266 கூந்தற்பனை
266 கூந்தற்பனை தென்னை மரங்கள் உள்ள பாமே குடும்பத்தைச் சேர்ந்தது. இது எல்லா வகை மண்ணிலும் வளரும். இந்தியா, இலங்கை, பர்மா, மலேசியா ஆகிய நாடு களில் இம்மரத்தைக் காணலாம். இந்தியாவில் இது கிழக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தன்னிச் சையாக வளர்ந்துள்ளது. சமவெளியிலும் மலைப் பகுதிகளில் 1200 மீட்டர் உயரம் வரையிலும் இம் மரத்தை வளர்க்கலாம். மரம். தாலமரங்களில் (palm trees) பெரிய லைகளைக் கொண்டது கொண்டது இம்மரமேயாகும். இம் மரத்தின் தண்டு 12-20 மீட்டர் உயரம் இருக்கும். சில சமயங்களில் 30 மீ. உயரமும் வளரும். மரத் தண்டின் குறுக்களவு 30 செமீக்குச் சற்று அதிகமாக வும் இருக்கலாம். மரத்தண்டின் மேற்பரப்பு வழவழப் பாகவும் சாம்பல் நிறமாகவும் இருக்கும். இலை கள் இரட்டைச் சிறகுக் கூட்டிலைகள். கூட்டிலை 5 6 மீ நீளமும் 3 4 மீ அகலமும் கொண்டிருக்கும். சிற்றிலைகள் மீன் வால் போன்று அமைந்திருக்கும். இவை ஆப்பு வடிவமானவை. சிற்றிலைகள் 15-20x 7-10 செ.மீ. அளவானவை. - இலை ஓரம் ஒழுங்கில்லாதவாறு பல்போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். இலைக்காம்பு தடிப் பாக இருக்கும். பாளைகள் மூன்று மீட்டர் நீள மானவை. மஞ்சரிகள் 3 6 மீட்டர் நீளமுடையவை. இவற்றிலுள்ள கிளைப்புகள் மெலிந்தும் வளைந்தும் இருக்கும். இவற்றின் காம்புகள் சிறியவை. இதில் பல இருபால் (monoecious) பூக்கள் தனித்தனியாகக் காணப்படும். பூக்கள் ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் தோன்றும், மரத்தில் காய்களை ஆண்டு முழுதும் காணலாம். பூக்கள் மூன்று மூன்றாக அமைந்திருக் கும். பெண்பூக்கள் இரண்டு, ஆண் பூ ஒன்று என அமைந்திருக்கும். ஆண்பூவில் மூன்று வட்டமான புல்லி இதழ்கள் காணப்படும். அல்லி இதழ்கள் நீண்டும், நீள் சதுர வடிவிலும் இருக்கும். மகரந்தக் கேசரங்கள் 40.. மகரந்தத்தாள்கள் சிறியவை. மகரந்தப்பைகள் 0.8-1.0 செமீ அளவுடையவை. பெண் பூக்கள் சற்று உருண்டையாக இருக்கும். புல்லி இதழ்கள் சற்று அகலமானவை. அல்லி இதழ் கள் வட்ட வடிவமானவை. சூல்பை முக்கோண வடிவில் இருக்கும். இது 6.மி.மீ அளவுடையது. இதில் மூன்று திசுவறைகள் உண்டு. ஒவ்வொரு திசு வறையிலும் ஒவ்வொரு சூல் இருக்கும். சூலக மூடி மூன்றாகப் பிரிந்திருக்கும். பெண் பூவில் 3 மலட்டு மகரந்தக் கேசரங்கள் காணப்படும். காய்கள் உருண் டையாகக் கல் போன்று 2.5 செ.மீ. அளவுடையவை. வை கருமையாக இருக்கும். ஒவ்வொரு காயிலும் ஒன்று அல்லது இரண்டு விதைகள் அடங்கியிருக்கும். பயன்கள். இம்மரத்திலிருந்து கள்ளும் ஜவ்வரிசி யும் தயாரிக்கலாம். இதனைப் பூங்காக்களில் அழகுக் காக வளர்க்கலாம். ஏறக்குறைய 15 ஆண்டுகளில் கார்யோட்டா யூரன்ஸ் முழு வளர்ச்சியடைகிறது. இம்மரம் தொடர்ந்து ஏழாண்டுக் காலம் பூக்களை உற்பத்தி செய்கிறது. பின்னர் மரம் பூங்காக்களுக்கு ஏற்றதாக இருப்ப தில்லை. முதல் பூங்கொத்து, மாபெரும் அளவுடைய தாக மேல் பக்கத்திலுள்ள இலைகளின் க ங்களி லிருந்து கீழ்நோக்கித் தொங்கும், இரண்டாம் பூங் கொத்து அதைவிடச் சற்றுச் சிறியதாக, சற்றுக் கீழே உள்ள இலைக் கக்கங்களிலிருந்து உண்டாகும். இம் முறையில் மரம் முழுதும் பூங்கொத்துகள் கீழ்நோக்கித் தொங்கும். முதிர்ந்த மரங்கள் அழகில்லாமல் தோன் றும். இதன் பூங்கொத்தை விழாக்களில் பந்தல்களை அழகு செய்வதற்குப் பயன்படுத்துவதுண்டு. விதைகளைக் கொண்டு பித்தான்கள், மணிகள் செய்யலாம். இதன் ஓவை எழுதப் பயன்படும். குடை செய்ய உதவும். கூந்தல் பனையின் நார் குறிப்பாக இலை, பூ ஆகியவற்றின் காம்புகளிலிருந்து கிடைக் கும் நார் நீடித்து உழைக்கக் கூடிய கயிறு செய்வ தற்கும் தரமற்ற தூரிகைகள் செய்வதற்கும் வணிக அளவில் பயன்படுகின்றது.