பக்கம்:அறிவியல் களஞ்சியம் 9.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 குன்று விண்மீன்‌

242 குன்று விண்மீன் கொப்புளங்கள் தோன்றும். அவற்றைக் குணமாக்கு வது மிகக்கடினம். அதனால் தற்கால மருந்துகளில் அப்ரின் சேர்ப்பதில்லை. அக்காலத்தில் கருவைச் சிதைப்பதற்கு விதைகள் பயன்பட்டன என்று தெரி கிறது. இதன் இலையை மென்று, சாற்றை விழுங்கு வதால் குரல் கம்மல் நீங்கும். மார்புநோய், பக்கநோய்களுக்கு அவ்வவ்விடங் களில் விளக்கெண்ணெய் தடவி, குன்றிமணி இலை களை ஒட்டி வைக்க, நோயைத் தணிக்கும், உள் நீரையும் இழுக்கும். இலைச்சாறு 2 பங்கு, கரிசலாங் கண்ணிச்சாறு 4 பங்கு, எண்ணெய் 4 பங்கு இவற்றைச் சேர்த்துக் காய்ச்சித் தலைமூழ்கிவர தலை குளிர்ச்சி அடையும். பச்சைக் குன்றிமணி வேர், வெண்டைக்காய் இவற்றை வகைக்கு 35 கிராம் எடுத்து நன்றாக நசுக்கி 1 லிட்டர் கொதிக்கும் வெந்நீரிலிட்டு, மூடி வைத்து அரைமணி நேரம் கழித்து வடிகட்டிச் சர்க் கரை, கற்கண்டு அல்லது தேன் இம்மூன்றில் ஏதேனும் ஒன்றை 280 கிராம் கூட்டிச் சிறுதீயிட்டு எரித்து, தேன் பதத்தில் இறக்கி வைத்துக்கொண்டு, குழந்தை களின் இருமலுக்கு ஒரு தேக்கரண்டி வீதம் 2 மணிக் கொரு முறை கொடுக்க இருமல் போகும். காய்ச்ச லோடு கூடிய இருமலுக்கு இதில் 20-40மி.லி. வீதம் பெரியவர்களுக்கு 4 மணிக்கொருமுறை கொடுத்தல் நன்று. சி காணும் வெள்ளைக்குன்றிமணி வேரை, வெள்ளாட்டுச் சிறுநீரில் ஊறவைத்து, உலர்த்தி, பாம்பு, தேள் முதலியவற்றின் நஞ்சுக்குக் கொடுக்க உடனே நீங்கும். குழந்தைகள் வாயில் வெள்ளை நிறமாகக் புண்களுக்குக் குன்றிமணியிலையின் சாற்றைச் சிறிது தடவிவிட்டால் குணமாகும். சுக்கு. திப்பிலி, மிளகு மஞ்சள், கறிமஞ்சள், சதகுப்பை. சூடன் இவை யாவற்றையும் ஒரே அளவில் எடுத்துக் குன்றிமணி இலைச்சாற்றால் மைபோல் அரைத்துத் துணியில் தடவித் திரிபோலச் சுருட்டி உலர்த்தித் தீயாற் கொளுத்தி மூக்கில் புகையிடத் தலை நோய் குண மாகும். சுக்கு, உள்ளி வசம்பு, குன்றிப்பருப்பு, கோட்டம். இந்துப்பு,திப்பிலி இவற்றைச் சம நிறையாக எருக் கம் பழுப்புச் சாற்றாலாட்டி நல்லெண்ணெயிற் போட்டுக் காய்ச்சி வடித்துக் காதிலடைத்துவர. காதழற்சி தீரும். மருத்தோன்றி, நீலி, கார்த்திகைக் கிழங்கு, குன்றிமணி, எட்டி, பெருமரத்துப் பட்டை, கஞ்சா. வசம்பு, காயம், வெள்ளுள்ளி இவற்றை அரைத்துப் பூச,பவுத்திரம், கண்டமாலை, விப்புருதி, பிளவை. அரையாப்பு முதலிய வீக்கங்கள் தீரும். குன்றிமணியை அவிரிச்சாற்றிலரைத்து வெள்ளை உதட்டிற்குப் பூச கறுக்கும். B குன்றிமணியிலையும், அதிமதுரமும் சரியா யரைத்து உடம்பிற்பூசி 2 மணி நேரம் பொறுத்து நீரில் குளிக்க அல்லது இரவில் பூசிக் காலையில் குளிக்க கற்றாழை நாற்றம், சொறி சிரங்கு நீங்கும். வெள்ளைக் குன்றிமணி வேரைக் காடி விட்ட ரைத்து 10 நாளைக்கு மார்மேல் தடவி வந்தால் மார்பகம் பெருக்கும். தன் வித்தை உடை டத்து மேல் தோல் நீக்கிச் சன்னமாகப் பொடித்துச் சூரணம் செய்து வேளைக்கு உடல் வலிமைக்கேற்றவாறு 65- 130 மி.கி. வரை வெள்ளாட்டுப் பாலிலாவது பசு வின் பாலிலாவது காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நரம்பு களும் தாதும் வலிமை பெறும். குன்று விண்மீன் காண்க: கும்பம் குஷிங் கூட்டியம் கோ. அர்ச்சுணன் சே.பிரேமா இக்கூட்டியத்தின் அறிகுறிகளுக்குக் காரணம் கார்ட்டி சோல் என்னும் ஹார்மோனை அண்ணீரகப் புறணிக் சுரப்பிகள் மிகுதியாகச் சுரப்பதேயாகும். இவ்வாறு சுரக்கப் பல காரணங்கள் உண்டு. புற்று நோய் போன்ற கட்டிகள் ஏற்பட்டு அவை கட்டுக் சுடங்காமல் கார்ட்டிசோலைச் சுரந்து இந்நோயை உண்டாக்கலாம் அல்லது இச்சுரப்பிகள் முழுதும் இரண்டு பக்கமும் கட்டிகளாக வீங்கிகார்ட்டிசோலை மிகுதியாகச் சுரக்கலாம். ஆனால் மிகவும் சாதாரண மாகக் காணப்படும் குஷிங் கூட்டியத்தில், இரு பக்கச் சுரப்பிகளும் ஒரே மாதிரியாக வீங்கிக் காணப்படும். இவை இவ்வாறு வீங்கக் காரணம், பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து அண்ணீரகப்புறணியை ஊக்கும் ஹார்மோன் அதிகம் சுரப்பதேயாகும். பிட்யூட்டரி இவ்வாறு அதிகம் சுரக்கக் காரணம் ஹைபோதால மஸின் இடைவிடாத தூண்டுதலாக இருக்கலாம் என்று இப்பொழுது கருதப்படுகிறது. சில நேரங்களில் மனிதன் இயல்பாக இயங்கு வதைவிடச் சிறப்பாக இயங்க க வேண்டி வரும். எடுத்துக்காட்டாக நாள்தோறும் காலையில் உணவு அருந்திவிட்டு ஏதேனும் ஒரு வேலையைச் செய்பவர். ஒரு நாள் வெறும் வயிற்றுடன் வேலையைச் செய்ய வேண்டிய நிலைமை வரலாம். அப்பொழுது கார்ட்டி சோல், அட்ரீனலின்,குளுக்ககான் ஆகிய ஹார்மோன் சுரக்காமல் போதிய அளவு சர்க்கரை அவருக்குக் கிடைக்காது.கார்ட்டிசோல், அட்ரீனலின் ஹார்மோன் கள் சுரக்காமையால் அவருக்கு எல்லா உறுப்புகளுக் கும் பாயும் அளவுக்கு இரத்தம் இல்லாமல் போகலாம்.