260 கூடு கூடாக்கல்
260 கூடுகூடாக்கல் சின்னியா ஆங்குஸ்டிஃபோலியா (zinnia angusti- folia) என்னும் தாவரத்தின் இணைப்பெயர் சின்னியா வினியாரிஸ் (zinnia linearis) ஆகும். நேராக அடர்த்தி யாகப் புதர் போன்று 38 செமீ. உயரம் வளரும். இச்செடியின் இலைகள் நீண்டு ஈட்டி வடிவில் கரும் பச்சையாக இருக்கும். கதிர்ச் சிறு பூக்கள் பளிச் சென்ற ஆரஞ்சு-தங்க மஞ்சள் நிறத்திலிருக்கும். இலைகள் கசப்புடனும் நச்சுத்தன்மையுடனும் இருக்கும். நச்சுத்தன்மைக்கு ஒரு சதவீத அளவில் உள்ள உருவமற்ற பொருள், பொட்டாசிய உப்புகள் மற்றும் சப்போனின்கள்காரணங்களாகும். பூமொட்டு களிலும் இலைகளிலும் ஒரே மாதிரியான கசப்புப் பொருளும் சப்போனினும் இருக்கும். இச்சிற்றினத்தில் 30செமீ உயரமுடைய பெர்ஷியன் கார்பெட் வகையில் பூத்தலை 3.8 செமீ குறுக்களவுடையது. இதன் இரட்டை மலர்களில் இதழ்கள் முனையிலோ ஓரத்திலோ பளிச்சிடும். அழகான நிறங்களைக் கொண்டிருக்கும். அடர் இதில் மற்றொரு வகையான ஓல்டு மெக்சி கோவில் (old mexico 6.3 செமீ விட்டமுடைய இரட்டை மலர்கள் உண்டாகும். மலர்கள் சிவப்பு நிறத்தில் பளிச்சிடும் தங்க விளிம்பைக் கொண் டிருக்கும். இச்செடி 38 செமீ உயரம் வளரும். விதைத்த 6 வாரங்களில் பூக்கும் மெக்சிகன் சுலப் பின வகையில் மலர்கள் சிறியவை. ஒற்றை அல்லது இரட்டை, தங்க ஆரஞ்சு அல்லது வெள்ளை, கருமை யான மையத்தில் இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். இச்செடி 20.5-25.5 செமீ வரை உயரமாக வளரும் தன்மை கொண்டது. கூடுகூடாக்கல் கோ. அர்ச்சுணன் கரைசலில் கரைந்துள்ள திண்ம நிலையிலுள்ள சிறு சிறு துணுக்குகளைச் சேர்த்துப் பெரும் பகுதி களாக உருவாக்கும் முறைக்குக் கூடுகூடாக்கல் {flocculation) எனப் பெயர். கரைசலிலுள்ள முதன் மைத் திரள்பொருள் இயல்பாக வளர்ந்து, நிலை யான பொருளாக மாறுவது அணுத்திரள் (nucleation) எனப்படும். இப்பொருள்கள் தேவையான அளவிற்கு வளர்ந்து ஒளியைச் சிதறும்போது அவை கூழ்நிலைப் பொருள் எனப்படும். கூழ்நிலைக் கரைசலில் கரைந்துள்ள பொருள்கள் நிலையானவை. இப்பொருள்கள் அயனிச் சூழ்நிலையை மாற்றுவதால் கூழ்நிலைப் பொருள் களை மேலும் கூடுகூடாகவோ திரளாகவோ செய்ய முடியும். இதற்குக் கூடுகூடாக்கப்பட்ட கூழான வெள்ளி குளோரைடின் வீழ்படிவு, சிறந்த எடுத்துக் காட்டாகும். இரா. சரசவாணி நூலோதி. E. W. Steel and Terence J. Mcihee. Water Supply and Sewerage, Fifth Edition, McGraw- Hill 1981. Book Company, London. கூடுகைப் பருமன் விதி அவ்வளி வளிமங்களுக்கிடையே வினை நிகழ்கையில் மங்களின் பருமன்களும், அவ்வினையின் விளை பொருள்கள் வளிமங்களாக இருப்பின் அவற்றின் பரு மன்களும் எளிய முழு எண் விகிதங்களில் இருக்கும். து கேலூசக் என்பார் கண்டறிந்த வளிமக் கூடுகைப் பருமன் விதி (law of combining volumes) ஆகும். இவ்விதியின்படியே ஒரு கன அளவு குளோரினும், ஹைட்ரஜனும் இணைந்து இரு கன அளவு ஹைட் ரஜன் குளோரைடையும், ஒரு கன அளவு ஆக்சிஜன் இரு கன அளவு ஹைட்ரஜனுடன் வினையுற்று ஒரு கன அளவு நீரையும், ஒரு சுன அளவு நைட்ரஜனும் மூன்று கன அளவு ஹைட்ரஜனும் இணைந்து ஒரு கன அளவு அம்மோனியாவையும் தருகின்றன. ஒரு அளவு ஆக்சிஜன் எவ்வளவு கார்பனுடன் வினைப்பட்டாலும் ஒரு கன அளவு CO, ஐ மட்டுமே தருகிறது. கண் உயர் இவ்விதி நல்லியல்பு (ideal) வளிமங்களுக்கு மட்டுமே பொருந்துமாதலின் அழுத்தத்தில் தயாரிக்கப்படும் சல்ஃபர் அம்மோனியா, டிரை ஆக்சைடு போன்ற தொழில் முறைகளுக்குப் பயன் படாது. இவ்விதியையும் டால்ட்டனின் அணுக் கொள்கை யையும் இணைத்துப் பெர்சீலியஸ் என்பார் புனைவு கோள் (hypothesis) ஒன்றை உருவாக்கினார். அதையே திருத்தி, விரிவாக்கி அவாகாட்ரோ விதி என்றொரு விதியைக் கண்டறிந்தனர். இவ்விதியின் மூலம் சமவெப்பநிலையிலும் சம அழுத்தத்திலும் கன அளவிலுள்ள வளிம மூலக்கூறுகளின் எண்ணிக்கை சமமாக இருக்கும். க்கூற்று, சமகன எடைக்குப் அளவுக்குப் பொருந்துமேயல்லாமல் சம பொருந்தாது. சம கூடை முடைதல் மே.ரா.பாலசுப்பிரமணியன் இயற்கையில் கிடைக்கும் சிறு குச்சி, புல், நாா. பட்டை, இலை ஆகியவற்றைக் கொண்டு பறவைகள் தம் கூட்டை அழகாகவும், உறுதியாகவும் உள்ளுணர் வால் உருவாக்குவதைப் பார்த்த மனிதன். தான் குடியிருக்கும் வீட்டையும் மெல்லிய குச்சி, கொடி