பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 குன்றல்‌ பிரிவு

238 குன்றல் பிரிவு சில தொடக்க நிலைக் குன்றல் பிரிவு. இவ்வகைக் குன்றல் பிரிவு இணைநிலைக் (zygotic) குன்றல் பிரிவு எனவும் குறிப்பிடப்படுகிறது. பாசிகள், காளான்கள் மற்றும் டயாடம்கள் முதலியவற்றில் இது நடைபெறுகிறது. இவற்றில் கருவுறுதல் நடை பெற்றதும் குன்றல் பிரிவு தொடர்கிறது. இடைநிலைக் குன்றல் பிரிவு. இவ்வகைக் குன்றல் பிரிவு இனச் செல்கள் உருவாதலுக்கும், கருவுறுத லுக்கும் இடையில் நடைபெறுகிறது. எடுத்துக் காட்டு: விதைத் தாவரங்கள். கடைநிலைக் குன்றல் பிரிவு. இனச் செல்கள் உருவாக்கத்திற்குச் சற்று முன்பு நடைபெறும் இந்தக் குன்றல் பிரிவை இனச்செல் குன்றல் பிரிவு எனவும் கூறலாம். எடுத்துக்காட்டு: விலங்கினங்கள், சில கீழ்நிலைத் தாவரங்கள். செல்கள் பிரிதலின் அடிப்படையில் குன்றல் பிரிவை இரண்டு முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கலாம். மாற்றுமுறைக் குன்றல் பிரிவு (Heterolypic). இந்நிலையில் குரோமோசோம்களின் எண்ணிக்கை பாதியாகிறது. இந்நிலை குன்றல் பிரிவின் முதல்படி யாகும். ஒத்தமுறைக் குன்றல் பிரிவு (Homotypic). இது குன்றல் பிரிவின் இரண்டாம் படியாகும். இந்நிலையில் மாற்று முறைக் குன்றல் பிரிவின் மூலம் உருவான இரண்டு செல்கள் மேலும் பிரிந்து நான்கு செல்களாக உருவாகின்றன. இவை நான்கும் பண்புகளால் ஒத்துக் காணப்படும். மாற்று முறைக் குன்றல் பிரிவு, நான்கு நிலை களைக் கொண்டது. அவை, முதல் நிலை அல்லது தொடக்க நிலை (propbase), இடைநிலை (meta phase), பின்னடைவு நிலை (anaphase), கடைநிலை (telophase) எனப்படும். முதல் நிலை. இதை நீண்ட தொடக்க நிலை என்றும் கூறலாம். இந்நிலையில் குரோமோசோம்கள், ஜீன்கள் இணைவுற்றுப் பரிமாறிக் கொள்கின்றன. முதல் நிலைக் குன்றல் பிரிவு பின்வரும் உட் பிரிவு குன்றல் பிரிவின் மூலம் நடைபெறுகிறது. முதல் நிலையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படை யில் இவை நிலைகளாகப் பின்வரும் 5 துணை பிரிக்கப்பட்டுள்ளன அவை. 1. நுண்ணிழை நிலை (leptonema) 2. இணை யிழை நிலை (zygonema) 3. குறுஇழை நிலை (pachynema) சரிழை நிலை (diplonema) 5. குறுகல் இழை நிலை (diakinesis) நுண்ணிழை நிலை. இந்நிலையில் குரோமோ சோம்கள் நீண்ட மெல்லிய இழைகளாகக் காணப் படும். ஒவ்வொரு குரோமோசோம் இழையும் இணை யாக்க் காணப்படும்: குரோமேட்டிடுகள் காணப் பட்டாலும் தெளிவாகத் தெரிவதில்லை. இணையிழை நிலை. இந்தத் துணை நிலையில் ஒரே மாதிரியான பண்புச் சாயல்களுக்கான குரோ மோசோம்கள் ஒன்றிற்கு ஒன்று கவரப்பட்டு யாகின்றன. இவ்வாறு. இணையுற்ற ஒத்த பண்புகளை உடைய குரோமோசோம்கள் ஒத்திசைவான குரோ மோசோம்கள் எனப்படுகின்றன. இந்த இணையில் உள்ள தனிக் குரோமோசோமை ஒத்திசைந்தவை என்றும், ணையும் நிகழ்ச்சியைச் சினாப்ஸிஸ் என்றும் கூறலாம். சில வகைக் குரோமோசோமில் ஒரு ஜீனுக்கும் மற்றொரு ஜீனுக்கும் இணைவுறுதல் நிகழும். இணைவுறுதல் என்பது பக்கவாட்டு இணைப்பு மட்டுமே அன்றிச் சேர்க்கை அன்று. இணைவுற்ற இரு குரோமோசோம்களுக்கு இடையே 0.15 - 0.214. இடைவெளி காணப்படும். குறு இழை நிலை. இணையிழை நிலையின் போது இணைவுற்ற குரோமோசோம்கள் சுருங்கிக் குட்டையாகிச் சற்றுத் தடிம் னாக மாறுகிறது. குரோமோட்டிடுகள் தெளிவாகத் தெரியும். குறுஇழை நிலையில் ஒவ்வொரு குரோமோ சோமும் நான்கு குரோமேட்டிடுகள் கொண்டு காணப்படும். இணைவுற்ற குரோமோசோம்களுக்குச் செங்குத்தாக ஒத்திசைந்த குரோமோசோம்களுக்கு டையே பிரிதற்கு ஏற்ற கோடு காணப்படும். ஈரிழை நிலை. இந்நிலை சற்று வேறுபாடுள்ள நிலையாகும். இணையிழை நிலையில் குரோமோ சோம்கள் கவரப்பட்டு நெருங்கியதற்கு எதிர்மாறாக இந்நிலையில் குரோமோசோம்கள் ஒன்றிலிருந்து வைத் ன்று விலகிச் செல்ல முற்படும். குரோமோசோம் களை இரட்டையாக ஒன்றாக இணைத்து திருந்த பொருள் ஒன்றுறைந்துவிட்டாற்போல விலகியும் அதே சமயம் முற்றிலும் விலகாமலும் சில இடங்களில் மட்டும் ஒட்டிக்கொண்டும் காணப்படும். அவ்வாறு ஒட்டிக்கொண்டு காணப்படும் இடங்கள் புள்ளிகள் போல் காணப்படும். அப்புள்ளிகளுக்குக் கையாஸ்மா (chiasma) எனப் பெயர். மேலும் இப் புள்ளிகள் இணைவுற்ற குரோமோசோம்களிடையே மறு சேர்க்கையும், குறுக்கேற்றமும் (crossing over) ஏதுவாக நடைபெற உள்ளன. இப்புள்ளிகளின் எண்ணிக்கை உயிரினத்திற்கு உயிரினம் மாறுபடும். இந்தக் கையாஸ்மா புள்ளிகளில்தான் ஒத்திசைவான குரோமோசோம்களிடையே பகுதிகள் பரிமாற்றம் நடைபெறுகிறது. இதற்குக் குறுக்கே கலத்தல் எனப்பெயர். குறுகல் இழை நிலை. குறுகல் இழை நிலையில் நியூக்ளியோலஸ் மறைகிறது. குறுக்கேற் றங்கள் குரோமோசோம்களின் விளிம்பை அடை யும். ஆதலால் குறுக்கேற்றங்கள் மொத்த எண்ணிக்கையில் குறையத் தொடங்கும்.