264 கூடொத்த சேர்மங்கள்
264 கூடொத்த சேர்மங்கள் Rb N C C ஸ்டார்ச் அயோடினுடன் நீலநிற அணைவைத் தரு கிறது. இங்கு I, I,-,I, - என்ற அலகுகள் ஸ்டார்ச் வாய்க்கால்களில் உள்ளன. அயோடினும் பாலி வினைல் ஆல்கஹாலும் இணைந்து இதே போன்ற நீலநிற அணைவைத் தருகின்றன. இச்சேர்மம் கொண்ட படலத்தை நீட்டும்போது இருவண்ணங் (dichroism) காட்டுகிறது. ஒளியைத் திசை நோக்கிப் பாய்ச்சும் தாள்களும், கண்ணாடிகளும் தயாரிப் பதற்கு இது பயன்படுகிறது. பலவளைய உருக் கொண்ட பாலி ஈதர்கள் (கிரௌன் ஈதர்கள்) அவற்றின் நடுவே தோன்றும் இடைவெளியில் சோடியம் அல்லது பொட்டாசியம் சேர்மங்களை உள்ளடக்க இயலுமாதலால், கரிமக் S படம் 1 கரைப்பான்களில் சோடியம், பொட்டாசியம் போன்ற அயனி வகைக் கரைத்தல் எளிதாகிறது. ரூபிடிய அயனியை உள்ளடக்கிய கிரௌன் வடிவம் படம் 1 ல் காட்டப்பட்டுள்ளது சில களிமண் வகைக் கனிமங்களின் படிகங்கள் சிலி கேட் படலங்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கிய வாறு உருவாகியுள்ளன. இவ்வடுக்குகளுக்கு இடை யில் சற்றே இடைவெளி இருக்கக்கூடும். வாய்க்கால் வடிவிலான இந்தக் காலி இடங்களைச் சிறிய ஹைட் ரோகார்பன் மூலக்கூறுகள் நிரப்பலாம். ஹைட்ரோ கார்பன் கலவையிலிருந்து கூறுகளைப் பிரிப்பதற்கு வ்வகைச் சேர்மங்கள் பயனாகின்றன. மூலக்கூற்றுச் |{ !! படம் 2