குஷிங்கூட்டியம் 243
அல்லது இரத்த அழுத்தம் குறைந்தும் போகலாம். அவர் இதயமும் நன்கு இயங்க முடியாமல் போகலாம். அவர் உணவு அருந்தாமலோ போதிய அளவு நீர் குடிக்காமலோ போதிய அளவு ஆக்சி ஜனைச் சுவாசிக்காமலோ இருந்தாலும், கார்ட்டி சோல் போன்ற ஹார்மோன் சுரந்து அவற்றையெல் லாம் சீராக்கிவிடும். இது சண்டை இடுபவர், தப்பித்து ஓடுபவர்,அடிக்கடி எரிச்சல் படுபவரிடம் நிகழ்கிறது. இதிலிருந்து கார்ட்டிசோல் ஒருவர் இரத்தத்தில் சர்க் கரையையும் அழுத்தத்தையும் இரத்தத்தின் அளவை யும் அதிகரிக்கவல்லது என்று தெரிகிறது. எனவே இந் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இரத்த அழுத்தமும், சில நேரங்களில் சர்க்கரையும் மிகுந்தே காணப்படும். அவர் உடல் முழுதும் இரத்தம் நன்றாக விரைவில் பரவுவதால் அவர் சினத்தால் முகம் சிவந்தவர் போலக் காணப்படுவார். சில சமயம் தொடர்ந்து கார்ட்டிசோல் அதி கரித்து இருந்தால், இது உடலை ருக்கி, புரதங் களைச் சர்க்கரையாக மாற்றும் இயல்புடையது. இதனால் இந்நோயாளியின் கை. கால்கள் சூம்பி விடும். கணையத் திட்டுகள் சரியாக இயங்கும் இந் நோயாளிகளில் சிலருக்குச் சர்க்கரை அதிகரிப்பு தில்லை. மாறாக இத்தகைய புரதச் சிதைவால் கிடைக்கும் சர்க்கரை அதிக அளவில் இன்சுலின் ஈரப்பை ஏற்படுத்தி, அதன் விளைவாக உடலின் மையப் பகுதிகளில் கொழுப்பைப் படியச் செய்கிற கிறது. எனவே இந்நோயாளிகள் கை, கால் சூம்பி இருந் தாலும், முகம், கழுத்தின் பின்புறம், வயிறு இவை பருத்துக் காணப்படுவார்கள். புரதங்கள் கரைந்து விடுவதாலும் தோலுக்கு அடியில் கொழுப்பு மிகுவதாலும் வர்களின் முன்கை, வயிறு, தொடை போன்ற பகுதிகளில் சிவப்புநிற விரிசல்கள் தோன்றத் தொடங்கும். சிறு குஷிங்கூட்டியம் 243 குழந்தைகளானால் அவர்கள் வளர்ச்சியும் பாதிக்கப் படலாம். பெண்களானால் மாதவிவக்குத் தடைப் பட்டுப் போகலாம். தேவையில்லா டங்களில் முடி அதிகமாக வளரத் தொடங்கலாம். தலைமுடி கொட்டத் தொடங்கலாம். குஷிங் கூட்டியத்திற்கான காரணத்தைப்பொறுத் துச் சிலருக்குத் தலையிலோ, வயிற்றிலோ கட்டிகள் ருப்பதற்கான அறிகுறிகள் தோன்றலாம். மிகுந்த சோர்வு இவர்களிடம் காணப்படும். இந்நோயின் காரணம் அறிந்து மருத்துவம் செய்தல் வேண்டும். கார்ட்டிசோல் போன்ற மருந்துகளை ஒவ்வாமை போன்ற நோய்களுக்காக அதிகம் உட்கொண்டு இந்நோய் போன்ற தோற்றம் ஏற்பட்டவர்கள், அவற்றை நிறுத்தினாலே போதும். கட்டிகளால் இந் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அக்கட்டிகள் அகற்றப் பட்டவுட டனேயே முழு நலம் தெரியக்கூடும். பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி உள்ளவர்க்கு அக் கட்டிகள் அகற்றப்பட்டவுடனே முழு நலம் தெரியும். பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி உள்ளவர்க்கு அறுவை மருத்துவமோ சுதிரியக்க மருத்துவமோ தேவைப்படலாம். எதற்கும் தகுதியற்ற வயதுடைய அல்லது மிகவும் வலிமை குன்றிய நோயாளிகளுக்கு மருந்துகள் தற்காலிகப் பயன் தரலாம். மருந்துகள் கட்டிகளிடையோ, அண்ணீரகப் புறணியிடையோ ஹைபோதாலமசிடையோ சென்று அவற்றைக் கட்டுப் படுத்த வல்லன. உட்கொள்ளும் வரை வை பலன் தரக்கூடும் என்றாலும் நிலையான பலனை எதிர் பார்க்க முடியாது. எஸ்.என்.தெய்வநாயகம் நூலோதி. Davidson's Principles & Practise of Medicine, Fourteenth Edition, ELBS, Churchill Livingstone, 1984, அ. க. 9-16 அ