் பிறப்பதைக் காணலாம். பிறந்த சில ஆண்டு கழித்து, ஒரு குறிப்பிட்ட உறுப்பு குறை வளர்ச்சியுடன் இருப்பது தெரிய வரும். (எ.கா: மார்பகம், ஆண் குறி, விரை, பிறப்புறுப்புகள் முதலியன). இக்குறைகள் எவ்விதம் உண்டாகின்றன என்பதை அறுதியிடுங் காரணம் கண்டுபிடிக்கப்பட வில்லை. சில குறை வளர்ச்சிகள். ஜீன் கோளாறுகளால் உண்டாகின்றன. அப்போது ஊனமாகக் குழந்தை பிறக்கிறது. சூல் காலத்தின்போது அருந்தும் மருந்து கள். அளிக்கப்படும் மருத்துவம், உள்வயத் தாக் கங்கள். அடிபட்ட காயங்கள் ஆகியவை குறை வளர்ச்சிக்குக் காரணமாகலாம். இவற்றில் மிக முக்கியமானது செல்லின் மரணம் எனப்படுவது. இதனால் திசுக்கள் மறைய அல்லது ' மாற்றமடைய அல்லது சிறியதாக மாற வாய்ப் பாகிறது. இதனால் ஏற்படும் குறை வளர்ச்சி எந்தத் திசுவையும் அல்லது உறுப்பையும் தாக்கக்கூடும். வைரஸ், கதிர் வீச்சு. ஊட்டச் சத்தின்மை, வைட்டமின் குறைபாடு அல்லது மிகை நிலை ஆகியவை குறை வளர்ச்சிக்குக் காரணமாக உள்ளன. குறை வளர்ச்சிக்கான சிறப்பு மருத்துவம் எதுவும் ல்லை. காரணம் தெரிந்தால் ஹார்மோன்கள் பயனளிக்கலாம். தற்போதைய ஆய்வுகளின் மூலம் சூல் பையில் குழந்தை இருக்கும்போதே, எவ்வகைக் குறை வளர்ச்சி உண்டாகலாம் என ஓரளவு அறுதியிட முடியும். அ. கதிரேசன் நூலோதி. Peter Williams, Gray's Anatomy, Thirtysixth Edition, Churchill Livingstone, London, 1980. குறை வெப்பநிலைத் தாவரங்கள் தாவரங்களின் இயல்பான வளர்ச்சிக்கும் வாழ்விற்கும் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை தேவை. இவ்வெப்ப நிலை, தாவரத்திற்குத் தாவரம் வேறுபடும். உலகின் எல்லாப்பகுதிகளிலும் வெப்பநிலை ஒரே மாதிரியாக இருப்பதில்லை. வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு தாவரக் கூட்டத்தை நான்கு பிரிவுகளாகப் பிரிக் கலாம். உயர் வெப்பத்தாவரங்கள் (megatherms). இங்கு ஆண்டு முழுதும் உயர்ந்த வெப்பநிலை இருக்கும். அதற்கு ஏற்றவாறு அங்கு வெப்பமண்டல மழைக் காடுகள் காணப்படும். இடைவெப்பநிலைத் தாவரங்கள் (mesotherms). இங்கு உயர்ந்த வெப்பநிலையும் குளிர்ந்த வெப்ப நிலையும் மாறி மாறி அமைந்து, அதனால் வெப்ப மண்டல இலையுதிர்காடுகள் தோன்றும். .. குறை வெப்பநிலைத் தாவரங்கள் (microtherms). இங்குள்ள மிகக் குறைந்த வெப்பநிலையில் பலவகை யான கூம்புத் தாவரங்கள் அமைந்திருக்கும். மிகக்குறைந்த வெப்பநிலைத் தாவரங்கள் (heki- stotherms). இங்குள்ள மிகக்குறைந்த வெப்பநிலையில் ஆல்பைன் என்ற மலை முகட்டுத் தாவரக் கூட்டமே காணப்படும். குறைந்த வெப்பநிலைத் தாவரக்கூட்டம். இவை உலகின் நிலமுனைப் பகுதிகளில் காணப்படுவதால் வற்றை நிலமுனைத் தாவரக் கூட்டங்கள் என்றும் கூறலாம். நில முனைகளில் வடநிலமுனையில் உள்ள தாவரக் கூட்டங்களைப்பற்றிய விவரங்களே கிடைத் துள்ளன். தென் நிலமுனையில் உள்ள தாவரக் கூட்டங்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை. உலகின் நிலப்பகுதி உருண்டையாக இருந்த போதும் அதன் வட, தென் முனைப் பகுதிகள் தட்டையாகவே இருந்தன. நிலநடுக்கோட்டுப்பகுதி னைய பகுதிகளைவிடச் சூரியனுக்கு நேர் அச்சில் உள்ளதால் வெப்பம் மிகுந்துள்ளது. வட, தென் நில முனைப்பகுதிகளில் சூரியனின் கதிர்கள் நீண்ட