276 கூம்புக் குழல்
276 கூம்புக் குழல் உயர் வெப்பநிலை எரிவினைப் பொருள்கள் தொடர் பறுந்த நிலைக்கு மாறுகின்றன. இம்மாற்றம் கூம்புக் குழலுக்குள் மேலும் ஆற்றல் பரிமாற்றம் ஏற்படச் செய்கிறது. காற்றுச் சுரங்கப் பாதைக் கூம்புக்குழல். இதில் பயன்படுத்தப்படும் கூம்புக்குழல் பாய்மத்தின் வேகத்தை அதிகரிக்கிறது. ஆனால் இதில், மிகு வேக நீர்த்தாரை சீராகவும் ணையாகவும் இருக்க வேண்டும். காற்றுச் சுரங்கப் பாதையிலுள்ள கூம்புக் குழல், குறுகும் பகுதியைக் கொண்டது. பாய்மத்தின் இறுதி வேகம் மிகு ஒலி வேகத்தில் இருந்தால், விரிவடையும் பகுதியும் தேவையாகும். ஆனால் உயர் நீர்த்தாரைக் குழாய்ப் பகுதியில் அழுத்த இழப்புக் குறைவாக இருக்கும் பொருட்டு, ள்ளே நுழையும் பாய்மத்தின் மாக் எண் குறைவாக அமைய வேண்டும். விகித அளவுகள் 10 4 2 2 A/ AL VIV மிகு ஒலிவேக விரிவடைதல் குறுகுதல் M நுழைதல் M வெளியேறுதல் .04 தொண்டைப் பகுதி M=1.0 .02 .01 0 தொண்டைப் பகுதியின் "நிலை PIP 2 படம் 1. மிகு ஒலிவேகக் கூம்புக்குழல் . மிகவும் குறுகிய பகுதி குறு வழி எனப்படும். பொதுவாக, காற்று ஓட்டச் சுரங்கப்பாதையில் கூம்புக்குழலின் குறுக்கு வெட்டுத் தோற்றம் வட்ட மாகவோ. நீள் சதுரமாகவோ இருக்கும். கூம்புக் குழலின் வழியாகச் செல்லும் பாய்மம், வேலையை உண்டாக்குவதோ, வெப்பத்தை வெளியிடுவதோ இல்லை. மேலும் பரப்பில் ஏற்படும் மாற்றம் படிப் படியாக உள்ளது. இக்காரணங்களால் பாய்மத்தின் பண்புக்கும் அவற்றின் வேகத்திற்கும் உள்ள ஒரு பரிமாண இயல்பு வெப்ப (one-dimensional isentropic) உறவுகள், தோராயமாகவே உள்ளன. வெப்ப நிலை. பாய்வுப் பரப்பு, அவ்விடத்திலுள்ள அழுத்தம் அதன் வேகம் ஆகியவை குறுவழிப் பகுதியிலுள்ள இம்மதிப்பு களுக்கு எதிராகக் கட்ட விளக்கப்படத்தில் குறிக்கப் படுகின்றன. இம்மதிப்புகள் மாக் எண்ணின் சார்பு களாகும். இவ்விளக்கப்படத்தில் காற்றிற்கான மாக் எண் (M) முடுக்கத்தின்போது வெப்பநிலை, அழுத்தம் ஆகியவற்றின் தொடர்ச்சியான குறைவைக் காட்டு கிறது. ஆனால் பரப்பு முதலில் குறையவும் பின்னர் அதிகரிக்கவும் செய்யும். வடிவமைப்பின்போது கவனிக்க வேண்டியவை. குறுகும் பகுதியில் வேகம் சீராக அதிகரிக்க வேண்டும். ஆனால் அழுத்தம் அதிகரிக்கக் கூடாது. பரப்புக் குறுகும் அளவு. ஒழுங்காக அமைவதில்லை. குறிப்பிட்ட இடத்தின் மாக் எண் = அவ்விடத் தில் பாய்மத்தின் வேகம்/ஒலியின் வேகம் படம் 2. காற்றின் இயல்பு வெப்பப் பாய்வு (அழுத்தம், வெப்பநிலை, வேகம், பரப்பு ஆகியவற்றின் மாறுபாடு, மாக் எண்ணுடன்) மிகு ஒலிவேகப் பகுதியில் வெளியேறும் பகுதிக் கும், குறுவழிப் பரப்பிற்கும் இடையே உள்ள விகிதம் தேவையான வெளியேற்ற மாக் எண்ணிற்கு ஏற்ப முடிவு செய்யப்படுகிறது. அதிர்வினால் உண்டாகும் தடைகளிலிருந்து விடுபட்ட, சீரான இணையான வெளியேற்றப் பாய்வைப் பெறுவதற்கு விரிவடையும் பகுதி கவளமாக வடிவமைக்கப்பட வேண்டும். பொதுவாக வடிமைத்தல் இரு நிலைகளில் மேற் கொள்ளப்படுகிறது. முதலாவதாக, பிசுபிசுப்பற்ற பாய்விற்கான, கோட்பாட்டியலான சுவர் அமைப்புப் பெறப்படுகிறது. அடுத்து எல்லை அடுக்கில் மேற் கொள்ளும் திருத்தங்கள் கருத்தில் கொள்ளப்பட கூம்புக் குழலின் இறுதிவடிவம் கிடைக்கிறது. வேறு பட்ட வெளியிடு மாக் எண் கிடைக்கும்போது, கூம்புக் குழலின் பயன்பாடு அதிகரிக்கிறது. அச்சமயங்களில், பரப்பு விகிதம், விரியும் பரப்பின் எல்லைக் கோட்டை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றியோ, அவற்றை வளைத்தோ சீராக்கப்படுகிறது. வா. அனுசுயா நூலோதி. M. David Burghardt, Engineering Thermodynamics with Applications, Harper and Row Publishers, New York, 1978.