குன்றி மணி 241
இந்தியன் லிக்கோரைஸ் என்னும் பெயர் வந்தது. வேரை விட இலையில் இச்சத்து மிகுதியாக இருக்கும். தன்மை குன்றிமணி விதையில் அப்ரின் என்னும் நச்சுப் பொருள் உள்ளது. விதைகள் மிக்க நச்சுத்தன்மை கொண்டவையாகும். விதை ஊறிய நீரும் நச்சுத் கொண்டது. அது கண்ணில் படத் தீங்கு உண்டாகும். விதையின் நச்சுத்தன்மைக்கு இவ் வேதிப் பொருளே காரணமாகும். அப்ரானின் என்னும் பொருளே விதையின் மேல்தோலின் நிறத்திற்குக் காரணமாகும். முன்பு குன்றிமணி விதை களை அணிகலன் எடைபோடுவதற்குப் பயன் படுத்தி வந்தனர். அதாவது ஒரு குன்றிமனி சராசரி யாக 1.75 கிரெய்ன் எடை கொண்டிருக்கும். இந்தியா தவிர, மலேயா, ஜாவா போன்ற நாடுகளில் எடைக்கல்லாகக் குன்றிமணி விதையைப் பயன்படுத்தி வந்துள்ளனர். அழகாக இருப்பதால் இதன் விதை களைக் கழுத்தணி மாலையாகவும் அணிவதுண்டு. குன்றி மணி 8 3 2 6 7 5 14 13 12 10 11 மருத்துவக் குணங்கள். இதன் விதை, இலை முதலியன மருந்துக்குதவும். மிகுந்த நச்சுத்தன்மை கொண்டுள்ள விதையை உள்ளுக்குச் சாப்பிடக் கூடாது. இதன் விதையை அரைத்து வழுக்கைத் தலை, தொடை வாதம், தோள் பிடிப்பு, பாரிசவாயு முதலிய நரம்பு நோய்களுக்குப் பற்றுப் போடலாம். இலைகள் வீக்கம், வாதப்பிடிப்பு முதலிய நோய்களில் வலியைப் போக்க, உதவும். காய்ச்சிய கடுகெண் ணெயில் (mustard oil) இதன் இலைகளை நனைத் தெடுத்து வலியுள்ள இடத்தில் போடலாம். வலி யுள்ள இடத்தில் ஆமணக்கெண்ணெய் தடவிய இலை களை நெருப்பில் வாட்டிப் போடலாம். வலியுள்ள இடத்தில் இலைச்சாற்றை எண்ணெயிற் கலந்து பூசலாம். கொழுப்பைச் செரிக்கக் கூடிய நொதி விதையில் உண்டு. விதையை மருந்தாகவும் பயன்படுத்தலாம். ஆனால் இதைச் சரியாகப் பயன்படுத்தாவிடில் க. 9-16 குன்றி மணி 1. கிளை 2. பேரல்லிகள் 3. 4. சிறகு அல்லிகள் 5. மலர் 6.7. கீழ் அல்லிகள் 8. மகரந்தத்தண்டு 9-11 மசுரந்தங்கள் 12, 13, 14. குல முழுத்தோற்றம், கம் நீள்வெட்டுத் தோற்றம், குறுக்குவெட்டுத்தோற்றம் 241